அஜித் மகள் பிறந்தநாள்...க்யூட்டான குடும்ப போட்டோக்களை பகிர்ந்த ஷாலினி

Jan 04, 2025,07:14 PM IST

சென்னை: நடிகர் அஜித்- ஷாலினி தம்பதிகளின் மகள் அனோஷ்காவின் 17ஆவது பிறந்தநாளை குடும்பத்துடன் கொண்டாடும் புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. 


தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் நடிகர் அஜித்குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி  ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதி கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில் படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்து வந்தனர். ஏனெனில் நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் இறுதியாக வெளியாகி மூன்று வருடங்கள் ஆகியுள்ளன. இதனால் இந்த வருடம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியாகும் விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி திரைப்படத்தை கொண்டாட தயாராகி வந்தனர். 




இதற்கிடையே விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை வெளியிட்டுள்ளது. அதாவது சில காரணங்களுக்காக விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையின் போது ரிலீஸ் ஆகாது. தள்ளிப்போகிறது என அறிவித்திருந்தது. இதனால் ரசிகர்கள் வருத்தத்துடன் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். 


உச்ச நட்சத்திரங்களாக திகழும் அஜித் மற்றும் ஷாலினி அமர்க்களம் படத்தின் போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு திருமணம் நடைபெற்று தற்போது 23 ஆண்டுகள் ஆகிவிட்டன. இவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர்.


நடிகர் அஜித்தின் திரைப்படங்கள் குறித்த அப்டேட்டுகளுக்காக  ரசிகர்கள் எதிர்பார்த்து வருவது வழக்கம்.ஆனால் நடிகர் அஜித் தனது படங்கள் குறித்து  எந்த ஒரு அப்டேட்டையும் வெளியிடாமல் இருந்து வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதேபோல் தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த எந்தவித அறிவிப்பையும்  வெளியிட விரும்புவதில்லை. இருப்பினும் நடிகை ஷாலினி கடந்த சில ஆண்டுகளாக குடும்பத்துடன் டூர் செல்வது, நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது போன்ற போட்டோக்களை ரசிகர்களுக்காக வெளியிட்டு வருகிறார்.


2022ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் புதிய அக்கௌன்ட் தொடங்கி அதில் கடந்த சில மாதங்களாக தனது குடும்பப் புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறார். இதனை பார்ப்பதற்காகவே ரசிகர்கள் கூட்டம் பலர் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் புது வருட பிறப்பை முன்னிட்டு நடிகர் அஜித் குடும்பத்துடன் வெளிநாடு சென்ற புகைப்படங்களை ஷாலினி பதிவிட்டு இருந்தார். இதற்காக ரசிகர்கள் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர். 


அதேபோல் தற்போது வெளிநாட்டில் இருந்தபடியே தனது மகள் அனோஷ்காவின் 17 வது பிறந்த நாளை கொண்டாடி இருக்கிறார் நடிகர் அஜித். நடிகர் அஜித், நடிகை ஷாலினி, மகன் மகளுடன் கேக் வெட்டும் புகைப்படங்களை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியா முழுவதும் பெறும் வைரலாகி வருகிறது இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்