செந்தில் பாலாஜி கைது செல்லும்.. 5 நாள் ஈடி காவலுக்கு அனுமதி..  சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Aug 07, 2023,11:24 AM IST

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்தது செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டது. 


மேலும் செந்தில் பாலாஜியை 5 நாள் அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்கவும் உச்சநீதிமன்றம் அனுதி அளித்துள்ளது. இந்த விசாரணைக் காலத்தின்போது செந்தில் பாலாஜியின் உடல் நிலை குறித்து சிறப்பாக கவனித்துக் கொள்வோம் என்று அமலாக்கத்துறை உத்தரவாதம் அளித்துள்ளது.


அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரித்து வரும் அமலாக்கத்துறை அதுதொடர்பாக ரெய்டுகளை நடத்தியது. இந்த ரெய்டுகளின் தொடர்ச்சியாக அவர் பல மணி நேரம் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அதைத் தொடர்ந்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவே மருத்துவமனையில் அனுமதித்தனர்.


இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். அதை விசாரித்த ஹைகோர்ட் இரு நீதிபிதிகள் பெஞ்ச் முரண்பாடான தீர்ப்பை அளித்தது. இதை தொடர்ந்து 3வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. 3வது நீதிபதி கைது செய்யப்பட்டது செல்லும் என்று தீர்ப்பளித்தார்.


இதையடுத்து செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள்  ஏ.எஸ். போபண்ணா மற்றும்  எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு சரியே. அதில் த��ையிட விரும்பவில்லை. கைது செய்யப்பட்ட பிறகு ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


செந்தில் பாலாஜியை காவலில் எடுக்க அமலாக்கத்துறை சார்பில் அனுமதி கோரப்பட்டது. அதை ஏற்ற நீதிபதிகள் ஆகஸ்ட் 12ம் தேதி வரை காவலில் விடுவித்து உத்தரவிட்டனர். அப்போது செந்தில் பாலாஜியின் உடல் நலம் குறித்து அவரது தரப்பில் நீதிபதிகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. அப்போது அவருக்குத் தேவையான சிறப்பான மருத்துவ வசதிகளை நாங்கள் செய்து தருவோம் என்று அமலாக்கத்துறை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதை நீதிபதிகள் பதிவு செய்து கொண்டனர்.


தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக அவர் நீடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்