செப்டம்பர் 20.. தயவு செஞ்சு அன்னிக்கு இதுல ஏதாவது ஒரு படத்தை மறக்காம பாருங்க.. சூப்பர்ப் லிஸ்ட்!

Sep 14, 2024,01:20 PM IST

சென்னை:  வருகிற செப்டம்பர் 20ஆம் தேதி தமிழ் சினிமாவுக்கு முக்கியமான நாளாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. காரணம், சிறந்த படைப்புகள் சில அன்றுதான் திரைக்கு வருகின்றன.


கிட்டத்தட்ட  10 தமிழ் திரைப் படங்கள், செப்டம்பர் 20ம் தேதியன்று வெளியாக உள்ளன.  இயக்குநர் சீனு ராமசாமி, சசிக்குமார், ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோரின் படங்களும் அதில் அடக்கம். அதைப் பற்றி இப்போது பார்க்கலாமா.


கடைசி உலகப் போர்: 




ராப் பாடகராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி குறைந்த காலத்திலேயே மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இதனைத் தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிகராகவும் அவதாரம் எடுத்தார். இந்த நிலையில் தற்போது ஹிப் ஹாப் தமிழா ஆதி நடித்து இயக்கி தயாரித்து எழுதி உள்ள திரைப்படம் கடைசி உலகப் போர் படம். இப்படம் போர்க்களத்தில் ஏற்படும் கொடுமைகளை அழுத்தமாக சொல்லும் திரைப்படமாக உருவாகியுள்ளது. ஏனெனில் இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இதில்  போர் வலிகளை மையப்படுத்தும் வகையில் இடம்பெற்ற காட்சிகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படம் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் தற்போது படத்தின் வெளியீட்டிற்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்து வருகின்றனர்.


லப்பர் பந்து: 




கிரிக்கெட் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள லப்பர் பந்து படத்தை பிரிண்ட்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் தமிழரசன் பச்சை முத்து எழுதி இயக்கியுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டகத்தி தினேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களுடன் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன், காளிமுத்து மற்றும் பல நடித்துள்ளனர். செப்டம்பர் 20ஆம் தேதி வெளியாக உள்ள ரப்பர் பந்து திரைப்படத்தின், ட்ரெய்லர் மற்றும் ஒரு பாடல் ஏற்கனவே வெளியாகி கிரிக்கெட் ரசிகர்களுக்கு உத்வேகம் கொடுக்கும் வகையில் இப்படம் அமைந்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தோனிமா:


எளிய மக்களின் வாழ்வை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் தான் தோனிமா.  கட்டடக் கூலி தொழிலாளியாக வேலை பார்க்கும் காளி வெங்கட் இப்படத்தில் தீவிர கிரிக்கெட் ரசிகராக நடித்திருக்கிறார். இதனால் தனது மகனுக்கு கிரிக்கெட் ரசிகரின் பெயரை சூட்டிகிறார். இதில் ஒரு நாயும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாம். இப்படத்தை ஜெகதீசன் சுப்பு இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பாக்கியராஜ் சஜித் குமார் ஒளிப்பதிவு செய்ய ஜான்சன் இசையமைத்துள்ளார்.


நந்தன்: 




தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் அறிமுகமாகி முதல் படத்திலேயே மக்களின் கவனங்களை ஈர்த்தவர் தான் சசிகுமார். இதனைத் தொடர்ந்து இவரின் எதார்த்தமான நடிப்பால் உருவான நாடோடிகள், சுந்தரபாண்டியன், குட்டி புலி, ஆகிய படங்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் வெளியான கருடன் திரைப்படம் வெற்றி பெற்ற நிலையில், இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த  சசிகுமாரின் நடிப்பும் பாராட்டப்பட்டது.


