இசைத்துறையின் உயரிய Grammy Award.. சங்கர் மகாதேவனின் சக்தி இசைக்குழு அசத்தல்!

Feb 05, 2024,12:52 PM IST

வாஷிங்டன்: இசைத்துறையின் உயரிய விருதான கிராமி விருது சங்கர் மகாதேவனின் சக்தி இசைக்குழுவிற்கு கிடைத்துள்ளது.


இசைக்கலைஞர்களுக்கு  உயரிய விருதாக கருதப்படுவது கிராமி விருது. இந்த விருது அமெரிக்காவைச் சேர்ந்த தி ரெக்கார்டிங் அகாடமி சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இசை கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 1951ம் ஆண்டு முதல் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. 


இந்தாண்டிற்கான 66வது கிராமி விருது வழங்கும் விழா பிப்ரவரி 4ம் தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் எஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இசைக்கலைஞர்கள் கலந்து கொண்டனர். பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகளும் வழங்கப்பட்டன.




விழாவில் சிறந்த ஆல்பம் பிரிவில் இந்தியாவை சேர்ந்த சங்கர் மகாதேவனின் சக்தி இசைக்குழுவிற்கு விருது கிடைத்துள்ளது. பாடகர் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், உஸ்தாத் ஜாகிர் உசேன் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ள இக்குழுவினரின் "திஸ் மொமென்ட்"  என்ற ஆல்பத்திற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. 


கடந்த ஆண்டு இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ரிக்கி கேஜ், டிவைன் டைட்ஸ் ஆல்பத்துக்காக சிறந்த ஆடியோ ஆல்பத்திற்கு கிடைத்த நிலையில், இந்தாண்டு சக்தி இசைக்குழுவிற்கு கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கும் கிராமி விருது கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த விழாவில் சங்கர் மகாதேவன் பேசுகையில், எனது குழு, கடவுள், குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் இந்தியாவுக்கு நன்றி. இந்தியாவை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்