சென்னை: நீதி கேட்டு போராடிய கண்ணகியின் மண்ணில்.. பெண்கள் நீதி கேட்பதற்கு தடை விதிக்கும் திமுக அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அளவிற்கு பெண்களிடம் பாராபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்று பாஜக மூத்த தலைவர் டாக்டர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டும், குற்றவாளிக்க தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்று பாஜக மகளிர் அணி சார்பில் இன்று பேரணி நடந்தது. இந்தப் பேரணியை நடிகை குஷ்பு தொடங்கி வைத்தார்.
இந்த பேரணி திண்டுக்கல், திருச்சி விருதாச்சலம், விழுப்புரம் வழியாக சென்னை வந்தடையும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த பேரணிக்கு காவல்துறை அனுமதி அளிக்கவில்லை என்று கண்டனம் தெரிவித்த பாஜகவினர். திட்டமிட்ட படி பேரணியை தொடங்கிய சிறிது நேரத்திலேயே குஷ்பு உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், மதுரையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கேட்டு குரல் எழுப்பிய சகோதரி குஷ்பூ சுந்தர் தலைமையில் போராட்டத்தில் கலந்து கொண்ட பாஜக மகளிர் அணி தலைவி உமாரதி செயலாளர் பிரமிளா சம்பத் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி மாநில செயலாளர் ஆனந்த பிரியா மற்றும் மகளிர் அணி நிர்வாகிகளை கைது செய்ததை வன்மையாக கண்டிக்கிறேன்....
அதே மதுரையில் டங்ஸ்டன் தொழிற்சாலைக்கு இப்போது அனுமதி மறுபரிசீலனை செய்யப்படுகிறது என்று மத்திய அரசு தெரிவித்த பின்பும் வேண்டுமென்றே போராடும் வைகோவிற்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. நீதி கேட்டு போராடிய கண்ணகியின் மண்ணில்.. பெண்கள் நீதி கேட்பதற்கு தடை விதிக்கும். திமுக அரசிற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அளவிற்கு பெண்களிடம் பாராபட்சமாக நடந்து கொள்ளக் கூடாது என்பதை வலிமையாகவே பதிவு செய்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பாமக தலைவர் பதவியிலிருந்து டாக்டர் அன்புமணி நீக்கம்.. டாக்டர் ராமதாஸ் திடீர் அறிவிப்பு
பாமகவை பிளவுபடுத்துவாரா டாக்டர் அன்புமணி.. ராமதாஸின் திட்டம் என்ன?.. பரபரப்பில் தமிழக அரசியல்
தமிழகத்திற்கு வரும் மத்திய அமைச்சர் அமித்ஷாவின் வருகையால்.. பாஜக அரசியல் சூழல் எழுச்சி பெறுமா..?
மாநில உரிமை காக்கும் போராட்டத்தின் முன்னோடி திமுக: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
Flower Market Price: பங்குனி உத்திரம்... கோயம்பேட்டில் பூக்களின் விலை உயர்வு
சிங்கப்பூர் அரசு விழாவில்.. வாழ்வியல் இலக்கியப் பொழில் சிறப்பு உரையாளராக.. முனைவர் மு. ஜோதிலட்சுமி
பனையூரில் நாளை தவெக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்
அஜித் படத்திற்கு.. வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
அதிரடி காட்டி வரும் தங்கம் விலை.. இன்று சவரனுக்கு ரூ.2160 உயர்வு.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!
{{comments.comment}}