பல பெண்களை சீரழித்து விட்டார்.. தேவெ கெளடா பேரன் மீது பரபரப்பு புகார்.. விசாரணைக்கு உத்தரவு!

Apr 28, 2024,11:09 AM IST

பெங்களூரு: உதவி கேட்டு வந்த பல பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி சீரழித்து விட்டார் என்று முன்னாள் பிரதமர் தேவே கெளடாவின் பேரனும், முன்னாள் கர்நாடக அமைச்சர் ரேவண்ணாவின் மகனும், ஹசன் தொகுதி எம்.பியுமான பிரஜ்வால் ரேவண்ணா மீது பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது. இதுகுறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார்.


இதுகுறித்து முதல்வர் சித்தராமையா கூறுகையில், பிரஜ்வால் ரேவண்ணா மீது எழுந்துள்ள புகார்கள் குறித்த விசாரிக்க சிறப்பு புலனாய்வுநக் குழுவை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஹசன் மாவட்டத்தில் பிரஜ்வால் ரேவண்ணா குறித்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகின்றன. பெண்கள் பாலியல் ரீதியாக தவறாக பயன்படுத்தப்பட்டிருப்பதை இது உறுதி செய்கிறது என்று முதல்வர் கூறியுள்ளார்.


கர்நாடக மகளிர் ஆணையத்துக்கு வந்த புகார்களைத் தொடர்ந்து, விசாரணை நடத்துமாறு அரசுக்கு மகளிர் ஆணையம் கோரிக்கை வைத்தது. அதன் பேரில் தற்போது இந்த சிறப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.


நாட்டை விட்டு வெளியேறிய பிரஜ்வால்




இதற்கிடையே, தன் மீது எழுந்த புகார்கள் மற்றும் விசாரணையைத் தொடர்ந்து பிரஜ்வால் ரேவண்ணா நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக காவல்துறையை மேற்கோள் காட்டி டெக்கான் ஹெரால்ட் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது.


முன்னதாக பிரஜ்வால் ரேவண்ணா தன்னிடம் உதவி கேட்டு வந்த பெண்களை பாலியல் ரீதியாக பயன்படுத்தி, அவர்களுடன் வீடியோ காலில் பேசி ஆபாச வீடியோக்களைப் பதிவு செய்து அவர்களை மிரட்டியதாக சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பாக பல்வேறு வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வலம் வரத் தொடங்கின. இதனால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் பல பெண்கள் புகார்களும் கொடுத்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த பரபரப்பால் தற்போது தேவெ கெளடா குடும்பம் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.


தேவெ கெளடாவின் மூத்த மகனான ரேவண்ணாவின் மகன்தான் பிரஜ்வால். ஹசன் தொகுதியில் நாடாளுமன்ற உறுப்பினராக அவர் இருந்து  வருகிறார். தற்போது நடந்துள்ள தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஹசன் தொகுதியில் மீண்டும் பிரஜ்வாலே போட்டியடுகிறார்.


சாதாரணமான புகார் அல்ல




பிரஜ்வால் மீதான புகார்கள் குறித்து கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் கூறுகையில்,  இது சாதாரணமான புகார் அல்ல. மிக மிக சீரியஸானது. பிரதமர் பதிலளிக்க வேண்டும். விஜயேந்திரா எதியூரப்பா பதிலளிக்க வேண்டும். ஷோபா, குமாரசாமி ஆகியோர் பதிலளிக்க வேண்டும். மக்களுக்கு விளக்கம் தர வேண்டும். அவர்களது இமேஜை கெடுக்க மகளிர் ஆணையம் முயல்வதாக அவர்கள் கூறியதாக கேள்விப்பட்டேன். வீடியோக்களைப் பாருங்கள். பார்த்து விட்டு விளக்கம் கொடுங்கள். ஊடகங்களும் இதுகுறித்து நிறைய செய்தி வெளியிட்டுள்ளன. மக்களும் இதைப் பார்த்துள்ளனர். எனவே விளக்கம் தர வேண்டியது அவர்களது கடமையாகும் என்றார்.


சர்ச்சைக்குரிய பிரஜ்வால் ரேவண்ணா போட்டியிட்டுள்ள ஹசன் தொகுதியில் 26ம் தேதிதான் வாக்குப்பதிவு நடந்தது என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்