செந்தில் பாலாஜிக்கு  பெரிய நோயெல்லாம் இல்லை.. ஜாமீன் தர மறுத்து கைவிரித்தது சுப்ரீம் கோர்ட்!

Nov 28, 2023,06:59 PM IST
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு  பெரிய நோய் இல்லை. மூளை பாதிப்பு குறித்து கூகுளில் தேடி பார்தேன். மருந்து எடுத்துக் கொண்டால் சரியாகிவிடும். எனவே மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் தர முடியாது  என்று  கூறி அவருக்கு ஜாமீன் தர மறுத்து விட்டது சுப்ரீம் கோர்ட்.

சட்டவிரோத பரிவர்த்தனை வழக்கில்  கடந்த ஜூன் மாதம் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். அவரை நீதிமன்ற காவல் சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில் அவருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதய பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அங்கேயே அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இரு முறை மனு செய்தார். அது டிஸ்மிஸ் ஆனது. பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்தார். அங்கும் கிடைக்கவில்லை. இதையடுத்து உச்சநீதிமன்றத்தை அணுகினார். வழக்கை விசாரித்த கோர்ட், செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கைகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அத்துடன் வழக்கு விசாரணையை இன்றைய தேதிக்கு தள்ளி வைத்தது.



இதற்கிடையே செந்தில் பாலாஜியின் உடல் நலப் பிரச்சினைகள் தொடர்பான மருத்துவ அறிக்கைகள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டன.  மருத்துவ அறிக்கையில், அவருக்கு பித்தப்பையில் கற்கள் இருப்பதாகவும், உணவு உட்கொள்வதால் அது குறையும் என்றும், இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் கால்சிய படிவு உள்ளதாகவும்  மருத்துவ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  மூளைக்கான எம்.ஆர்.ஐ பரிசோதனையில் வலதுபுறத்தில் பாதிப்பு இருப்பது  கண்டறியப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் முதுகெலும்பில் வீக்கம் உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. 

இந்த நிலையில் இன்று ஜாமீன் மனு மீதான விசாரணை  நடைபெற்றது.  வழக்கு விசாரணையின் போது, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது என அவரது தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால், மருத்துவ காரணங்கள் அடிப்படையில் ஜாமின் வழங்க முடியாது என உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து விட்டது.  இதுதொடர்பாக உத்தரவு பிறப்பித்து நீதிபதி கூறுகையில், செந்தில் பாலாஜியின் உடல்நிலை பாதிப்பு குறித்து கூகுளில் தேடிப் பார்த்தேன். மருந்து எடுத்துக் கொண்டால் அது சரியாகி விடும். சரி செய்யக்கூடிய பிரச்சினைதான் அது.  இன்று பைபாஸ் சிகிச்சை எல்லாம் சாதாரண அறுவை சிகிச்சை போன்றது. எனவே, மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் தர முடியாது என்று கூறி விட்டார்.

இதையடுத்து, மருத்துவ ஜாமீன் மனுவை திரும்பப் பெற்று, வழக்கமான ஜாமீன் மனு தாக்கல் செய்ய செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை வைத்தது. அதற்கு அனுமதி அளித்த உச்ச நீதிமன்றம், வழக்கமான ஜாமீன் கோரி விசாரணை நீதிமன்றத்தை அணுகுமாறும், அங்கு ஜாமீன் நிராகரிக்கப்பட்டால், உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளது. 

இதற்கிடையே, செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் டிசம்பர் மாதம் 4ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டுள்ளார்.

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்