சென்னை: கோடை விடுமுறை இன்று முதல் துவங்கி உள்ள நிலையில், கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
2024-25 ஆம் ஆண்டுக்கான இறுதித் தேர்வுகள் கோடை வெயில் காரணமாக முன்கூட்டியே நடத்தப்படும் என கல்வித்துறை ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி, அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில்,
1 முதல் 5 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 7 முதல் 17 வரையிலும்,
6 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 8 முதல் 24 வரை வரையிலும் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில் தொடக்கப் பள்ளிகளுக்கு மட்டும் ஆண்டு இறுதித் தேர்வுகள் முடிந்து விடுமுறை துவங்கி விட்டது.இதற்கிடையே தற்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருப்பதால் தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், பள்ளி மாணவர்களுக்கான இறுதித் தேர்வு இன்று நிறைவுற்று கோடை விடுமுறை தொடங்குகிறது. இதற்கு பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மாணவர்களுக்கான அறிவுரையை வழங்கி உள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில்,
கோடை விடுமுறையை மாணவச் செல்வங்கள் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் தங்களின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தண்ணீர் அதிகம் பருகுங்கள்.
சிறுவருக்கான புத்தக வாசியுங்கள்.
பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளுங்கள்.
அருங்காட்சியகம், பூங்கா செல்லுங்கள்.
திறமைகளுக்கு ஏற்ற பயிற்சி வகுப்புகளுக்கு செல்லுங்கள்.
பெற்றோர்கள் அனுமதி இல்லாமல் ஆபத்தான இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டுகிறேன்.
மகிழ்ச்சியான மனதோடு அடுத்த வகுப்பிற்கு வாருங்கள். உங்களை வரவேற்க காத்திருக்கிறோம் என கூறியுள்ளார்.
Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன்.. துரை வைகோ அறிவிப்பு
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து செல்ல சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி!
மகள், கணவரின் Mental Torture.. வருங்கால மருமகனுடன் எஸ்கேப் ஆன மாமியார்.. திரும்பி வந்ததும் டிவிஸ்ட்!
வேண்டியதை நடத்தித் தரும் அபிஜித் நேரம்.. அற்புதமான அந்த 24 நிமிடங்கள்!
பாபா வங்கா சொன்னது நடக்கப் போகிறதா?.. திக் திக் பரபரப்பு எதிர்பார்ப்புடன் உலக நாடுகள்!
யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பா?.. திட்டவட்டமாக மறுத்தது மத்திய அரசு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 19, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
தங்கம் விலையில் மாற்றமில்லை.... நேற்றைய விலையே இன்றும் தொடர்கிறது!
{{comments.comment}}