கொஞ்ச நாளில் வடமாநிலத்துகாரர்கள் தான் முதலாளி .. நாம எல்லோரும் கூலி.. ஈரோட்டில் சீமான் பேச்சு

Jan 25, 2025,12:42 PM IST

ஈரோடு: தமிழகத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையானதால் தான் வடமாநிலத்துக்காரர்கள் இங்க வேலைக்கு வருகிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் அவன் முதலாளி நம்ம கூலி என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் தீவிரமாக ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமி போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரசாரம் செய்துள்ளார்.




நேற்று ரோடுஷோ நடத்தி பிரச்சாரம் செய்த சீமான் பின்னர் பிரச்சாரக் கூட்டத்திலும் பங்கேற்று வழக்கம் போல அனல் பறக்கப் பேசினார். பெரியார் குறித்து கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், பெரியாரின் பூமியான ஈரோட்டில் அவர் கலந்து கொண்ட முதல் கூட்டம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பும் இருந்தது. சீமானின் பிரச்சாரப் பேச்சிலிருந்து:


தமிழக மக்களை தன்மானத்தோடு வாழ வைக்க முடியாதா? என்ற ஏக்கத்தில் தான் நாம் தமிழர் கட்சி இந்த தேர்தல் களத்தில் நிற்கிறது. தேர்தல்களில் தொடர்ந்து தனித்துப் போட்டியிட்டு 1.1% வாக்குகளில் தொடங்கி இன்று 8.22% வாக்குகளை பெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தையும் பெற்றுள்ள கட்சியாக மாறியுள்ளது. மக்கள் எங்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி இது.




திமுக ஒன்றும் வெல்ல முடியாத கட்சி கிடையாது. அந்த கட்சியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் ஈரோடு தேர்தல் களத்தில் தனித்து நிற்கிறோம். கடந்த மூன்று ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை சொல்லி திமுகவினர் வாக்கு கேட்க மாட்டார்கள். பணம் கொடுத்து வாக்குகளை பெறவே நினைப்பார்கள். அவர்களை வாக்கு என்ற ஆயுதம் கொண்டு வீழ்த்த வேண்டும். 


உலகெங்கும் மாற்றங்கள் ஒரு சிறு புள்ளியில் இருந்து தான் தொடங்கியுள்ளது. அதுபோல, மாறுதலுக்கான தேர்தலாக இந்த தேர்தலை மக்கள் மாற்ற வேண்டும். தேர்தலின் போது வாக்கை விற்கும் அரசியலை மக்கள் ஏற்கக்கூடாது. நமது வாக்கை விலைக்கு வாங்கிய நாட்டை விற்கும் நிலைமையை அனுமதிக்க கூடாது.


திமுக ஆட்சியில் ஆசிரியர், போக்குவரத்து ஊழியர், மாணவர், உழவர், செவிலியர், மருத்துவர் என எல்லோரும் போராட்டக் களத்திற்கு வந்துள்ளனர். ஆனால், எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி நடப்பதாக முதல்வர் ஸ்டாலின் மார்தட்டி கொள்கிறார். அதிமுக ஆட்சியின் போது பொங்கல் பரிசாக ரூபாய் 5000 கொடுக்க வேண்டும் என்று சொன்ன முதல்வர் மு. க. ஸ்டாலின் தனது ஆட்சியில் பொங்கல் பரிசு என 103 ரூபாய் மட்டும் கொடுத்துள்ளார். மது விற்பனையை 45 ஆயிரம் கோடியில் இருந்து 50 ஆயிரம் கோடியாக உயர்த்த அரசு இலக்கு நிர்ணயம் செய்கிறது.




