டெல்லி: கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்தை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் அனைவரும் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்கு திரும்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்துள்ளார் 2ம் ஆண்டு பயிற்சி மருத்துவர். ஆகஸ்ட் 8ம் தேதி இரவு பணியில் இருந்த போது பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இவர் கடந்த மாதம் 9ம் தேதி கல்லூரி கருத்தரங்கு அறையில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசார் செய்த விசாரணையில், பணியில் உடன் இருந்த மருத்துவரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்டது தெரிய வந்தது. மருத்துவக் கல்லூரியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் சஞ்சய் ராய் என்பவரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. கொடூரமான இந்த பாலியல் பலாத்கார, கொலைச் சம்பவத்திற்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள மருத்துவ மாணவர்களும், மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கொல்கத்தாவில் பல இடங்களில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சம்பவம் நடந்த மருத்துவமனைக்குள் நுழைந்த சிலர் அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் அடித்து நொறுக்கினர். இந்த வன்முறையால் விசாரணை, சிபிஐக்கு மாற்றம் செய்யப்பட்டது.
இந்நிலையில்,போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள் நாளை மாலை 5 மணிக்குள் பணிக்குத் திரும்பினால், அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பாடது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு பணி விடுப்பு எடுக்கும் மருத்துவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்படும் என உச்சநீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
விஜய் பங்கேற்கும்.. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள மாட்டார் திருமாவளவன்!
தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து வழக்கில் இறுதிக் கட்டம்.. 27ம் தேதி தீர்ப்பு வழங்கப்படுகிறது!
கடுப்பா இருக்கா பாஸ்.. வாங்க கடிக்கிறோம்.. கலகலன்னு சிரிங்க.. மைன்ட் free ஆகி.. face பிரெஷ்ஷாய்ரும்!
ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் உதவி.. தாயாரிடம் வழங்கினார் அமைச்சர் கோவி.செழியன்
Chennai Lakes.. நீர் இருப்பில் மாற்றம் இல்லை.. புதிய காற்றழுத்தத் தாழ்வுக்காக ஏரிகள் வெயிட்டிங்!
Rain forecast: 5 மாவட்டங்களில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு.. 7 மாவட்டங்களில் கன மழை!
{{comments.comment}}