ஊட்டி போற பிளான் இருக்கா.. உடனே கேன்சல் பண்ணுங்க.. வண்டியை நேரா அண்ணா பிளை ஓவருக்கு திருப்புங்க!

Feb 06, 2024,06:36 PM IST

சென்னை: சென்னை மக்களே.. "ஃபிளவர் ஷோ" பார்ப்பதற்காக, கொடைக்கானலுக்கோ, ஊட்டிக்கோ போற பிளான் இருக்கா.. தயவு செஞ்சு அதை கேன்சல் பண்ணிடுங்க.. இங்கேயே இருங்க.. உங்களைத் தேடி அழகழகான பூக்கள் சென்னைக்கே வந்தாச்சு!


"பூக்களே சற்று ஓய்வெடுங்கள்.. அவள் வந்து விட்டாள்".. எங்க?.. அதாங்க அண்ணா பிளை ஓவர் கிட்ட இருக்கே நம்ம செம்மொழிப் பூங்கா.. அங்கதான்!




சென்னை மக்கள் நீண்ட ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த சென்னை செம்மொழிப் பூங்கா மலர்க் கண்காட்சி இதோ வந்து விட்டது.. பிப்ரவரி 10ம் தேதி இந்த ஷோ தொடங்கவுள்ளது. வழக்கமாக கோடை வாசஸ்தலங்களில்தான் மலர்க் கண்காட்சி நடைபெறும். அதிலும் ஊட்டி மலர்க் கண்காட்சி மிகப் பிரபலமானது. 


ஆனால் வெயிலின் 2வது தலைநகரான சென்னையிலும் அவ்வப்போது மலர்க் கண்காட்சி நடைபெறுவது, சம்மருக்காக  திகிலோடு காத்திருக்கும் சென்னை மக்களுக்கு ஒரு  திரில்லான ஆறுதலாக அமைந்துள்ளது. அப்படிப்பட்ட ஜில் ஜில் மலர்க் கண்காட்சி இந்த ஆண்டு செம்மொழிப் பூங்காவில் கோலாகலமாக தொடங்கவுள்ளது.


2010ம் ஆண்டு, மறைந்த முதல்வர் கருணாநிதி ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் செம்மொழிப் பூங்கா.  சென்னையின் மையப் பகுதியான அண்ணா சாலை, அண்ணா மேம்பாலம் அருகே உள்ள இடத்தில்தான் இந்த பிரமாண்டப் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இடையில் நடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் இந்தப் பூங்கா கவனிப்பாரற்றுக் கிடந்தது. தற்போது மீண்டும் திமுக ஆட்சியில் புத்துயிர் பெற்று பளிச்சென காட்சி தருகிறது.




இந்தப் பூங்காவில் நூற்றுக்கணக்கான பூ ரகங்கள் பார்வையாளர்களை வசீகரித்துக் கொண்டுள்ளன. ஊட்டி, பெங்களூரு போல ஒரு பொட்டானிக்கல் கார்டன் நமக்கெல்லாம் கிடைக்காதா என்று சென்னைவாசிகள் ஒரு காலத்தில் ஏங்கிக் கிடந்தனர். அவர்களின் மனம் கவரும் வகையில் மணம் வீசிக் கொண்டிருக்கிறது இந்த அழகிய பூங்கா.


கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடத்தப்பட்டது. இந்த வருடம் இந்த மாதமே வரவிருக்கிறது. இந்த முறை ஊட்டிக்கு நிகரான வகையில் மிகப் பிரமாண்டமான முறையில் மலர்கள் காட்சிக்குத் தயாராக இருக்கின்றன. ஒரு வகையில் பார்த்தால் இதுதான் சென்னையில் நடைபெறவுள்ள முதல் மிகப் பிரமாண்டமான லைவ் மலர்க்கண்காட்சி ஆகும். தமிழ்நாடு அரசின் தோட்டக்கலைத்துறை இதற்கு ஏற்பாடு செய்துள்ளது.




இந்த ஷோவைக் காண அனுமதிக் கட்டணம் உண்டு. பெரிய அளவில் எல்லாம் டிக்கெட் கிடையாதுங்க. நிறையப் பேர் வந்து பார்க்க வேண்டும் என்பதால் நாமினலாகத்தான் கட்டணம் நிர்ணயித்திருக்கிறார்களாம்.


தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 16 வகையான மலர் வகைகளைச் சேர்ந்த 12 லட்சம் மலர்கள் இங்கு கொண்டு வந்து வளர்க்கப்பட்டு இப்போது பூத்துக் குலுங்குகின்றன. கிட்டத்தட்ட 8 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்தப் பூங்காவில் எங்கு திரும்பினாலும் பூக்கள் பூக்கள் பூக்கள் மட்டுமே கலகலப்பாக காட்சி தருகிறது.


விதம் விதமான வடிவிலும் பூக்களை அலங்கரித்து வைத்துள்ளனர். மயில், யானை, வாத்து என விதம் விதமான வடிவங்களில் பூக்களை நாம் காண முடியும். கிட்டத்தட்ட ஒரு வார காலம் இந்த கண்காட்சி நடைபெறும் என்று தெரிகிறது. சென்னை வாசிகளே.. இந்த சம்மரை.. ஜம்முன்னு மலர்களோடு என்ஜாய் பண்ணத் தயாராகுங்க!

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்