மூத்த காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் ஐசியு.,வில் அனுமதி.. தீவிர சிகிச்சை

Nov 28, 2024,06:48 PM IST

சென்னை : தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 


ஈரோடு வெங்கட கிருஷ்ணசாமி சம்பத் இளங்கோவன் என்ற இயற்பெயர் கொண்டவர் தமிழக அரசியலில் ஈவிகேஎஸ் இளங்கோவன் என அனைவராலும் அறியப்படுகிறார். லோக்சபா எம்பி., மத்திய அமைச்சர் உள்ளிட்ட பல பதவிகளை வகித்த இவர் ஈவேரா பெரியாரின் சகோதரர் கிருஷ்ணசாமியின் பேரன் ஆவார். 2019ம் ஆண்டு சத்தியமங்கலம் தொகுதி எம்எல்ஏ.,வாகவும் இவர் இருந்துள்ளார்.




ஈரோடு கிழக்கு தொகுதியை காங்கிரசின் கோட்டையாக மாற்றி வைத்திருந்த இளங்கோவன், 2021ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை தேர்தலில் தனது ஈரோடு கிழக்கு தொகுதியில் தன்னுடைய மகன் திருமகன் ஈரேவா.,வை போட்டியிட வைத்தார். ஆனால் உடல்நலக்குறைவால் அவர் திடீரென உயிரிழந்ததால் அந்த தொகுதிக்கு நடந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் தானே போட்டியிட்டு, வெற்றியும் பெற்றார். 


தேர்தல் களத்தில் பல தோல்விகளையும், சில வெற்றிகளையும் பெற்ற ஈவிகேஎஸ் இளங்கோவன் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ.,வாக இருந்து வருகிறார். 75 வயதாகும் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஏற்கனவே இதயத்தில் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சமீத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு, உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதால், அவர் உடனடியாக ஐசியு.,விற்கு மாற்றப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வென்டிலேட்டர் மூலம் அவருக்கு சுவாசம் தரப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவனை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  இன்று நேரில் சென்று சந்தித்து நலம் விசாரித்துள்ளார். அவரைத் தொடர்ந்து தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகையும் மருத்துவமனை சென்று ஈவிகேஎஸ் இளங்கோவனை சந்தித்து வந்துள்ளார். பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செல்வ பெருந்தகை தான், ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, ஐசியு.,வில் அனுமதிக்கப்பட்ட தகவலை பகிர்ந்துள்ளார்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!

news

நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!

அதிகம் பார்க்கும் செய்திகள்