"தன்னம்பிக்கை" அதுதானே வாழ்க்கை..!

Jul 15, 2023,12:59 PM IST
- மீனா

கவலையோடு அமர்ந்திருந்த கவிதா...  எடுத்த உடனே "கவலையா" என்று பார்க்காதீங்க.. அந்த "கவலையை  மாற்றிய கவிதா"வை தான் பார்க்க போறோம் . ஆமாங்க நீங்க கேட்கிறது நமக்கு புரியுது.. யாருக்கு தான் கவலையில்லை என்று நீங்க சொல்வது. எல்லாருக்குமே கவலை இருக்கத்தான் செய்யும். ஆனால் எல்லாருடைய கவலையும் ஒரே மாதிரி இருக்காதுல்ல. அந்த மாதிரி தான், தனியார் ஸ்கூல் டீச்சர் ஆன கவிதாவுக்கும். 

கவிதா ஒரு டீச்சர்.. தன்னை விட தான் பார்த்த அந்த ஆசிரியர் வேலையைத்தான் ரொம்ப நேசித்தார் கவிதா..
ஆனால் திடீரென அந்த வேலையை விட்டு கவிதாவை ஸ்கூல் நிர்வாகம் நீக்கியது.. நிலைகுலைந்து போனார் கவிதா.. தன்னைவிட அதிகமாக நேசித்த ஆசிரியர் வேலையை விட்டு நீக்கப்பட்டதால் விரக்தியில் எதையயோ வெறித்து பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் தன் கையில் உள்ள மொபைல் போன் அழைப்பை கூட கவனிக்க மறந்தார். 



மொபைல் அழைப்பு விடாமல் சிணுங்கியபடியே இருந்தது.. மறுபடியும் மறுபடியும் அழைத்த பிறகுதான் சுதாரித்துக் கொண்டவர் சோர்வாகவே எடுத்து  தன்னுடைய மெல்லிய குரலால் சோகம் கலந்து "ஹலோ" என்றார். எதிர் முனையிலும் அதே "ஹலோ" தான்.. ஆனால் அந்த ஹலோவில் கவிதாவின் மனதை மாற்றும் மாயம்  இருந்தது.. பரிவும், அன்பும்,  வருடலும் இருந்தது. 

யார் என்று பார்த்தால் அது கவிதாவின் தோழியான கலா தான். சிறுவயது தோழியான இவர்கள் நட்பு பெருவயதிலும் பிரியாமல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. "எப்படி இருக்கீங்க டீச்சர்" என்று நக்கலாக கேட்ட கலாவிடம், "ஏன் இருக்கேன்னு கேளு..  எப்படி இருக்கேன்னு கேட்காதே" என்று சோகம் கலந்த வார்த்தையை கொட்டினார் கவிதா.

"அது எப்படி நான் இந்த வார்த்தையை உன்னிடம் கேட்க முடியம். உன் கணவர் இறந்த பிறகு உன்னுடைய மகள்களுக்காக உன்னுடைய துக்கத்தையும் துறந்து அவர்களுக்காக வாழ தயாரான  தைரியமான 
பெண்னாச்சே" என்று கலா விடாமல் ஒரு பிடி பிடிக்க..  அது கவிதாவை மெல்ல உலுக்கிப் போட்டது. 

அட ஆமால்ல.. நம்மளையே நாம மறந்துட்டோமே.. என்று அப்பொழுதுதான் சுயநினைவு வந்தவளாக தன்னுடைய பிள்ளைகளை எப்படி மறந்தோம் என்று நினைத்து கலங்கினாள் கவிதா.

இனி கலா - கவிதாவின் உரையாடல்..

"உன் தைரியத்தை தரைமட்டமாக்கும் அளவுக்கு என்ன இப்ப நடந்துச்சு சொல்லு" 

"கணவர் இல்லாட்டினாலும் நாம் செய்யும் வேலையை வைத்து பிள்ளைகளை படிக்க வைத்து கரை சேர்த்து விடலாம் என்று நம்பினேன். அந்த நம்பிக்கை தான் இன்று தரைமட்டமாய் போயிருச்சு. வேலை போயிருச்சு.அந்த சோகத்துல  இருக்கும்போது தான் நீ எனக்கு போன் பண்ணுன"

"அட இதுதான் விஷயமா?"

என் நிலைமையை பார்த்தீங்களா மக்களே.. பாடம் எடுத்த டீச்சருக்கெல்லாம் பாடம் எடுக்க வேண்டியதா  இருக்கு. சோகமா இருக்கு நேரத்தில் ஜோக் தேவையா என்று நீங்கள் நினைப்பது எனக்கு தெரிஞ்சிருச்சு. சோகமா இருக்குறவங்க கிட்ட நாமும் போய் சோகமா பேசுனா அவங்க சோகம் அதிகரிக்குமே தவிர கொஞ்சம் கூட குறையாது. அதனாலதான் இந்த யுக்தியை பயன்படுத்துகிறேன் கண்டுக்காதீங்க. 

