காங்கிரசை கட்டிக் காத்த.. ராகுல் காந்திக்கு.. பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. செல்லூர் ராஜு அதிரடி!

Jun 19, 2024,04:53 PM IST

மதுரை: மதுரை காளவாசலில்  பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காங்கிரசை கட்டிக் காத்த ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என புகழாரம் சூட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.


மதுரை காளவாசலில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக புதிய கட்டிட இ-சேவை மையத்தின்  பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது.இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். இது தொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறுகையில்,




மக்களின் நலனுக்காக மதுரை மேற்கு தொகுதியில் 21 லட்சம் மதிப்பில் இ சேவை மையம் அமைக்கப்பட உள்ளது. இங்கு பிறப்பு இறப்பு சான்றிதழ்களுக்கு  விண்ணப்பிக்கலாம். இதற்காக பொதுப்பணித்துறை உபகரணங்களை வழங்க உள்ளது.விரைவில் இந்த இ சேவை மையம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.


திமுகவினர் வெற்றி பெற்ற ஆவணத்தில் பேசுகிறார்கள். எந்தக் கூட்டணியும் இல்லாமல் திமுக தனித்து நிற்க தயாரா.. அதிமுக போல் திமுக தனித்து நின்று அவரவர் திறமையை, செல்வாக்கை காண்பிக்கட்டும்.. மக்களிடத்தில் உங்கள் சாதனையை சொல்லி சந்திக்க தயாரா..ஜெயலலிதா போன்று  ஆணித்தரமான முடிவுவெடுக்க இன்றைய முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலினும், திமுக தலைவர்களும் முடிவெடுப்பார்களா.


அதிமுகவுக்கும் பாஜகவும் ஒட்டுமல்லை உறவு இல்லை. இந்த தேர்தலை அதிமுக எதற்காக புறக்கணிக்கிறது என்பதை அதிமுக பொதுச்செயலாளரும் நானும் கூறிவிட்டோம். பாமகவிற்கு மக்களிடம் எந்தளவிற்கு செல்வாக்கு உள்ளது என்பதை தெரிந்து கொள்ள பாமக இடைத்தேர்தலில் போட்டிருக்கிறது.


காங்கிரஸ் கட்சியை கட்டிக் காக்க வேண்டும் என்ற ராகுல் காந்தியின் விடாமுயற்சி பாராட்டுக்குரியது. மாற்றன் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. அதற்காக பக்கத்து வீட்டு தோட்டத்து மல்லிகைக்கு மனம் இல்லை என கூற முடியுமா. அதனால் காங்கிரசை கட்டிக் காத்த ராகுல் காந்திக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறினார்.


சமீபத்தில் ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் காந்தி என பாராட்டி ட்விட் செய்திருந்தார் செல்லூர் ராஜு. அதிமுகவுக்கும், திமுகவும் எதிரணியாக களத்தில் உள்ள நிலையில் செல்லூர் ராஜு இதுபோல் காங்கிரஸ் கட்சி தலைவரை புகழ்ந்து பேசியது பல்வேறு கேள்விகளை எழுப்பியது. இதுகுறித்து பலரும் தங்களின் கருத்துக்களை சமூக வளைய தளங்களில் பதிவிட்டு வந்த நிலையில் செல்லூர் ராஜு அந்தப் பதிவை நீக்கிவிட்டார் என்பது நினைவிருக்கலாம்.

சமீபத்திய செய்திகள்

news

அமரன் படத்தினால் மனஉளைச்சல் அடைந்த மாணவன்.. ரூ. 1.1 கோடி நஷ்டஈடு கேட்டு நோட்டீஸ்!

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

கொங்கு நாட்டு நெல்லி, தக்காளி சட்னி + multigrains ஆட்டா அடை.. செம காம்போ மக்களே.. சாப்ட்டு பாருங்க

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

அதிகம் பார்க்கும் செய்திகள்