அதே பழைய கேள்விகள்தான் கேட்டார்கள்.. அதே பதில்களையே நானும் சொன்னேன்.. சீமான்

Feb 28, 2025,11:58 PM IST

சென்னை: அதே பழைய கேள்விகளைத்தான் கேட்டார்கள். நானும் அதை பதில்களைத் தெரிவித்தேன். திமுக அரசின் அழுத்தமே இதற்குக் காரணம். திமுக தூண்டுதலில்தான் நடிகை தொடர்ந்து வீடியோ போடுகிறார் என்று கூறியுள்ளார் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்.


வளசரவாககம் காவல் நிலையத்தில் நடந்த விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் சீமான். அப்போது அவர் கூறுகையில், அதே பழைய கேள்விகள்தான். முன்பு 3 மணி நேரம் நடந்தது. அப்போது வேறு இன்ஸ்பெக்டர். இப்போது புது இன்ஸ்பெக்டர். அதையேதான் இப்போதும் சொன்னேன். புதிய கேள்விகள் எதுவும் இல்லை. விளக்கம் கொடுத்துட்டேன்.


எப்போ சந்திச்சீங்க, என்ன நடந்தது. அதே கதைதான். தேவைப்பட்டால் மறுபடியும் விசாரணக்கு அழைப்போம்னு சொன்னாங்க. ஒத்துழைப்பதாக சொன்னேன். ஏற்கனவே விசாரிச்சாச்சு. நான்தான் வழக்கைத் தொடர்ந்தேன். மூனே நாளில் விசாரித்து முடிக்க வேண்டிய அவசியம் இல்லை. அதுக்குள்ள அவசரம் அவசரமாக விசாரிக்க அவசியமில்லை.




அசிங்கப்படுத்தும் நோக்கம்தான் இதெல்லாம். என் வீட்ல போய் அழைப்பாணையை ஒட்டியது தேவையில்லாதது. நல்ல முறையில் நடத்தினாரகள். ஆனால் எனது தம்பி சுபாகரை இரும்புக் கம்பியை துணியில் கட்டி அடித்துள்ளனர். அது தேவையற்றது, அவசியமற்றது. 


அரசுத்  தரப்பின் அழுத்தம் இல்லாமல் இது நடக்க வாய்ப்பில்லை. இது இடையூறு அல்ல. முதல்வரின்  தந்தை கருணாநிதி  என்னை கைது செயது சிறையில் அடைத்து தலைவராக்கினார். அவரது மகன் என்னை முதல்வராக்காமல் ஓய மாட்டார். நிச்சயம் இது நடக்கும்.


எந்தப் பின்புலமும் இல்லாமல் மக்கள் என்னை அங்கீகரித்துள்ளனர்.  இதெல்லாம்  பாதிக்கவில்லை. மக்களிடம் எனது பெயரை சிதைக்க அரசு செய்கிறது. இது உலகுக்கே தெரியும். 


நான் நடிகையை திருமணம் செய்வதாக வாக்கு அளிக்கவில்லை. 6 மாதம் மட்டுமே பழக்கம். காதலிப்பதாக இருந்தால் இப்படி முச்சந்தியில் நிற்க வைப்பார்களா.. இது காதலா?  நடிகை விரும்பியே உறவு வைத்துக் கொண்டார். பிடிக்கவில்லை. பிரிந்து போய் விட்டார். அதை யாராவது கேட்டீர்களா. என்னை மட்டும் குற்றம் சாட்டுவது ஏன்.


அப்பா முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் என்று கூறினார் சீமான். 

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Summer Rains.. தமிழ்நாட்டில்.. அடுத்த ஒரு வாரத்திற்கு வெயில் + மழை.. இதாங்க நிலவரம்..!

news

Election of new Pope: புதிய போப்பாண்டவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?

news

மறைந்தார் போப்பாண்டவர் பிரான்சிஸ்.. வாடிகன் திருச்சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு

news

2026 சட்டப்பேரவை தேர்தல்: டிசம்பருக்கு பின்னரே கூட்டணி குறித்து தவெக முடிவு?

news

Summer Jokes: மே முதல் கத்தரி வெயில்.. ம்க்கும்.. இப்ப மட்டும் வெண்டைக்காய் வெயிலா அடிக்குது...!

news

தொடர் சாதனை உச்சத்தில் தங்கம் விலை... அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் மக்கள் தவிப்பு!

news

அர்ஜென்டினாவில் ரயில்வே தொழிலாளியின் மகனாக பிறந்து.. போப்பாண்டவராக உயர்ந்த.. பிரான்சிஸ்!

news

Monday Motivation... ஹாய் பிரண்ட்ஸ்.. நீங்க காலைல கண் விழிச்சதும் முதல்ல எதைத் தேடுவீங்க?

news

கோவையில் வரும் 26,27 தவெக கட்சியின் பூத் கமிட்டி கூட்டம்... விஜய் பங்கேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்