படிக்கும்போதே சுய தொழில் செய்யலாம்.. தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில்.. சூப்பர் பயிற்சி!

Aug 27, 2024,10:46 AM IST

சிவகங்கை: சுய தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு, தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தின் சார்பில் பயிற்சிகள் வழங்கப்பட்டது.


எதிர்காலத்தில் மாணவர்களுக்கு எப்படி கல்வி அவசியமானதோ அதே போன்று கைவசம் சுயதொழில் என்பது முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இதனால் மாணவர்களுக்கும்  அவர்களுடைய பெற்றோர்களுக்கும் சுய தொழிலை ஊக்குவிக்கும் பொருட்டு தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தின் சார்பில் பினாயில், சோப் பவுடர், சோப் ஆயில் தயாரித்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.




இதில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தின் இயக்குனர் சண்முகம் மற்றும் பயிற்சியாளர் ஆரோக்கிய சகாய அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களை ஆசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.


இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பினாயில் சோப் பவுடர் சோப் ஆயில் தயாரித்தல் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஏராளமான பெற்றோர்கள் கலந்துகொண்டு பயிற்சி பெற்றனர். பின்னர் இந்த நிகழ்வு குறித்து பேசும் போது, பிள்ளையார்பட்டியில் அமைந்துள்ள பயிற்சி மையத்தில் லைசால், பன்னீர், ஓமவாட்டர் முதலான பல்வேறு வாசனை பொருட்கள் உட்பட அனைத்தும் குறைந்த செலவில் தயாரிக்கும் பயிற்சி வழங்கி வருகின்றோம்.




கம்ப்யூட்டரில் உள்ள பைத்தான், ஜாவா மற்றும் தையல் பயிற்சிகள், ஆரி ஒர்க், ஸ்வீட் தயார் செய்தல், மில்லட்  தயார் செய்தல், மேட் தயார் செய்தல், தரைவிரிப்புகள் தயார் செய்தல், கூடை தயார்செய்தல் ஆகியவற்றிக்கான  பயிற்சி போன்றவையும் எங்களது பயிற்சி மையத்தில் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றது. தேவைப்படுவோர் எங்களுடைய பயிற்சி மையத்திற்கு வந்து பயிற்சி எடுத்துக்கொள்ளலாம். அனைத்தும் இலவசம்.


பினாயில்  20 லிட்டர் தயாரிக்க மொத்த செலவு 225 ரூபாய்க்குள்தான் வரும். 40 ரூபாய் என்று தோராயமாக விற்றால் 800 ரூபாய் கிடைக்கும்.சோப் ஆயில் 10 லிட்டர் தயார் செய்ய 250 ரூபாய் ஆகும். 80 ரூபாய் லிட்டர் என்று விற்றால் 800 ரூபாய்க்கு விற்கலாம்.சோப் பவுடர் தயாரிக்க ஆகும் செலவு 5 கிலோவிற்கு  580 ரூபாய் ஆகும்.கிலோ  325 ரூபாய் என்று தோராயமாக விற்றால் 470 ரூபாய் லாபம் கிடைக்கும்.  நாம் இவ்வாறு தயாரிக்கும் பொருள்கள் அனைத்துமே கலப்பிடமில்லாதது , சுத்தமானது என விளக்கம் அளித்தார் .




பள்ளி அளவில் இங்குதான் முதன் முதலாக  இந்த பயிற்சி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. குறைந்த செலவில் நேரடியாக வழங்கப்பட்ட பயிற்சியானது மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இளம் வயதிலேயே தொழில் முனைவோர்களை உருவாக்குவதற்கு  இது போன்ற பயிற்சிகள்  நல்ல உதவியாக இருக்கும். நம் வீட்டிற்கு தேவையானவற்றை தயாரித்துக் கொள்ளவும், குடிசைத்தொழில் போன்று செய்வதற்கும் இவர்களது பயிற்சி மிகவும் உதவிகரமாக இருந்தது எனவும் பெற்றோர்கள் தெரிவித்தனர். மேலும் பெற்றோர்களுக்கும் மாணவர்களும் ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்