எடின்பர்க்: தற்போது 81 வயதாகும் பாட்டி, 30 ஆண்டுகளுக்கு முன்னர் தனது கைப்பையைத் தொலைத்து விட்டார். அந்தப் பை இப்போது கண்டுபிடிக்கப்பட்டு பாட்டியிடமே வந்து சேர்ந்துள்ளது. இத்தனை காலமாக தொலைந்து போயிருந்த கைப்பை மீண்டும் கிடைத்ததால் பாட்டி செம ஹேப்பியாகி விட்டார்.
இந்தக் கைப்பையை 11 வயது சிறுமிதான் கண்டுபிடித்து பாட்டியிடம் கொண்டு வந்து சேர்த்து அவரை குஷிப்படுத்தியுள்ளார்.
வடகிழக்கு ஸ்காட்லாந்து பகுதியைச் சேர்ந்தவர் ஆட்ரி ஹே . இவருக்கு வயது 81. சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் ஆட்ரி ஹே தான் வேலை பார்க்கும் இடத்தில் தனது விலை உயர்ந்த கைப்பையை தொலைத்து விட்டார். அப்போதைய கணக்குப்படி அந்தக் கைப்பையின் விலை சுமார் 200 பவுண்ட்டாகும். கைப்பையை தொலைத்த கவலையில் ஆட்ரி ஹே காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல் துறையினரும் கைப்பை விலை உயர்ந்தது என்பதால் அதனை பல இடங்களில் தேடியுள்ளனர். காவல் துறையின் தேடுதலில் கைப்பை கிடைக்கவில்லை. ஆட்ரி ஹேயும் அந்த கைப்பையை பல இடங்களிலும் தேடினார். அவருடைய தேடுதலிலும் கைப்பை கிடைக்கவில்லை. இதையடுத்து தனது முயற்சியை விட்டு விட்டார். இப்படியே 30 வருடம் ஓடி விட்டது.
இந்த நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, மெய்சி கூட்ஸ் என்ற சிறுமி தனது பெற்றோர் மற்றும் தனது செல்ல நாயுடன் டான் நதிக்கரையோரமாக வாக்கிங் சென்றுள்ளார். அப்பொழுது கரையோரமாக ஒரு கைப்பை கிடந்ததைப் பார்த்துள்ளார். பையை எடுத்து பார்த்தபோது, அதில், லிப்ஸ்டிக், ஆபரணங்கள், சாவி, மாத்திரைகள், பேனாக்கள், சில்லறை நாணயங்கள் என பொருட்கள் இருந்ததை பார்த்துள்ளார் அந்த சிறுமி. அந்த கைப்பையில் சில கிரெடிட் கார்டுகள் இருந்துள்ளது. அதில் 1993 என்று அச்சிடப்பட்டும் இருந்திருக்கிறது.
அடையாள அட்டைகள் கைப்பையில் இருந்த பொருட்கள் குறித்த தகவல்களை இணையதளத்திலும் பதிவிட்டு அந்த சிறுமி உரிமையாளரை தேடியுள்ளார். அந்த சிறுமியின் நீண்ட தேடுதலுக்கு பின்னர் உரிமையாளர் ஆட்ரி ஹேவை கண்டுபிடித்தார். உடனே உரிமையாளரை தொடர்ப்பு கொண்டு தன்னிடம் கிடைத்த கைப்பை குறித்து கூறவே, ஆட்ரி ஹே பெரும் ஆச்சரியத்தில் மூழ்கினார். இதை தான் 30 வருடத்துக்கு முன் தொலைத்து விட்டதாக கூறவே கூட்ஸுக்கும் ஆச்சரியமாகி விட்டது.
இதைத் தொடர்ந்து ஆட்ரி ஹேவின் வீட்டுக்குச் சென்று அவரிடம் இந்தக் கைப்பையைக் கொடுத்தார் கூட்ஸ்.
இந்த சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில், சமூக வலைதளங்களின் தாக்கமும் அதன் பயன்பாடும் நம்ப முடியாததாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
கைப்பையை பெற்ற ஆட்ரி ஹே தெரிவிக்கையில், நான் எதிர்பார்க்கவே இல்லை. இத்தனை வருடங்கள் ஆகியும் அது அப்படியே உள்ளது. நான் தொலைத்த ஒரே பை இது தான் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
11 வயது சிறுமியின் செயல் மற்றும் நேர்மையை பாராட்டி இணையதள பக்கங்களில் சிறுமிக்கு பாராட்டுக்கள் குவியத்தொடங்கியுள்ளன. இணையதளங்களை நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக அமைந்துள்ளது.
சென்னை மக்களே.. ரெடியா.. 12ம் தேதி முதல் கன மழை வெளுக்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் தந்த அலர்ட்!
அண்ணாமலைக்குப் பின்னாடி.. விஜய்க்கு சீமான் கொடுத்த இடம்.. அந்த அன்புத்தம்பிதான் ஹைலைட்டே!
தவெக விஜய்க்கு பின்னால் இருக்கும் விஐபி யார்?.. பரபரக்கும் அரசியல் களம்.. அட, இவர் தானாமே!!
Delhi Ganesh.. 400க்கும் மேற்பட்ட படங்கள்.. ஹீரோ டு காமெடியன்.. மறக்க முடியாத டெல்லி கணேஷ்
நவம்பர் 10 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
விருச்சிக ராசிக்காரர்களே.. மகிழ்ச்சியான செய்திகள் வீடு தேடி வரும் நாள்
மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்.. வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ரிப்பன் மாளிகையை சுற்றிப் பார்க்க அரிய வாய்ப்பு
2028 அதிபர் தேர்தலுக்குத் தயாராகப் போகிறாரா கமலா ஹாரிஸ்.. அடுத்த திட்டம் என்ன?
நவ. 14, 15 கன மழை எச்சரிக்கை.. சென்னையில் முன்னெச்சரிக்கை பணிகள் தீவிரம்.. மேயர்பிரியா அப்டேட்!
{{comments.comment}}