சென்னை: இன்றளவும் தொடரும் சாதிய ஏற்றத் தாழ்வுகளை நொறுக்குகிற வலிமைமிக்க சம்மட்டியாக அண்ணல் அம்பேத்கர் திகழ்கிறார் என்று தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்.
1891ம் ஆண்டு ஏப்ரல் 14ல் அம்பேத்கர் பிறந்தார். சட்ட மேதை, பொருளாதார நிபுணர், அரசியல் தலைவர், சமூக சீர்திருத்தவாதி என பன்முகத்தன்மை கொண்டவர் அம்பேத்கர். பட்டியல் சமூகத்தில் பிறந்தவரான அம்பேத்கர் பின்னர் புத்த மதத்தைத் தழுவினார். இந்தியாவின் அரசியல் சாசனத்தை வகுத்தவர் அம்பேத்கர். 1956ம் ஆண்டு டிசம்பர் ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் அம்பேத்கர் மறைந்தார்.
அம்பேத்கர் மறைந்த நாளான இன்று நாடு முழுவதும் அவருக்கு தலைவர்கள், மக்கள் புகழாஞ்சலி செலுத்தி வருகின்றனர். அம்பேத்கரின் படம் மற்றும் சிலைக்கு பிரதமர் மற்றும் அரசியல் கட்சி முக்கிய தலைவர்கள் மாலை அணிந்து மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அம்பேத்கர் நினைவு நாளையொட்டி நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உறுதிமொழி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள் நாம் அடிமையாய் வாழ்வதைவிட சுதந்திரமாய் ஓர் நொடி வாழ்ந்து சாவது மேலானது! என்று கற்பித்த புரட்சியாளர்!
அறிவைத் தேடி ஓடுங்கள்! நாளைய வரலாறு உங்களைத் தேடி ஓடிவரும்! என்ற பேரறிஞர்!
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வடிவமைத்த சட்டமேதை!
நான் யாருக்கும் அடிமை இல்லை; எனக்கும் யாரும் அடிமையில்லை! என்று முழங்கிய சமத்துவ நாயகன்!
சாதியக் கொடுமைகளை எதிர்த்து போராடாமல் இருப்பதைவிட செத்து ஒழிவதே மேலானது! என்ற புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் இன்றைய காலத்தேவை மட்டுமல்ல; என்றைக்குமான காலத்தேவை!
இன்றளவும் தொடரும் சாதிய ஏற்றத் தாழ்வுகளை நொறுக்குகிற வலிமைமிக்க சம்மட்டியாக அண்ணல் அம்பேத்கர் திகழ்கிறார்.
பன்னெடுங்காலமாக அடிமைப்பட்டு தாழ்தளத்தில் வீழ்ந்துகிடக்குற தமிழ்தேசிய இனப் பிள்ளைகள் உலகங்கெங்கும் மானுட விடுதலைக்குப் போராடிய புரட்சியாளர்களின் வழியிலே எம்மின விடுதலைக்கான அரசியல் புரட்சியை முன்னெடுக்கிறோம்.
சாதி-மதப் பிளவுகள்தான் சமநிலைச் சமூகம் அமையவிடாது ஒவ்வொரு தேசிய இனத்திற்குள்ளும் தன்னினப்பகையை மூட்டி அந்த தேசிய இனங்களைப் பிரித்தாண்டு வீழ்த்திக் கொண்டிருக்கிறது என்பதை உணர்ந்த தமிழ்த்தேசிய இனப் பிள்ளைகள் அண்ணல் அம்பேத்கரின் வழியிலே பயணித்து, தமிழ்தேசிய இன மக்களின் உரிமைகளை மீட்டெடுப்போம் என அவரது நினைவுநாளில் உறுதியேற்போம்! என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு.. ஆர். அஸ்வின் திடீர் அறிவிப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி!
அம்பேத்கரை எப்படியெல்லாம் காங்கிரஸ் அவமதித்தது?.. பட்டியலிட்ட பிரதமர் நரேந்திர மோடி!
அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்
அமித்ஷா பேசியது பாஜகவிற்கு பின்விளைவுகளை ஏற்படுத்தும்.. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்
அடடா மழைடா அடை மழைடா.. சென்னை, புறநகர்களில் காலை முதல் விடாமல் கொட்டித் தீர்க்கும் மித மழை..!
அம்பேத்கர் அம்பேத்கர்.. உள்ளமும் உதடுகளும் மகிழ உச்சரித்துக் கொண்டே இருப்போம்.. தவெக விஜய்
Pongal.. சிறப்பு பொங்கல் தொகுப்பு விற்பனை.. இன்று முதல்.. ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில்!
புதுச்சேரியில்.. டிசம்பர் 28ம் தேதி பா.ம.க பொதுக்குழு கூட்டம்.. டாக்டர் அன்புமணி ராமதாஸ்
தென்னிந்தியர்கள் தேவையில்லை.. நொய்டா நிறுவனத்தின் அறிவிப்பால்.. கொந்தளிக்கும் சோசியல் மீடியா!
{{comments.comment}}