அதானி அம்பானியைத் திட்டுவது சரியல்ல.. ராகுல் காந்திக்கு சரத் பவார் கொட்டு!

Apr 08, 2023,02:32 PM IST
டெல்லி: தொழிலதிபர்களான முகேஷ் அம்பானி, கெளதம் அதானி போன்றோரை விமர்சிப்பதும், தாக்கிப் பேசுவதும் சரியல்ல. அதானி விவகாத்தில் கூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையுடன் நான் உடன்படவில்லை என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.

என்டிடிவி தொலைக்காட்சிக்கு இதுதொடர்பாக சரத் பவார் விரிவாக பேட்டி அளித்துள்ளார். அதில் காங்கிரஸ் கட்சியையும், ராகுல் காந்தியையும் நேரடியாகவும், மறைமுகமாகவும் அவர் விமர்சித்துள்ளார். சரத் பவாரின் இந்த பேட்டி எதிர்க்கட்சிகள் மத்தியில் குறிப்பாக காங்கிரஸ் கட்சியினரிடையே சலசலப்பையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.



சரத் பவார் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

தனியார் துறையினரை தாக்கிப் பேசுவதை இந்திய அரசியல் கட்சிகள் நீண்டகாலமாகவே கடைப்பிடித்து வருகின்றன. அந்தப் போக்கு மாற வேண்டும். பல ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. நான் அரசியலுக்கு வந்தது முதலே இது நடந்து வருகிறது. அரசுக்கு எதிராக பேச வேண்டும் என்றால் நாங்கள் டாடா பிர்லாவை விமர்சித்துப் பேசுவோம்.  பிறகு டாடாவின் பங்களிப்பு புரிய வந்ததும் அந்தப் பேச்சை நாங்கள் நிறுத்தினோம்.

ஒரு டாடா பிர்லாவோடு தொழில்துறை நிற்காது. நிறை டாட்டாக்களும், பிர்லாக்களும் வருவார்கள்.  இப்போது அதானி - அம்பானி வந்துள்ளனர். இப்போது அவர்களை விமர்சிக்கிறார்கள். தவறான நோக்கத்தோடு விமர்சிப்பதைத் தவிர்க்க வேண்டும். யார் வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் விமர்சிக்கலாம். ஜனநாயகம் அதற்கு அனுமதி தருகிறது. ஆனால் அதில் அர்த்தம் இருக்க வேண்டும்.  எந்தவித அர்த்தமும் இல்லாமல் விமர்சிப்பதை ஏற்க முடியாது.

அரசியல் லாபத்திற்காக அம்பானி - அதானியை எதிர்க்கக் கூடாது, விமர்சிக்கக் கூடாது. பெட்ரோகெமிக்கல் துறையில் அம்பானி நிறைய பங்களிப்பு செய்துள்ளார். நாட்டுக்கு அது தேவையில்லையா? மின்துறையில் அதானி பங்களித்து வருகிறார். அது நமக்கு தேவையில்லையா? நாட்டுக்காக இவர்கள் செய்து வரும் பணியை நாம் புறக்கணிக்கக் கூடாது.

அவர்கள் தவறு செய்தால் கேளுங்கள். விமர்சித்துப் பேசுங்கள். ஆனால் இந்த நாட்டுக்கான அடிப்படைக் கட்டமைப்பை அவர்கள் உருவாக்கியுள்ளனர். எனவே அவர்களை தாக்குவது சரியானது என்பதை என்னால் ஏற்க முடியாது.

அதானி விவகாரம் தொடர்பாக ���ூட்டு நாடாளுமன்றக் குழு விசாரணை வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் கோரிக்கையுடன் நான் உடன்படவில்லை. அதை ஏற்கவில்லை. ஹின்டன்ப்ர்க் அறிக்கை உள்நோக்கம் கொண்டது.  சிலருக்கு இது அரசியல் ரீதியான அவலாக இருக்கலாமே தவிர உண்மை ஒருபோதும் வெளிவராது என்றார் சரத் பவார்.

காங்கிரஸ் கருத்து

அதானிக்கு முழுமையான ஆதரவாக சரத் பவார் பேசியிருப்பது காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் கருத்து தெரிவிக்கையில், அதானி குழுமத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே தொடர்பு இருப்பது உண்மையானது, மிகவும் அபாயகரமானது என்று கருத்து தெரிவித்துள்ளது..

இதுகுறித்து காங்கிரஸ்செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தனிக் கருத்து இருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் இடம் பெற்றுள்ள 20 பேரில் 19 கட்சிகள் அதானி குழுமம் பிரதமர் தொடர்பு குறித்து உறுதியாக உள்ளன. அவர்களின் தொடர்பை அவை நம்புகின்றன. 

இருப்பினும், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட 20 கட்சிகளும் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனச் சட்டத்தையும் பாஜகவின் தாக்குதலிலிருந்து காப்பாற்றும் முயற்சிகளில் ஒருங்கிணைந்து உள்ளன, இணைந்துள்ளன என்றார் அவர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்