குடிநீரில் கழிவுநீர் கலந்ததா.. பல்லாவரத்தில் உயிரிழந்த 2 பேர்.. என்ன காரணம்?.. அமைச்சர்கள் விளக்கம்!

Dec 05, 2024,06:19 PM IST

சென்னை: சென்னை பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்ததில்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இதுகுறித்து அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன் மற்றும்  தா.மோ.அன்பரசன் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.


சென்னை தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டுக்குட்பட்ட பல்லாவரம், காமராஜ் நகர் மலைமேடு பகுதியில் நேற்று குடிநீருடன் கழிவு நீர் கலந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் பயன்படுத்தியுள்ளனர். இதனால் அங்குள்ள பொதுமக்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு, தலைசுற்றல் உள்ளிட்ட பல உடல் உபாதைகள் ஏற்பட்டு அவதியுற்றுள்ளனர்.




உடனடியாக பாதிக்கப்பட்டவர்கள் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சுமார் 20த்திற்கும் அதிகமானோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தனியார் மருத்துவமனையில் 6க்கும் மேற்பட்டோர் என மொத்தம் 32 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.


இதில் திரிவேதி கிருஷ்ணன் மற்றும் மோகன்ராஜ் என்று இருவர் உயிரிழந்துள்ளனர். இன்னொரு பெண்ணும் உயிரிழ்ந்ததாக கூறப்படுகிறது. ஆனால் 2 பேர் மட்டுமே இறந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறுகையில் சம்பந்தப்பட்ட இடத்திலிருந்து குடிநீர் மாதிரி ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது. 3 நாட்களில் முடிவு தெரிய வரும். அதன் பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


2 பேர்தான் உயிரிழந்துள்ளனர். ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 3 பேர் என்று தவறான தகவலை தெரிவித்துள்ளார். எப்போது பார்த்தாலும் பரபரப்பான முறையிலேயே அவர் பேசுகிறார். பதட்டம் ஏற்படுத்தவே அவர் முயல்கிறார். பாதிக்கப்பட்ட 6 இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.


இதற்கிடையே, அமைச்சர் தா.மோ. அன்பரசன், எம்எல்ஏ இ. கருணாநிதி ஆகியோரும் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வீடு வீடாகப் போய் மக்களிடம் பேசினர். பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்த அமைச்சர், உடனடியாக அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பின்னர் செய்தியாளர்களிடம்  அமைச்சர் த.மோ.அன்பரசன் பேசுகையில், பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலக்கவில்லை. குடிநீரில் கழிவுநீர் கலந்திருந்தால் நூற்றுக்கணக்கில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 23 பேருக்குதான் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. 


உடல்நலம் பாதிக்கப்படுவதற்கு முன் அவர்கள் உணவு சாப்பிட்டுள்ளார்கள். உணவுபொருட்களில் கலப்படம் நிகழ்ந்ததாலேயே பலியாகியுள்ளார்கள். இந்த பகுதிகளில் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். உடல்நல கோளாறுக்கான சரியான காரணம் இன்னும் சில  மணி நேரங்களில் தெரிந்து விடும் என்று தெரிவித்துள்ளார்.


எடப்பாடி பழனிச்சாமி அறிக்கை - கண்டனம்


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: தாம்பரம் மாநகராட்சி 13-வது வார்டில் கழிவுநீர் கலந்த குடிநீரை அருந்தியதில் 2 நபர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.


குடிநீர் என்பது மிக அடிப்படையான ஒன்று; அதனை மிகுந்த கவனத்துடன் விநியோகிக்க வேண்டியது அரசின் கடமை. 

புயல் கரையைக் கடந்ததும்,  குடிநீர், கழிவுநீர் குழாய்கள் இடையே எவ்வித கலப்பும் இன்றி முறையாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறதா? என்பதை அரசு உறுதிசெய்திருக்க வேண்டும்.


மெத்தனப் போக்குடன் அதை செய்யாமல் விடுத்து, சுகாதாரமற்ற குடிநீரால் மக்கள் உயிரோடு விளையாடியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.


உயிரிழந்தவர் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்கவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளோருக்கு தக்க சிகிச்சை வழங்கி, அவர்கள் பூரண உடல்நலத்துடன் வீடு திரும்புவதை உறுதிசெய்து, தமிழ்நாடு முழுவதும் உடனடியாக சீரான, சுகாதாரமான குடிநீர் மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதிசெய்யுமாறு திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.


பாஜக அண்ணாமலை கண்டனம்


தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை: சென்னை பல்லாவரம் அருகே, குடிநீரில் கழிவு நீர் கலந்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டு, 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும், 2 பேர் உயிரிழந்திருப்பதும் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவாக நலம்பெற வேண்டும் கொள்கிறேன். 


இது குறித்து கேள்வி எழுப்பிய ஊடகவியலாளர்களிடம், குடிநீரில் கழிவு நீர் கலந்திருந்தால், 300 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருப்பார்கள். ஆனால் 20 பேர் மட்டும்தான் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் மீது தான் தவறு இருக்கிறது என்று பதிலளித்துள்ளார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். குடிநீரில் கழிவு நீர் கலக்கவில்லை என்றால், அமைச்சரும், திமுகவினரும் அந்தப் பகுதியில் வழங்கப்படும் குடிநீரைக் குடிக்க முன்வருவார்களா? 


அதுமட்டுமின்றி, தெருக்களில் ப்ளீச்சிங் பவுடருக்குப் பதிலாக, மைதா மாவு தூவப்பட்டதா என்ற கேள்வியை எழுப்பிய ஊடக சகோதரரிடம், ப்ளீச்சிங் பவுடர் விலை ரூ. 10 - 13 தான் என்கிறார் அமைச்சர் தா.மோ.அன்பரசன். ஆனால், ப்ளீச்சிங் பவுடரை ஏன் ரூ.55க்கு மாநகராட்சி கொள்முதல் செய்திருக்கிறது என்ற ஊடக சகோதரரின் கேள்விக்கு அமைச்சரிடம் பதில் இல்லை.


எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என, மக்கள் நலன் குறித்த அக்கறை சிறிதும் இன்றிச் செயல்படும் இந்த மக்கள் விரோத அரசால், அப்பாவி பொதுமக்கள் தினம் தினம் உயிரிழப்பு வரை பாதிக்கப்பட்டும், சிறிதும் வெட்கமே இன்றி, திராவிட மாடல் அரசு என்று விளம்பரம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, உண்மையில் கள நிலவரங்கள் தெரிவிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி வலுப்படுகிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!

news

அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!

news

கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!

news

தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!

news

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!

news

அது மட்டும் பண்ணாதீங்க...அமைச்சர்களுக்கு முதல்வர் கொடுத்த அட்வைஸ்

news

குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா..? குடியரசு துணைத் தலைவர் ஜக்தீப் கேள்வி..!

news

பூஜ்ஜிய நிழல் தினம்... பொதுமக்களுக்கு அறிவியல் விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்!

news

குழாய் மூலம் வீடுகளுக்கு எரிவாயு வழங்கும் திட்டம்... 9 மாவட்டங்களுக்கு அனுமதி!

அதிகம் பார்க்கும் செய்திகள்