இந்த நிலையில் உடன்பிறப்பே படத்தை இயக்கிய ரா.சரவணன் நந்தன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் சசிகுமார் நடித்துள்ளார். இவருடன் ஸ்ருதி பெரியசாமி மற்றும் பாலாஜி சக்திவேல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. இதில் சசிகுமார் அழுக்கு படிந்த சட்டை, ஷேவ் செய்யாத தாடி என இதுவரை பார்க்காத தோற்றத்தில் நடித்து இருக்கிறார்.


சட்டம் என் கையில்: 




காமெடியனாக இருந்து ஹீரோவாக மாறியுள்ள சதீஷ் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் சட்டம் என் கையில். இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. கொலை செய்தது யார் என்ற கோணத்தில் சஸ்பென்ஸ் திர்லராக இப்படத்தின் டீசர் அமைந்துள்ளது. ஒரு காமெடியனாக திரையில் தோன்றிய சதீஷ் தற்போது திரில்லர் திரைப்படத்தில் நடித்திருப்பது ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சாச்சி இயக்கத்தில் நடிகர் சதீஷ் உடன் சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.


தோழர் சேகுவாரா:


எந்தப் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதற்கு ஏற்றாற்போல் தன் நடிப்பின் திறமையால்  ரசிகர்களை கவரக்கூடிய அசாத்தியமானவர் நடிகர் சத்யராஜ்.இவர் தற்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேகத்தில் நடித்து வருகிறார். அந்த வரிசையில் சத்யராஜ் நடித்துள்ள திரைப்படம் தான் தோழன் சேகுவாரா.


இவருடன் இணைந்து ரஜேந்திரன், நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ், அலெக்ஸ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு பி எஸ் அஸ்வின் இசையமைத்துள்ளார். அதிகார வர்க்கத்தினருக்கும் தொழில் வர்க்கத்தினருக்கும் இடையே நடக்கும் பாகுபாடுகளை சொல்லக்கூடிய படமாக உருவாகியுள்ளது.


கோழிப்பண்ணை செல்லத்துரை:




சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள கோழிப்பண்ணை செல்லத்துரை திரைப்படத்தில் நாயகன் ஏகன் அறிமுகமாகியுள்ளார். இவருடன் யோகி பாபு,சம்பதா, அஜய் ராஜ், பவல் நவகீதன், வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்விகா தமிழ்செல்வி, கஜராஜ், பாவா செல்லதுரை, ஆர். ராம்தாஸ், வெண்பா, ஜீவா ரவி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் பி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். என். ஆர் ரகுநந்தன் இசையமைத்துள்ளார்.


வாழவே பிடிக்கவில்லை. வாழ்க்கை என்னை கைவிட்டு விட்டது. எனக்கு யாருமே இல்லை என கூறுபவர்களுக்கு இப்படத்தில் ஒரு செய்தி இருப்பதாக இப்படத்தின் இயக்குனர் சீனு சாமி இசை வெளியீட்டு விழாவில் தெரிவித்துள்ளார். இதனால் இப்படத்தின் வெளியீட்டிற்கு எதிர்பார்ப்பு நீடித்து வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

AIADMK.. கள ஆய்வுக் கூட்டங்களில் தொடர்ந்து மோதல்.. வெடிக்கும் தொண்டர்கள்.. திகைப்பில் தலைமை!

news

Lunch box recipe: கோவக்காய் வேர்க்கடலை பொறியல்.. ஒரு விசில்.. ஒரு பொறியல்.. ஓஹோ டேஸ்ட்!

news

Special Story: சிங்கம் கழுகு கூட்டணியா.. சிலாகிக்கும் NTK.. சீமான் விளக்கம்.. ரஜினி சந்திப்பு ஏன்?

news

ரஜினியை சீமான் சந்தித்து விட்டு வந்த மறு நாளே.. கோவை வடக்கு நாதக நிர்வாகிகள் கூண்டோடு விலகல்!

news

Drumsticks price.. என்னடா இது.. முருங்கைக்கு வந்த கிராக்கி.. விர் விலை உயர்வு.. இல்லத்தரசிகள் கவலை!

news

Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!

news

வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்

news

ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)

news

நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்

அதிகம் பார்க்கும் செய்திகள்