ஜப்பானை புரட்டிப் போட்ட பனிப்புயல்... 12 பேர் பலி.. ஆளுயரத்திற்கு குவிந்து கிடக்கும் பனி!

Feb 15, 2025,05:40 PM IST

டோக்கியோ: ஜப்பானில் கடுமையாக வீசி வரும் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.


ஜப்பானில் இந்த மாதம் தொடங்கியதில் இருந்து கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது. அங்குள்ள வடக்கு மாகாணங்களான புகுஷிமா, சிமானே, யமகட்டா, டோயோமா உள்ளிட்ட இடங்களில் கடும் பனிபுயல் நிலவுகிறது. இதனால் குறிப்பிட்ட நேரங்களில் பேருந்து சேவை மற்றும் ரயில் சேவை தடை செய்யப்பட்டுள்ளது. 


அதேவேளை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்குள்ள பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. வகுப்புகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டு வருகின்றன. வெளியில் தலை காட்ட முடியாத அளவுக்கு பனி குவிந்து கிடக்கிறது. 




ஜப்பானில் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதினால் அங்குள்ள ஒரு பகுதியான ஆரோமி நகரில் பனி புயல் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 4 அடி அளவுக்கு சாலைகளில் பனிபடர்ந்துள்ள நிலையில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 


மேலும், இதன்  காரணமாக ஆரோமி நகரில் போக்குவரத்து முடங்கியுள்ள நிலையில், சாலைகள் மற்றும் ஆங்காங்கே உள்ள பனியை அப்புறப்படுத்து பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், ஜப்பானில் பனிப்புயலில் சிக்கி ஒரு வாரத்தில் 12 பேர் உயிரிழந்து உள்ளதாக ஜப்பான் உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நல்லவன் வந்தா எரிச்சல்தானே வரும்.. இது பண்ணையார்களுக்கான கட்சி கிடையாது ப்ரோ.. விஜய் அதிரடி

news

விஜய் தமிழ்நாட்டின் நம்பிக்கை.. அடுத்த ஆண்டு ஆட்சியைப் பிடிப்பார்.. பிரஷாந்த் கிஷோர் பேச்சு

news

யார் பண்ணையார்?... விமர்சனங்களை அப்படியே திருப்பிப் போட்டு.. விஜய் கொடுத்த நச் பதில்!

news

பொய் சொல்லி தமிழ்நாட்டு மக்களுக்கு துரோகம் செய்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உள்துறை அமைச்சர் அமித் ஷா

news

என்னை ஆஸ்தான பாடகியாக விஜய் அறிவிக்கட்டும்.. அப்புறம் பாருங்க.. கிடாக்குழி மாரியம்மாள் உற்சாகம்!

news

இனி என் செயல்பாடுகளும் கோட்பாடுகளும் தளபதி வழியில்.. தவெகவில் இணைந்த ரஞ்சனா நாச்சியார்!

news

தவெக ஆண்டு விழாவில் பிரசாந்த் கிஷோர்... இதை யாருமே எதிர்பார்க்கலியே... என்னவா இருக்கும்?

news

அனைத்துக் கட்சிக் கூட்டம்.. அதிமுக, தவெக, நாதக உள்பட 45 கட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு!

news

தவெகவின் முதலாண்டு விழா கோலாகல தொடக்கம்.. பிரஷாந்த் கிஷோருடன் மேடை ஏறிய விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்