"நீ நம்பினது உன்னையா இல்ல அந்த ஸ்கூல்லையா. உனக்கு கடவுள் நம்பிக்கை இருக்கிறதுனால இதை உன்கிட்ட சொல்றேன் கடவுள் நம்மளுக்கு கொடுத்திருக்கிறது இரண்டு கைகள் மட்டுமில்லை மூன்றாவது ஒரு கை கொடுத்திருக்கிறார். அதற்கு பெயர் தான் தன்னம்பிக்கை. கீழே விழுந்தா இரண்டு கைகளை ஊணி வேகமா எழுந்திருக்கலாம். எழுந்திருக்கணும்னு தோணுது பாரு அதுக்கு பேரு தான் தன்னம்பிக்கை. அது நம்ம எல்லாருக்குள்ளயும் இருக்கு. அது மறைவாய் இருக்கிறதுனால நம்ம அதை மறந்து போய்விடுகிறோம் பல சமயங்கள்ல. 

அவங்க உனக்கு கொடுத்த வேலையை உன்கிட்ட இருந்து எடுத்து இருக்கலாம். ஆனால் உன்கிட்ட இருக்கிற உன்னுடைய திறமையை யாராலும் எடுக்க முடியாது. இருக்கிறவங்களுக்கு ஒரு வேலை இல்லாதவர்களுக்கு காத்துகிட்டு இருக்குது பல வேலைகள். எல்லா கெட்டதுலயும் ஏதாவது ஒரு நல்லது இருக்கும். நாம கூட படிச்சிருப்போமே எல்லாம் நன்மைக்கே... உனக்கு புரிஞ்சிருக்கும் நினைக்கிறேன். அடுத்து என்ன பண்ணலாம் என்று  யோசிக்காதே.. செஞ்சிட்டு எனக்கு கூப்பிடு"

அடுத்த இரண்டு நாள் கழித்து போன் கால் வந்தது கவிதாவிடம் இருந்து கலாவுக்கு. எனக்கு அதைவிட பெரிய ஸ்கூல்ல வேலை கிடைச்சிருக்கு  அதிகமான சம்பளத்துல என்று சொன்ன கவிதாவின் குரலில் அவ்வளவு சந்தோஷம் இருந்தது.. அதை விட தன்னம்பிக்கை கூடிக் கிடந்தது..

அவ்வளவுதாங்க.. அடுத்தவங்க மேல நாம வைக்கிறக்கு பேரு நம்பிக்கை, நம்ம மேல நாம வைக்கிறதுக்கு பேரு தன்னம்பிக்கை.. அது எல்லாருக்கும் இருக்கு..  அடுத்தவங்க வந்து அறிவுரை கொடுக்கும் வரைக்கும் நாம அதை உணர்வது கிடையாது.. ஒரு பிடிக்காத விஷயம் நடந்துருச்சா.. உடனே நிலைகுலைஞ்சு போயிடாதீங்க.. ஆற அமர யோசிங்க.. அதை விட பெட்டரா இன்னொன்னு கிடைக்கும்.. இதுதாங்க வாழ்க்கை.. நம்பிக்கைதானே வாழ்க்கை எல்லாம்!

சமீபத்திய செய்திகள்

news

மகாராஷ்டிராவில் மீண்டும் பாஜக கூட்டணி ஆட்சி.. ஜார்க்கண்ட் ஆட்சியை தக்க வைத்தது ஜேஎம்எம் காங் கூட்டணி

news

வங்ககடலில் உருவானது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி.. தமிழ்நாட்டில் மிக கன மழைக்கு வாய்ப்பிருக்கா?

news

வளர்ச்சிக்கும், நல்லாட்சிக்கும் கிடைத்த பெரும் வெற்றி .. மகாராஷ்டிரா மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி

news

Priyanka Gandhi.. வயநாடு இடைத் தேர்தலில் பிரியங்கா காந்தி அதிரடி.. அண்ணன் சாதனையை முறியடித்த தங்கை!

news

14 மாநிலங்கள்.. 48 சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தல்.. பாஜக 18, காங்கிரஸ் 8, திரினமூலுக்கு 6!

news

மகாராஷ்டிரா வெற்றி.. வரிந்து கட்டிக்கொண்டு பட்டாசு வெடித்த தமிழிசை.. அடுத்து சொன்ன அதிரடி வார்த்தை!

news

Wayanad by poll resutls.. அபார வெற்றியை நோக்கி பிரியங்கா காந்தி.. 3.20 லட்சம் வாக்குகள் வித்தியாசம்!

news

Maharashtra poll results: உத்தவ், சரத் பவாருக்கு கெட் அவுட் சொன்ன ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவார்!

news

Wayanad: வயநாட்டில் கொடி நாட்டிய பிரியங்கா காந்தி.. 4வது தலைமுறையிலிருந்து மேலும் ஒரு எம்.பி

அதிகம் பார்க்கும் செய்திகள்