பிரதமர் நரேந்திர மோடி காரை நோக்கி ஓடி வந்த இளைஞர்.. கர்நாடகத்தில் பரபரப்பு!

Jan 13, 2023,10:54 AM IST
ஹுப்பளி: கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில்,15 வயது பையன், பிரதமர் நரேந்திர மோடியின் கார் அருகே ஓடி வந்து அவரைக்கு மாலை போட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடியாக இது பார்க்கப்படுகிறது.



பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் கடந்த ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரசாரத்திற்காக சென்றிருந்தபோது விவசாயிகள் போராட்டம் காரணமாக அவரது கார் நடுப்பாலத்தில் நீண்ட நேரம் நிறுத்தப்பட்டிருந்தது.  கிட்டத்தட்ட 20 நிமிட நேரம் பிரதமரின் வாகனம் பாலத்தில் நின்றிருந்தது. அவரது பாதுகாப்பில் மிகப் பெரிய குளறுபடி ஏற்பட்டதாக மத்தியஅரசும் பாஜகவும் குற்றம் சாட்டியிருந்தன.

இதையடுத்து ஒரு விசாரணைக் கமிட்டி அமைக்கப்பட்டு நடத்தப்பட்ட விசாரணையில் பஞ்சாப் காவல்துறை தரப்பில் தவறுகள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து பிரதமரின் பாதுகாப்பில் எதிர்காலத்தில் இதுபோன்ற குளறுபடிகள் ஏற்படாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் பஞ்சாப் சம்பவத்தை விட மிகவும் அபாயகரமான பாதுகாப்பு குளறுபடி, பாஜக ஆளும் கர்நாடகத்தில் நடந்துள்ளது.  அங்குள்ள ஹுப்பளி நகரில் பிரதமர் நரேந்திர மோடி ரோட்ஷோ ஒன்றை நடத்தினார். திறந்த காரில் நின்றபடி  சாலையோரம் திரண்டிருந்த மக்களைப் பார்த்து கையசைத்தபடி பிரதமர் வந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென 15 வயது சிறுவன் பிரதமர் காரை நோக்கி வேகமாக ஓடி வந்து பிரதமருக்கு மாலை போட முயன்றான். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை பிரதமரும் எதிர்பார்க்கவில்லை. போட வந்த மாலையை அவர் அப்படியே கையில் வாங்கிபாது காவலர்களிடம் கொடுத்தார். பாதுகாவலர்கள் உடனடியாக சுதாரித்து அந்தப் பையனை அந்தப் பக்கமாக அப்புறப்படுத்தினர்.

பிரதமரை கையால் தொட்டு விடும் தூரத்தில் மிக மிக நெருக்கமாக நின்று மாலை போட முயன்ற சம்பவம் மிகப் பெரிய பாதுகாப்பு குளறுபடியாக பார்க்கப்படுகிறது.  உயர்ந்தபட்ச பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி எப்படி அந்த சிறுவன் உள்ளே புகுந்தான் என்பதுத  தெரியவில்லை. 29வது தேசிய இளைஞர் திருவிழாவைத் தொடங்கி வைப்பதற்காக  பிரதமர் ஹுப்பளி வந்திருந்தார்.

பிரதமருக்கு 5 வளைய பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. இதில் 5வது வளையப் பாதுகாப்பு மாநில காவல்துறையின் பொறுப்பாகும். இதில்தான் குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக  போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் இது பாதுகாப்பு குளறுபடி இல்லை என்றும், பிரதமரின் பாதுகாப்பில் எந்த மிரட்டலும் ஏற்படவில்லை என்றும் ஹுப்பள்ளி தார்வாட் துணை போலீஸ் கமிஷனர் டாக்டர் கோபால் பயகோட் தெரிவித்துள்ளார். ஒரு பையன் மாலை போட முயன்றான்.  அந்த நபர் குறித்த தகவல்களை சேகரித்து வருகிறோம் என்று விளக்கியுள்ளார்

சமீபத்திய செய்திகள்

news

Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!

news

ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி

news

அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்

news

விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!

news

தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!

news

கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!

news

ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்

news

Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!

news

Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!

அதிகம் பார்க்கும் செய்திகள்