கரும்பு சின்ன விவகாரம்.. விடாமல் போராடும் சீமான்.. தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

Mar 15, 2024,03:54 PM IST

டெல்லி: கரும்பு விவசாய சின்னத்தை வேறு கட்சிக்கு ஒதுக்கியதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சி மனு தாக்கல் செய்திருந்தது. இதற்கு தேர்தல் ஆணையம் பதில் அளிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது. 


நாடாளுமன்ற தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளநிலையில், ஒவ்வொரு கட்சியினரும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் அவற்றை சரி செய்வதுடன் தொடர்ந்து தேர்தல் குறித்த பணிகளையும் செய்து வருகின்றனர் அரசியல் கட்சிகள்.


இந்நிலையில், நாம் தமிழர் கட்சிக்கு கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்டிருந்த கரும்பு விவசாயி சின்னம் இந்த முறை ஒதுக்கப்படவில்லை. இதற்கு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்  ஐகோர்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இதற்கு யார் முதலில் கோரிக்கை வைக்கிறார்களோ அவர்களுக்கு தான் சின்னம் வழங்கப்படும் என்று கூறி சீமான் மனுவை தள்ளுபடி செய்தது.




தற்பொழுது அந்த சின்னம் கர்நாடகாவை சேர்ந்த பாரதிய ஐக்கிய மக்கள் கட்சிக்கு தேர்தல் ஆணையம் கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கியுள்ளது.  இந்தக் கட்சி தமிழ்நாட்டில் திராவிட தெலுங்கு தேசம் என்ற கட்சியுடன் இணைந்து அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிடப் போகிறதாம். எங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் சீமானிடம் சின்னத்தை விட்டுத் தருவதாக அந்தக் கட்சி கூறியுள்ளது.


இந்த நிலையில்,  நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர்  சீமான் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. சீமான் மனுவுக்குப் பதில் அளிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. பின்னர் வழக்கை வரும் 25ம் தேதிக்கு பின்னர்  மீண்டும் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

news

சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து.. கருப்பு பட்டை அணிந்து சட்டசபைக்கு வந்த.. எம்எல்ஏக்கள்..!

news

Today gold rate:புதிய உச்சத்தில் தங்கம் விலை... சவரனுக்கு எவ்வளவு உயர்வு தெரியுமா?

news

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கு மத்தியில்..மக்களவையில் நிறைவேறியது.. வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா

news

தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பாக.. ஏப்ரல் 5ல் மின் நுகர்வோருக்கான.. சிறப்பு முகாம் ஏற்பாடு..!

news

மேகம் கருக்குது மழை வர பாக்குது.. தமிழ்நாட்டில் இன்று முதல் 5 வரை கனமழைக்கு வாய்ப்பு..!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 03, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்