வரலாறு படைக்கப் போகும் செப்டம்பர்.. தினசரி மழை பெய்யும்.. தமிழ்நாடு வெதர்மேன்

Sep 17, 2023,10:12 AM IST

சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களை நேற்று வெளுத்து வாங்கிய மழை செப்டம்பர் மாதம் முழுவதும் தினசரி நீடிக்க வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


வட தமிழ்நாடு மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. மாலைக்கு மேல் பலத்த இடி மின்னலுடன் காற்றுடன் கன மழை கொட்டித் தீர்த்தது. ராணிப்பேட்டை முதல் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. அதேபோல இரவிலும் நல்ல மழை இருந்தது.


திருவள்ளூர், விழுப்புரம், வட தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களிலும் 100 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்துள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இந்த மழை இந்த மாதம் முழுவதும் நீடிக்க வாய்ப்பிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் போட்டுள்ள லேட்டஸ்ட் டிவீட்டில்,  சென்னை மற்றும் வட தமிழ்நாடு முழுவதிலும் செப்டம்பர் மாதம் வரலாறு படைக்கப் போகிறது. இந்த மாதம் முழுவதும் தினசரி அடிப்படையில் மழையை எதிர்பார்க்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.


மேலும் இன்று  வட தமிழ்நாடு மட்டுமல்லாமல், கடலூர், காவிரி டெல்டா, மதுரை, சிவகங்கை,  புதுக்கோட்டை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம் என்றும் வெதர்மேன் தெரிவித்துள்ளார்.


சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கடும் வெப்பமும், புழுக்கமும் நிலவி வந்த நிலையில் தற்போது மழை பெய்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அதேசமயம், பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள், கால்வாய் தோண்டும் பணிகள் தொடர்ந்து கொண்டிருப்பதால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்று மக்களை சிரமப்படுத்துகிறது. அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வட கிழக்கு பருவ காலம் வேகமாக நெருங்கி வருவதாலும், இப்போதே மழை பெய்யத் தொடங்கி விட்டதாலும் இதில் அரசு போர்க்கால நடவடிக்கையில் இறங்க வேண்டியது அவசியமாகும்.


சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்