நான் உயிருடன் இருக்கும் வரை நடக்க விடமாட்டேன்.. எண்ணூர் கருத்துக் கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம்

Dec 20, 2024,06:40 PM IST

சென்னை: நான் உயிருடன் இருக்கும் வரை எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தை நடக்க விடமாட்டேன் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஓருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.


எண்ணூர் அனல் மின் நிலைய கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சி ஓருங்கிணைப்பாளர் சீமான் அங்கு அனல் பறக்கப் பேசினார். 


அவர் பேசுகையில், அனல், புனல், அணு மின்நிலையங்கள் எல்லாம் நாட்டின் வளர்ச்சி வேலை வாய்ப்பு என்று சொல்லித்தான் கொண்டுவரப்பட்டது. இந்த வார்த்தைகளை கேட்கும் போது இனிப்பாக தான் இருக்கும். மின்சாரம் இல்லாமல் எப்படி வாழ்வது நாடு எப்படி வளர்ச்சி பெறும் என்பது எல்லாம் சரிதான். மின்சார தேவையை நிறைவு செய்வதற்கு நிலக்கரி, அணு உலை, அனல் மின் நிலைய உற்பத்தி தான் இருக்கிறது  என்றால்  அது சரியானது அல்ல என்று விஞ்ஞானிகளை சொல்கிறார்கள் அணுகுண்டு மீது உட்காருவதும் அணுஉலகின் அருகே இருப்பது ஒன்றுதான் என்று அவர்கள் சொல்கிறார்கள். 




வளர்ச்சி என்ற வார்த்தைகளை சொல்லியே பல தொழில்கள் இப்படித்தான் கொண்டுவரப்பட்டது. எது வளர்ச்சி தாயை கொன்று விட்டு பிணத்தின் மீது விளக்கை வைத்து அழுவது தான் வளர்ச்சியா?. காற்றை விசமாக்கி விட்டு, உணவை நஞ்சாக்கி விட்டு, நீரை நஞ்சாக்கி விட்டு, நிலத்தை நஞ்சாக்கி விட்டால், இது எப்படி வளர்ச்சியாகும். வளர்ச்சி என்பது என்ன? மின்சார உற்பத்தி தேவையா? கடல் அலைகளில் மின்சாரம் தயாரிக்கிறார்கள் சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க முடியாதா. காற்றாலை கடல் அலை சூரிய ஒளி ஆகியவை தீராத வளம் நிலக்கரி தீர்ந்துவிடும் வளம். எந்த கேடாவது இயற்கைக்கு இருக்கா.


100 பேரில் 90 பேர் புற்றுநோயால் மரணம் மூன்று குழந்தைகளுக்கு புற்றுநோய் வர காரணம் என்ன தாய்ப்பால் நஞ்சானதால் தான். அனல் மின் நிலையத்தை வேண்டுமென்று சொல்பவர்கள் உங்களின் வீட்டை அனல் மின் நிலையத்திடம் கட்டிக் கொள்ளுங்கள். எங்களுக்கு நீங்கள் வசிக்கும் இருப்பிடத்தை கொடுத்து விடுங்கள். பிறகு எவ்வளவு ஆண்டு வேண்டுமானாலும் அனல் மின் நிலை நீட்டித்துக் கொள்ளுங்கள்.


மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இண்டிகோ தவிர வேறு விமானங்கள் கிடையாது. அப்புறம் எதற்கு 5000 ஏக்கர் விலை நிலத்தை பறித்து விமான நிலையம் கட்ட வேண்டும். 5000 ஏக்கரில் ஏர்போர்ட் கட்ட கூடாது. ஏர் பூட்டி உழ வேண்டும். முதலில் பசியோடு இருப்பவனைப் பாருங்கள். வளர்ச்சி வளர்ச்சி என்று பசியில் கிடந்து செத்தால் கரண்டில் எரிக்கிறீர்கள். எந்த வளர்ச்சி உங்களுக்கு தேவை. 


கொரோனா சமயத்தில் 80 கோடி ஏழைகளுக்கு ரேஷன் பொருட்களை வழங்கியதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா கூறி இருந்தார் வளர்ச்சி என்று சொல்பவர்கள் இரவு உணவு இல்லாமல் படுக்கச் செல்ல மாட்டார்கள். பசி இல்லா பச்சிளம் குழந்தைகள் படுக்கச் சொல்வார்கள் என்று உறுதி தருவார்கள் என்றால் எத்தனை அணு உலைகளை வேண்டும் ஆனாலும் கட்டுங்கள். ஒரு பிரச்சனையும் இல்லை. 


மின்சார உற்பத்திக்காக அணு உலை கண்டுபிடிக்கப்பட்டதா? சூரிய ஒளி தகடுகள் விவசாய நிலங்கள் தான் போடுவார்களா? அரசு கட்டிடங்களின் மேற்கூறையில் போட முடியாதா? போர் நடந்து பேரழிவு நடந்த இடத்தில் கூட மக்களை மறுபடியும் குடி அமர்த்த முடியும். ஆனால் அணு உலை வெடித்த இடத்தில் மக்களை மீண்டும் குடியமர்த்த முடியாது. கேரளாவில் அணு உலை கொண்டு வர கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ்களும் எதிர்த்தது. ஏனென்றால், வெளிச்சத்தில் வாழ்வதைவிட நான் உயிரோடு வாழ வேண்டும் என்று சொன்னார்கள். அப்படி என் மண்ணையும் மக்களையும் நேசிக்கும் தலைவர்கள் இருந்தார்கள் இறந்தார்கள். இப்போது அப்படிபட்ட தலைவர்கள் இல்லை என்றார்.


அவரது பேச்சின்போது திமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர். இதனால் கூட்டத்தில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது. இருப்பினும் எந்தவிதமான அசம்பாவிதமும் நடைபெறவில்லை.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

குமரி முனை திருவள்ளுவர் சிலையை.. Statue Of Wisdom ஆக கொண்டாடுவோம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

வெளியில் நடமாடவே அச்சப்பட்டார்களே.. மறந்து விட்டீர்களா எடப்பாடி பழனிச்சாமி.. அமைச்சர் எஸ். ரகுபதி

news

நான் உயிருடன் இருக்கும் வரை நடக்க விடமாட்டேன்.. எண்ணூர் கருத்துக் கேட்பு கூட்டத்தில் சீமான் ஆவேசம்

news

நெல்லை கோர்ட் வாசலில் வைத்துக் கொலை.. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

news

2025ம் ஆண்டு தமிழ்நாடு சட்டசபையின்.. முதல் கூட்டத் தொடர்.. ஆளுநர் உரையுடன் ஜனவரி 6ல் நடைபெறும்!

news

Yearender 2024.. மிகச் சிறந்த வட கிழக்குப் பருவ மழை.. மொத்த தமிழ்நாட்டுக்கும் அள்ளித் தந்த வானம்!

news

ஈரோட்டில் விரைவில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்கப்படும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

news

பொங்கல் நாளையே.. மத்திய அரசின் தேர்வு முகமைகள் குறி வைப்பது ஏன்.. சு. வெங்கடேசன் கேள்வி

news

அம்பேத்கர் குறித்த அமித் ஷா பேச்சு.. இன்றும் நாடாளுமன்றத்தில் போராட்டம், அமளி.. ஒத்திவைப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்