சென்னை: தனுஷ்கோடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் அங்கு செல்ல அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தனுஷ்கோடியில் ஏற்கனவே புயலால் அழிந்த கட்டிடங்கள் இருந்த பகுதிகளில் நேற்று கடல் நீர் புகுந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதே போல நேற்றும் சுற்றுலா பயணிகள் விடுமுறை நாள் என்பதால் அதிகளவில் வருகை தந்திருந்தனர்.
ராமேஸ்வரம் தனுஷ்கோடி தெற்கு பகுதி மன்னர் வளைகுடா கடலில் நேற்று மதியம் 2 மணி முதல் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. இதனால் அங்கிருந்த சுற்றுலா பயணிகளுக்கிடையே பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின்னர் சுற்றுலா பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக அப்பகுதியில் இருந்து வெறியேற்றப்பட்டனர். வழக்கத்தை விட அப்பகுதியில் நீர்மட்டம் அதிகரித்தது. திடீர் என்று மாலை 5 மணிக்கு பிறகு எம் ஆர் சத்திரம் தெற்கு கடற்கரை பகுதியில் இருந்து அரிச்சல் முனை வரையிலும் சுமார் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு கடற்கரை பகுதி முழுமையாக கடல் நீரால் சூழ்ந்தது.
தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலைகளிலும் கடல் நீர் தேங்கியது. அப்பகுதியில் உள்ள மீனவர்களின் குடிசைகள், ஹோட்டல், கடைகள் என அனைத்து பகுதிகளிலும் கடல் நீர் சூழ்ந்தது. தனுஷ்கோடி அரிச்சல் முனை கடலில் இருந்து ராட்சச அலைகளால் தேசிய நெடுஞ்சாலையில் கடல் நீர் கடந்து சென்றது. இதனால் அப்பகுதியில் உள்ள 2 கிலோ மீட்டர் அளவிற்கு தேசிய நெடுஞ்சாலைகளில் ஆங்காங்கே கற்கள், கடலில் உள்ள பாசிகள், தாழை செடிகள் குவிந்து காணப்பட்டன.
இந்நிலையில், தனுஷ்கோடி செல்ல சுற்றுலா பயணிகளுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. 5 அடி வரை கடல் அலை எழுவதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அப்பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மட்டும் தனுஷ்கோடி செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்
தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!
பாஜக தலைவர் மாற்றம் உறுதி... அண்ணாமலையே சூசகமாக தகவல்!
நெருப்புடா.. நெருங்குடா.. இன்று முதல் விஜய்க்கு ஒய் பிரிவு பாதுகாப்பு அமல்..!
நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து
வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக
எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!
உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!
கூலி படத்தின் முக்கிய அப்டேட் இன்று வெளியீடு.. வெறி வெயிட்டிங்கில் ரசிகர்கள்!!
{{comments.comment}}