சென்னை: அனைத்து முக்கிய கட்சிகளும் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இதை தேர்தல் புறக்கணிப்பு என்று தான் சொல்வேன். ஏனென்றால் நாங்கள் போட்டியிடும் அளவிற்கு தகுதியற்ற கட்சியாக இன்றைய ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
பாஜக மூத்த தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தனது இல்லத்தில் இன்று பொங்கல் வைத்து பாஜக கட்சி தொண்டர்களுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடினார். அதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசுகையில்,ஒரு போர்கலம் என்றால் 2 வீரர்கள் துணிச்சலாக போர் செய்ய வேண்டும். திமுக பேருக்கு வர்றேன்.. போருக்கு வர்றேன்.. என்று சொல்கிறார்கள். நாங்கள் போருக்கு தயாராக இல்லை. ஏன் என்றால் நீ போர் வீரனே அல்ல. போர்க்களத்தில் திமுக நேர்மையான போர்வீரன் அல்ல, முதுகில் குத்துவார்கள். ஆதலால் திமுகவுடன் போட்டு போடும் அளவிற்கு திமுகவிற்கு தகுதி இல்லை.என் போட்டியை ஏற்றுக் கொள்ளும் தகுதி உனக்கு இல்லை என்பதைத் தான் பாரதிய ஜனதா கட்சி சொல்கிறது. இன்று திராவிட முன்னேற்ற கழகம் வெட்கி தலைகுனிய வேண்டும்.
திமுகவுடன் போட்டிக்கு யாரும் வர மாட்டார்கள். அனைத்து முக்கிய கட்சிகளும் ஈரோடு இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது. இதை தேர்தல் புறக்கணிப்பு என்று தான் சொல்வேன். ஏனென்றால் நாங்கள் போட்டியிடும் அளவிற்கு தகுதியற்ற கட்சியாக இன்றைய ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் இருக்கிறது. இதற்காக திமுக தான் கவலைப்பட வேண்டும். களம் சரியானதாக இருந்து கழங்கம் இல்லாமல் இருந்தால் எல்லோரும் நம்பிக்கையோடு போட்டிக்கு வருவார்கள். அது தான் ஜனநாயகம். திமுகவுடன் யாரும் போட்டிக்கு வரவில்லை என்றால், அது பெருமை அல்ல சிறுமை.
சீமானின் ஈவெரா பற்றிய கருத்துகள் எல்லாம் பாஜகவின் கருத்துகள். காலம் காலமாக பாஜக சொல்லி வந்த கருத்து தான். ஆகையால் எங்கள் கருத்தியலை சீமான் பேச ஆரம்பித்து இருக்கிறார் என்பது எங்களுக்கு மகிழ்ச்சி தான். எங்கள் வழியில் வந்திக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.
எங்கள் கருத்தியலுக்கு கிடைத்துள்ள பலமாகவும், நாங்கள் இதுவரை சொல்லிக்கொண்டிருந்த கருத்தியலுக்கு ஒரு ஆதரவாகவும் இதனைப் பார்க்கிறேன். இனிமேல் ஈவெராவை பற்றிய பிம்பம் ஒவ்வொன்றாக உடைய ஆரம்பிக்கும் என்பது எனது கருத்து. பாஜகவின் பி டீம் எல்லாம் சீமான் கிடையாது. எங்களுடைய தீம் ஐ அவர் பேசுகிறார். அவ்வளவுதான். அனைவருக்கும் தனித்தனி கொள்கை இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தங்கம் விலையில் மாற்றமில்லை.... நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது!
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா.. கொசுவைப் பிடிச்சு.. இந்தப் பொண்ணோட ஹாபி என்ன தெரியுமா?
Chennai Super Kings அணியில் Baby AB.. குர்ஜாப்னீத் சிங்கிற்கு பதிலாக டெவால்ட் ப்ரீவிஸ்!
அமித்ஷா அல்ல.. எந்த ஷா வந்தாலும்.. ஒரு கை பார்ப்போம்.. முதல்வர் மு க ஸ்டாலின் சவால்!
கூட்டணி அழைப்புக்கு நன்றி.. எங்கள் பயணம் எங்கள் கால்களை நம்பிதான்... கூட்டணி குறித்து சீமான் பதில்!
தயவு செய்து அவதூறு பரப்புவதை நிறுத்துங்க.. நடிகர் ஸ்ரீயின் குடும்பத்தினர் வேண்டுகோள்..!
கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும்.. அமைச்சர் அன்பில் மகேஷ்..!
{{comments.comment}}