சென்னை: சென்னை செம்மொழி பூங்காவில் 4வது சென்னை மலர் கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.
கோடை சீசன் துவங்கிய உடனேயே ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலை வாசஸ்தலங்களில் மலர் கண்காட்சி நடத்தப்படுவது வழக்கம். இந்த மலர் கண்காட்சியை காணவும், குளுமையான சீசனை ரசிப்பதற்கும் மக்கள் ஒவ்வொரு வருடமும் வருகை தருகின்றனர். ஊட்டி கொடைக்கானலில்தான் மலர்க் கண்காட்சியைக் காண முடியும், நமக்கெல்லாம் எங்க அந்த வாய்ப்பு என்ற ஏக்கம் சென்னைவாசிகளிடம் எப்போதுமே இருக்கும்.
கடும் வெயிலையும், பெரும் புயலையும் மட்டுமே பார்த்து வரும் பூமி இது என்பதால் சென்னைவாசிகள் மலர்க் கண்காட்சியை ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, ஏலகிரி மற்றும் சினிமாவில்தான் பார்த்து ரசித்து வந்தனர். அவர்களது ஏக்கத்திற்கு திமுக அரசு முற்றுப் புள்ளி வைத்து கடந்த 2022ம் ஆண்டு முதல் சூப்பரான மலர்க் கண்காட்சியை நடத்தி வருகிறது.
சென்னையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அண்ணா மேம்பாலத்திற்கு அருகே செம்மொழிப் பூங்கா வளாகத்தில், 8 ஏக்கர் பரப்பளவில் தமிழக அரசின் தோட்டக்கலை சார்பாக 700 தாவரங்கள் கொண்டு ஊட்டி தாவரவியல் பூங்கா போன்று தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டது. கடந்த மூன்று வருடங்களாக இந்த செம்மொழி பூங்காவில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இதனைக் காண ஏராளமான மக்கள் வருகை தருகின்றனர்.
இந்த வருடம் நான்காவது ஆண்டு செம்மொழிப் பூங்கா மலர் கண்காட்சி இன்று முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த மலர்க் கண்காட்சியை காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 7 மணி வரை பொதுமக்கள் கண்டு களிக்க அனுமதிக்கப்படும். பெரியவர்களுக்கு நுழைவுக் கட்டணம் ரூபாய் 150, சிறியவர்களுக்கு 75 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நான்காவது ஆண்டு செம்மொழி பூங்கா மலர் கண்காட்சியை இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். பூங்கா முழுவதும் மனதைக் கவரக்கூடிய வகையில் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ரோஜாக்கள், துலிப், ஜின்னியா, லில்லி, சாமந்திப்பூக்கள், காஸ்மோஸ், கைலேடியா, சால்வியா, பிளாக்ஸ், மடகாஸ்கர் ஆல்மண்ட், சங்குப்பூ, ஆரம் லில்லி, நீல டெய்சி
பேன்ஸி, பெட்டூனியா, கிரீம் டெல்பினியம் போன்ற விதவிதமான 50 வகையான மலர்கள் இடம்பெற்றுள்ளன. அதேபோல் 30 லட்சம் மலர் தொட்டிகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
அன்னப்பறவை, யானை, மயில், வண்ணத்துப்பூச்சி, பறவைகள், கார் படகு மலை ரயில் பார்பி பொம்மைகள் உள்ளிட்ட 20 வகையான மலர் சிற்பங்கள் இடம்பெற்றுள்ளன. இது மட்டுமல்லாமல் பூங்காவின் நுழைவாயிலில் அனைவரையும் வரவேற்கும் விதமாக இதய வடிவிலான வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மலர் சிற்பங்கள் கண்ணைக் கவருகின்றன. இதனை கடந்து உள்ளே சென்றால் அமரும் இருக்கைகள் கூட விலங்குகளின் தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டு,புகைப்படம் எடுப்பதற்கு ஏதுவாக இருக்கின்றன.
இந்த செம்மொழிப் பூங்கா முழுவதும் பசுமையான சூழலில், ஆங்காங்கே மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருப்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளது. தற்போதுள்ள இந்த குளுமையான சீதோசன நிலையில் ஊட்டியே சென்னைக்கு வந்தது போல் ரம்யமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த வருடம் செம்மொழிப் பூங்கா மலர் கண்காட்சியை காண ஏராளமான மக்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
பொங்கல் பண்டிகைக்கு 6 நாட்கள் அரசு விடுமுறை... ஜனவரி 17ம் தேதி லீவு.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு
ஃபெங்கல் புயல் தீவிர பேரிடர்.. தமிழ்நாடு அரசு அறிவிப்பு.. கெஜட்டிலும் அறிவிக்கை வெளியானது
சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 6 பேர் பலி: 4 லட்சம் நிவாரணம் அறிவித்த தமிழக அரசு
அஜித் மகள் பிறந்தநாள்...க்யூட்டான குடும்ப போட்டோக்களை பகிர்ந்த ஷாலினி
யார் அந்த சார்?...கனிமொழி சொன்ன பதில்...இதை நாங்க எதிர்பார்க்கவே இல்லையே
சபரிமலையில் குவியும் காணிக்கை...41 நாளில் வருமானம் எவ்வளவு தெரியுமா?
மதுரை திருமங்கலத்தில் 1000 கிலோ கறி, 2500 கிலோ அரிசி..ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் கறி விருந்து
ஜல்லிக்கட்டுக்கு போன இடத்தில் மல்லுக்கட்டு...புதுக்கோட்டையில் நடந்த பரபரப்பு
பொங்கலுக்கு ஊருக்கு போறீங்களா?....சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவும் துவங்கிடுச்சு
{{comments.comment}}