கேஸ் விலையேற்றம்.. தவெக தலைவர் விஜய்க்கு டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி!

Apr 08, 2025,04:28 PM IST

சென்னை: விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன? பாமர மக்களுக்காக நடிக்கிறேன். குறைந்த விலையிலோ இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே? என்று விஜய்யின் அறிக்கைக்கு பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.


இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் பேசுகையில், விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன? பாமர மக்களுக்காக நடிக்கிறேன். குறைந்த விலையிலோ இலவசமாகவோ டிக்கெட் கொடுக்கிறேன் என இருக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்? உங்களுக்கு லாபமென்றால் பேசமாட்டீர்களா? ஒன்றும் தெரியாமல் விஜய்  போன்றோர் பேச வேண்டாம். விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும், வசனம் பேசவும், நடனமாடவும் ஏமாற்றவும் தான் தெரியும். அரசியலோ பொருளாதாரமோ தெரியாது.




கேஸ் விலை 50 ரூபாய் உயர்த்தப்பட்டதை திரும்ப்பபெறுமாறு மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவிருக்கிறோம்.  சர்வதேச சந்தையில் 60 சதவிகிதத்துக்கு மேல் கேஸ் விலை ஏற்றம் செய்யப்பட்டதால், இந்த விலையேற்றம் நிகழ்ந்துள்ளது. அதோடு ஒப்பிடுகையில் இந்த கேஸ் விலையேற்றம் மிக மிக குறைவானதே. இருப்பினும் விலையை குறைக்க வலியுறுத்துவோம்.


பிரதமர் மோடி ஒன்று செய்தார் என்றால் பொத்தாம் பொதுவாக செய்யமாட்டார். மகளிர் தினத்தில் மகளிர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று  கேஸ் விலை ரூ.100 குறைத்தார். சர்வதேச சந்தையில் 62 சதவிகிதத்துக்கு மேல் கேஸ் விலை ஏற்றமடைந்ததால் இன்று மிகக்குறைந்த அளவே ஏற்றியிருக்கிறார். ஆனால், அந்த விலையேற்றமும் வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை வைக்க இருக்கிறோம் என்று பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

10 வருடங்களுக்கு பிறகு‌‌.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!

news

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்

news

அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!

news

முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி

news

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு

news

காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!

news

யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!

news

வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!

news

இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!

அதிகம் பார்க்கும் செய்திகள்