உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது: பாஜக மூத்த தலைவர் தமிழிசை

Mar 10, 2025,05:57 PM IST

சென்னை:  அன்றாட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்... உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என்று  பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.


இது குறித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்ட எக்ஸ் தள பதிவில், தமிழக முதலமைச்சர் அண்ண ஸ்டாலின் அவர்கள் திமுக  பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏழு மாநிலங்கள் தலைவர்களை சென்று சந்திப்பார்கள் என்றும், அதற்காக 7 மாநிலங்கள் செல்ல வேண்டும் என்றும் நேற்றைய அவர்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சொல்லியிருக்கிறார். முதல்வர் அவர்களே முதலில் உங்கள் பாராளுமன்ற உறுப்பினர்களை அவரவர்களின் பாராளுமன்ற தொகுதிக்கு ஒழுங்காக செல்ல சொல்லுங்கள். ஓட்டளித்த மக்களுக்கு நன்றி கூட  சொல்ல அவர்கள் தங்கள் தொகுதிக்கு செல்லவில்லை..  




திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதி மக்களை கூட சந்திப்பதில்லை. அவர்களை நீங்கள் மற்ற மாநில முதல்வர்களை சந்திக்க சொல்கிறீர்கள். முதலில் வாக்களித்த பாராளுமன்ற மக்களை சந்திக்க சொல்லுங்கள் பின்பு மற்ற மாநில மக்களை சந்திக்கலாம் . முதலில் தங்கள் பாராளுமன்ற தொகுதியில் உள்ள  பிரச்சனைகளை பேச சொல்லுங்க. பின்பு தொகுதி வரையறை பற்றி பேசலாம்... தமிழகத்தில் தீர்க்கப்படாத மக்கள் பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க.  


இல்லாத ஒரு பிரச்சினையைப் பற்றி கூட்டம் நடத்தி வேறு மாநிலங்களுக்கு செல்ல சொல்கிறீர்கள்.. மரியாதைக்குரிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் தொகுதி வரையறையில்  தமிழகம் எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று சொன்ன பின்பும்.... அன்றாட தமிழ் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும் பல பிரச்சனைகளை மறைப்பதற்கு இந்தப் பிரச்சினையை கையில் எடுத்திருப்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள்... உங்கள் இரட்டை வேடம் தமிழக மக்களிடம் எடுபடாது என்று தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

சென்னையில் விட்டு விட்டு வச்சு செய்யும் கனமழை .. 4 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்!

news

நாடாளுமன்ற வளாகத்தில் 2வது நாளாக மத்திய அரசை கண்டித்து.. தமிழக எம்பிக்கள் கண்டனம் முழக்க போராட்டம்!

news

தமிழ்நாட்டில் மீண்டும் கம்பேக் கொடுத்த மழை.. இன்றும், நாளையும் பரவலாக மழை.. தமிழ்நாடு வெதர்மேன்!

news

ஐ.பி.எல் விளம்பரம் பாமகவிற்கு கிடைத்த வெற்றி.. பாமக தலைவர் அன்புமணி பெருமிதம்..!

news

Power of Biryani.. டி.எம்.எஸ்-ஸோட வெண்கலக் குரலின் ஈர்ப்புக்கு காரணம் என்ன தெரியுமா??

news

மதுபான ஊழல்.. காலையிலேயே அண்ணாமலை போட்ட X குண்டு.. என்ன சொல்ல வருகிறார்?

news

மொரீசியஸில் பிரதமர் நரேந்திர மோடி.. ராணுவ மரியாதையுடன் உற்சாக வரவேற்பு!

news

இந்தக் கொசுத் தொல்லை தாங்க முடியலப்பா.. கவலைப்படாதீங்க...இயற்கை முறையில் ஈஸியா விரட்டலாம்!

news

முதலீட்டாளர்களுக்கு முதல் முகவரி தமிழகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்