அதிமுகவுடன் மீண்டும் தேமுதிக பேச்சு.. "வெற்றிக்கூட்டணியாக அமையும்".. தலைவர்கள் நம்பிக்கை!

Mar 06, 2024,06:16 PM IST

சென்னை: அதிமுக- தேமுதிக இடையே  2ஆம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை நடைபெற்றுள்ளது. இதில் தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முன் வந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது வெற்றிக்கூட்டணியாக அமையும் என்று தேமுதிக தலைவர்கள் கூறியுள்ளனர்.


லோக்சபா தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில வாரங்களில் உள்ளன. தேர்தல் நடைபெறுவதற்கான தேதி குறித்த அறிவிப்பு இந்த வார இறுதியில் வெளிவரும் என எதிர்பார்த்து வருகின்றனர். இதற்காக ஒவ்வொரு கூட்டணி கட்சிகளும் தொகுதி பங்கீடு குறித்த ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்து வருகின்றனர். 


அதிமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தீவிரமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி வருகிறது. புதிய தமிழகம், அகில இந்திய பார்வர்ட் பிளாக் ஆகியவை கூட்டணியில் இணைந்துள்லன. இந்த நிலையில், தேமுதிகவுடன் கூட்டணியை உறுதிப்படுத்த இன்று 2வது சுற்றுப் பேச்சுவார்தை நடைபெற்றது.




தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் 14 லோக்சபா தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதியை கொடுக்கும் கட்சிகளுடனே கூட்டணி அமைப்பதாக முதலில் கூறி வந்தார். ஆனால் அதை அதிமுகவும் ஏற்கவில்லை, பாஜகவும் ஏற்கவில்லை என்று தெரிகிறது. ரகசியமாக பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகவும் தகவல் பரவி வந்தது. 


இந்த நிலையில் கடந்த 1ஆம் தேதி அதிமுக தேமுதிகவுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதிமுகவுடன் நடந்த முதல் கட்ட பேச்சு வார்த்தையில் மாநிலங்களவை பதவி தொடர்பாக தேர்தலுக்குப் பின் முடிவு செய்து கொள்ளலாம் என கூறப்பட்டதாகவும் அப்போது கிருஷ்ணகிரி, விருதுநகர், திருச்சி, கடலூர் ஆகிய தொகுதிகளை ஒதுக்க தேமுதிக வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால் கடந்த முறை ஒதுக்கிய வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய தொகுதிகளை ஒதுக்க அதிமுக முன்வந்ததாக சொல்லப்படுகிறது.


இந்த நிலையில் அதிமுக- தேமுதிக இடையேயான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று மாலை அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில், தேமுதிக துணை செயலாளர் எல்.கே சுதீஷ், அவைத்தலைவர் பி இ இளங்கோவன், அழகாபுரம் ஆர் மோகன்ராஜ், பா. பார்த்தசாரதி உள்ளிட்ட 4 பேர் கொண்ட குழு கலந்து கொண்டது.  இதில் தொகுதிகள் குறித்து முக்கியமாக விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. 


வெற்றிக் கூட்டணியாக அமையும்




பேச்சுவார்த்தைக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தேமுதிக தலைவர்கள் கூறுகையில்,  பேச்சுவார்த்தை தொடரும். இன்றைய பேச்சுவார்த்தை நல்லபடியாக இருந்தது. இது வெற்றிக் கூட்டணியாக அமையும். தொடர்ந்து பேசுவோம். பரஸ்பரம் பேசிக் கொண்டோம், கூட்டணியாக இருப்போம் என்று முடிவெடுத்துக் கொண்டோம். அடுத்தடுத்து பேசும்போது எத்தனை தொகுதிகள் என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்படும் என்றனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்