இரண்டு பொம்பளை பின்னாடியே திரிஞ்சீங்களே.. மீடியா மீது பாய்ந்த சீமான்!

Oct 06, 2023,05:04 PM IST

சென்னை: ஊடகங்கள் எதையெல்லாம் விவாதமாக்க வேண்டுமோ அதைச் செய்வதில்லை. இரண்டு பொம்பளைங்க என் மீது கூறிய புகார்களைப் பிடித்துக் கொண்டு அது பின்னாடியே திரிஞ்சீங்களே என்று மீடியா மீது நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாய்ந்துள்ளார்.


கடந்த 28ஆம் தேதி முதல் இடைநிலை ஆசிரியர்கள் சம ஊதியம் கேட்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இன்று அந்தப் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.  முன்னதாக போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை சந்தித்து நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்  பேசினார்.




பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:


சின்ன குழந்தைகள் முதல் எல்லோரையும் ஒரே இடத்தில் அடைத்து இதெல்லாம் கொடுமை.  எங்கள் குழந்தைகளுக்கு பால் ரொட்டி வாங்கி கொடுத்தால் கல் எடுத்துக் கொடுக்கிறீர்களா என கேட்டால் எப்படி..? எந்த வசதியும் இல்லாமல் ஆசிரியரை இப்படி பூட்டி வைப்பது அறிவார்ந்த சமூகம் செய்யும் செயலா.. என்பதை நீங்கள் தான் கொண்டு போக வேண்டும். எது பிரச்சனை. எது தீவிரம். என்னை எடுத்துக் கொண்டால் ஒரு மாதமாக இரண்டு பெண்களை என் பின்னாடி சுத்த வச்சுக்கிட்டே இருந்தாங்க. அதுதான் தலைப்பு செய்தி. அதுதான் விசாரணை. நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. கேவலம்.


நாங்கள் தான் படிக்க வைத்தோம். நாங்கள் தான் கல்வி கொடுத்தோம்.  நாங்கள் எல்லாம் கல்வி தரவில்லை என்றால் சீமான் இவ்வளவு படித்து இவ்வளவு பேசியிருப்பாரா..!! எங்களை எல்லாம் படிக்க வைத்தது என் தாத்தா காமராஜர். ஆனால் இங்கு தெருவுக்கு இரண்டு டாஸ்மார்க் வைத்து குடிக்க வைத்தது நீங்க..


ஆசிரியர் பற்றி, ஆசிரியர் மதிப்பை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்..? அன்பில் மகேஷ், ஆசிரியரிடம் படித்திருக்கிறார் அல்லவா? ஆசிரியர்களுடைய மதிப்பும் ,பெருமையும் தெரியாதா..! ஐந்து ரூபாய் கேட்கும் இடத்தில் 2 ரூபாய் 50 பைசா கொடுங்க. பத்து ரூபாய் கேட்கும் இடத்தில் ஐந்து ரூபாய் கொடுங்க. ஒரு வருடத்தில் கொடுக்க முடியவில்லை என்றால் ஒன்றை ஆண்டுகள் கழித்துக் கொடுங்கள். 


எது கேட்டாலும் நிதி இல்லை. சமாதி கட்ட, பல்நோக்கு மருத்துவமனை கட்ட, நூலகம் கட்ட மட்டும் நிதி இருக்கா? தேர்தலில் ஓட்டு போடுவதற்கு மட்டும் பணம் கொடுக்கிறீர்க.ள் இதற்கு மட்டும் எங்கிருந்து பணம் வந்தது என ஆவேசமாக பேசினார் சீமான்.

சமீபத்திய செய்திகள்

news

மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு

news

2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?

news

நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!

news

ப வரிசைப் பட நாயகன்.. தமிழ்த் திரையுலகின் முத்திரை இயக்குநர்.. பீம்சிங் நூற்றாண்டு விழா.. நாளை!

news

உங்களுக்காக நடனமாடுகிறோம்.. எங்களுக்காக இதைச் செய்யுங்களேன்.. மேடை நடனக் கலைஞர்கள் கோரிக்கை!

news

மீண்டும் இ பாஸ் கட்டாயம்.. கொடைக்கானல், ஊட்டியில் வரிசை கட்டி நிற்கும் வாகனங்கள்

news

TNPSC குரூப் 2 தேர்வு எழுதியவர்களா நீங்கள்.. சூப்பரான குட் நியூஸ் சொன்ன தேர்வாணையம்..!

news

Weather Report: தமிழ்நாட்டில்.. 6 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு .. இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

news

விஜய் ஆர்கானிக் மாஸ் என்றால்... விசிக என்ன இன்ஆர்கானிக் மாஸா?.. விசிக தலைவர் திருமாவளவன்

அதிகம் பார்க்கும் செய்திகள்