மேல்பாதி திரெளபதி அம்மன் கோவிலில்.. விரைவில் ஆலய நுழைவுப் போராட்டம்.. சீமான் அறிவிப்பு

Mar 29, 2025,02:25 PM IST

சென்னை: விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி திரௌபதி அம்மன் கோயிலில் மக்கள் வழிபட அரசு அனுமதிக்காவிட்டால், விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.


பெருவாரியாக வன்னியர் சமுதாய மக்கள் வழிபடும் ஆலயம்தான் மேல்பாதி திரெளபதி அம்மன் கோவில். அந்தக் கோவிலில் வழிபாடு தொடர்பாக சர்ச்சை ஏர்பட்டதைத் தொடர்ந்து கோவில் மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவிலைத் திறந்து வழிபாட்டுக்கு அனுமதிக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:




விழுப்புரம் மாவட்டம், மேல்பாதி கிராமத்தில் மூடப்பட்டிருந்த திரௌபதி அம்மன் கோவிலைத் திறந்து, பொதுமக்கள் வழிபட அனுமதிக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் ஆணை பிறப்பித்து, ஓராண்டைக் கடந்த பிறகும், தமிழ்நாடு அரசு இதுவரை அனுமதி மறுத்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.


திமுக அரசின் இத்தகைய சமூக அநீதிக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின்போது, காலை 6 மணி முதல் 7 மணி வரை மக்கள் வழிபடக் கோயில் திறக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்தது பச்சைப் பொய்யாகும். உண்மையில் திரௌபதி அம்மன் கோயிலில் வழிபாடு நடத்த அரசு அனுமதிக்கவில்லை என்று மேல்பாதி மக்கள் மிகுந்த மனவேதனையுடன் குற்றஞ்சாட்டுகின்றனர். 


மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் கோவிலைத் திறக்க நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும், திமுக அரசு திறக்க மறுப்பதேன்? மக்களிடையே கருத்து வேறுபாடு இருந்தால், இருதரப்பு மக்களையும் அழைத்துப் பேசி, மக்களை ஒற்றுமைப்படுத்தி, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி வழிபாடு நடத்த வாய்ப்பேற்படுத்துவதே ஓர் நல்ல அரசின் கடமையாகும்.


"இறைவனுக்கு முன்பு எல்லோரும் சமம்தான்!  உண்கிற கை உயர்ந்தது, உழைக்கிற கை தாழ்ந்தது என்ற பாகுபாடு இருக்கக் கூடாது; இறைவனுக்கு முன்பு இரு கையையும் இணைத்துதான் வணங்க வேண்டும். அப்படி இறைவனுக்கு முன்பு எல்லோரும் சமம் என்கிற எண்ணம் இல்லாதவன், இறைவனை வழிபடவே அறுகதையற்றவன்" என்ற தாத்தா முத்துராமலிங்கத்தேவர் கூற்றுக்கிணங்க அனைத்து மக்களையும் அரவணைத்து, புரிதலை ஏற்படுத்தி, வழிபாட்டு உரிமையை பெறச் செய்வதே உண்மையான சமத்துவமாகும்.


அதைவிடுத்து, மக்களிடையே கலவரம் ஏற்படும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என்றெல்லாம் காரணங்களைக் கூறி, கோயிலைத் திறக்க மறுப்பது எதேச்சதிகாரத்தின் உச்சமாகும். மாணவர் வருகை குறைந்தால் பள்ளிக்கூடத்தை இழுத்து மூடிவிடுவது, வழிபாட்டில் சிக்கல் என்றால் கோயிலை இழுத்து மூடிவிடுவது என்பதுதான் திராவிடம் கட்டிக்காத்த சமத்துவமா? பெற்றுத் தந்த சமூக நீதியா?


எனவே, திராவிட மாடல் திமுக அரசின் போலி சமூகநீதி முகத்திரையைக் கிழித்து, உண்மையான சமத்துவத்தை நிலை நாட்டிட, தமிழ் இயக்கங்களை ஒன்றிணைத்து, மேல்பாதி மக்களை அழைத்துக்கொண்டு விரைவில் ஆலய நுழைவு போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார் சீமான்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கொடைக்கானலுக்கு செல்லும்.. வாகனங்களுக்கான புதிய கட்டுப்பாடுகள்.. இன்று நள்ளிரவு முதல் அமல்..!

news

மராத்தி பேசாவிட்டால் பளார்னு அறையுங்கள்.. தமிழ்நாட்டின் தைரியம் நமக்கு வேண்டும்.. ராஜ் தாக்கரே

news

ஏப்,6ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடியை கண்டித்து போராட்டம்: தமிழக காங், தலைவர் செல்வபெருந்தகை

news

தோனி கடைசி ஓவர்களில் களம் இறங்குவது ஏன் தெரியுமா?.. பிளமிங் சொல்லும் காரணம் இதுதான்!

news

கிப்லி டிரெண்டில் கை கோர்த்தார் எடப்பாடி பழனிச்சாமி.. அசத்தல் புகைப்படங்களை ஷேர் செய்து மகிழ்ச்சி!

news

தமிழ்நாட்டிற்கான தொழில் முதலீடுகள் பிற மாநிலங்களுக்கு செல்வது ஏன்? : டாக்டர் அன்புமணி ராமதாஸ்!

news

விஜய் எந்த தொகுதியில் நின்னாலும் அவரை எதிர்த்து நானும் நிற்க தயார்: பவர் ஸ்டார் சீனீவாசன்!

news

Attn passengers: ஏப்ரல் 1 முதல் 30 வரை.. தென்காசி டூ செங்கோட்டை இடையே பயணிகள் ரயில் சேவை ரத்து..!

news

நடிகர் கார்த்தி மற்றும் எஸ்‌.ஜே சூர்யா காம்போவில்.. சர்தார் 2 டீசர் வெளியீடு.. ரசிகர்கள் வரவேற்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்