படிக்கும் மாணவர்கள் எண்ணிக்கை பெருக்குவதற்கு பதிலாக குடிப்பவர்கள் எண்ணிக்கை பெருக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. ஈரோடு தேர்தல் களத்தில் போட்டியிடாமல் எல்லோரும் விலகி நிலையில் துணிச்சலுடன் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியை வாக்காளர்கள் கைவிட மாட்டார்கள் என்று நம்புகிறோம். எது சரியான அரசியல் என ஈரோடு கிழக்கு வாக்காளர்கள் அறிவார்கள். இந்த தேர்தல் மூலம் ஈரோடு கிழக்கில் பிறக்கும் தூய அரசியல், அடுத்த ஆண்டு நடக்கும் பொது தேர்தலில் 234 தொகுதிகளிலும் எதிரொலிக்கும். 


ஈரோடு கிழக்கு தொகுதியில் உதயசூரியன் மறைந்தால் தான் தமிழகத்தில் முடிவு ஏற்படும்.  ரூபாய் 8.50 லட்சம் கோடி கடனாக பெற்ற தமிழகத்தில் எந்த நலத்திட்டமும் நிறைவேற்றவில்லை. அனைவரும் சமமான தரமான கல்வி, தரமான போக்குவரத்து, குடிநீர், சாலை வசதியை அரசால் வழங்க முடியவில்லை. அரசு தரமாக இல்லாததால் தான் அரசின் சேவைகள் தரமானதாக இல்லை. தாய்மார்களை மாதம் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்த வைத்து ஆட்சி இது. அடுத்த ஆண்டு பொது தேர்தல் வரும் போது இதனை 2000 ரூபாயாக வழங்குவதாக சொல்வார்கள்.


கடனை 10 லட்சம் கோடி உயர்த்தி, நம்மை கடன்காரர்களாக ஆக்கி விடுவார்கள். 90 சதவீத குற்றங்கள் போதையின் காரணமாக நடைபெறுகின்றன. ஒரு புறம் போதைக்கு அடிமையாகாதீர்கள் என்று சொல்லிவிட்டு, மது விற்பனையில் ஏன் குறைத்தது என்று ஆய்வு மேற்கொள்கின்றனர். தமிழகத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையானதால் தான் வடமாநிலத்துக்காரர்கள் இங்க வேலைக்கு வருகிறார்கள். இன்னும் கொஞ்ச நாளில் அவன் முதலாளி நம்ம கூலி என்றார் சீமான்.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மினி பஸ்களில்.. இனி மினிமம் டிக்கெட் ரூ. 4.. அதிகபட்சம் 10 ரூபாய்.. புதிய கட்டண விகிதம் அறிவிப்பு

news

வெயில் தொடங்கி விட்ட போதும்.. ஜனவரி 30 முதல் பிப்ரவரி 3 வரை.. மிதமான மழைக்கு வாய்ப்பு!

news

ஸ்ரீஹரிகோட்டாவில் செஞ்சுரி அடிக்கும் இஸ்ரோ.. நாளை 100வது செயற்கைக் கோளை ஏவுகிறது!

news

தலித் ஊழியரை பொய் வழக்கில் சிக்க வைத்ததாக.. இன்போசிஸ் இணை நிறுவனர் உள்ளிட்டோர் மீது வழக்கு

news

ஸ்ரீரங்கம் கோவில் பார்க்கிங் அருகே.. ஓட ஓட விரட்டி வெட்டிக் கொல்லப்பட்ட ரவுடி அன்பு!

news

தமிழக வெற்றிக் கழகத்தில்.. அடுத்தபடியாக.. பூத் கமிட்டி நிர்வாகிகளை நியமிக்க விஜய் உத்தரவு!

news

வன்னியர்களுக்கு அதிக துரோகம் செய்த ஒரே முதல்வர் யார் தெரியமா.. டாக்டர் அன்புமணி பேச்சு

news

சீமான் என்ன பாஜகவின் கொள்கை பரப்புச் செயலாளரா?.. விசிக தலைவர் திருமாவளவன் கேள்வி!

news

அமெரிக்கா செல்லவுள்ளார் பிரதமர் மோடி.. டிரம்ப்புடன் முக்கியப் பேச்சு.. எப்போது, எத்தனை நாட்கள்?

அதிகம் பார்க்கும் செய்திகள்