டெல்லி: டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் சிக்கிய விவகாரத்தைத் தொடர்ந்து அவரை மீண்டும் அலகாபாத் ஹைகோர்ட்டுக்கே இடமாற்றம் செய்ய உச்சநீதிமன்ற காலேஜியம் முடிவு செய்துள்ளது.
கடந்த வாரம் டெல்லியில் உள்ள வர்மாவின் அலுவல் பூர்வ வீட்டிலிருந்து ஹோலி கொண்டாட்ட சமயத்தின்போது கணக்கில் வராத கட்டுக்கட்டுக்கான பணம் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு விபத்தின் மூலம்தான் தெரிய வந்தது. ஹோலி கொண்டாட்ட விடுமுறையின்போது நீதிபதியின் குடும்பத்தினர் வெளியூர் போயிருந்தனர். அப்போது வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து போலீஸார் விரைந்து வந்தனர். போலீஸார் பணத்தைப் பறிமுதல் செய்து உயர் அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் டெல்லி ஹைகோர்ட் தலைமை நீதிபதிக்குத் தெரிவிக்க, அவர் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்குத் தகவல் கொடுத்தார். இதையடுத்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான காலேஜியம் கூடி வர்மாவை அவர் இதற்கு முன்பு பணியாற்றிய அலகாபாத் ஹைகோர்ட்டுக்கே திருப்பி அனுப்ப முடிவு செய்தது.
தனது வீட்டில் பணம் இருந்தது குறித்து இதுவரை நீதிபதி வர்மா கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. அதேசமயம் நீதிபதி வர்மா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போதுதான் நீதித்துறை மீதான களங்கம் தீரும் என்று சில மூத்த நீதிபதிகள் தலைமை நீதிபதியிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அவரிடம் ராஜினாமா செய்யுமாறு அறிவுறுத்தலாம் என்ற யோசனையும் முன்வைக்கப்பட்டுள்ளதாம். ஒரு வேளை அவர் மறுத்தால், தலைமை நீதிபதியே விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதைத் தொடர்ந்து நாடாளுமன்றம் மூலம் அவரை நீதிபதி பதவியிலிருந்து நீக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.
நீதிபதிகள் மீது நடவடிக்கை - நடைமுறை என்ன?
உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது ஏதேனும் புகார் வந்தால் உடனடியாக அவர்களை நீக்கி விட முடியாது. அதற்கென்று நிறைய நடைமுறைகள் உள்ளன. 1999ம் ஆண்டு இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் சில வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. அதன்படி உயர்நீதிமன்ற நீதிபதி மீது ஊழல் புகார், முறைகேடு அல்லது மோசடிப் புகார் ஏதேனும் வந்தால் முதலில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட நீதிபதியிடம் விளக்கம் கேட்பார். அந்த விளக்கம் தலைமை நீதிபதிக்குத் திருப்தி தராவிட்டால் அல்லது முறையாக இல்லை என்று அவர் கருதினால், உள் விசாரணைக் குழுவை தலைமை நீதிபதி நியமிப்பார்.
தலைமை நீதிபதி நியமிக்கும் இந்த விசாரணைக் குழுவில், ஒரு சுப்ரீம் கோர்ட் நீதிபதி, 2 ஹைகோர்ட் நீதிபதிகள் உறுப்பினர்களாக இருப்பார்கள். இந்தக் குழு விசாரணை நடத்தி தலைமை நீதிபதியிடம் அறிக்கை அளிக்கும். அந்த அறிக்கையில் சம்பந்தப்பட்ட நீதிபதி மீதான புகார்களுக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட நீதிபதியை ராஜினாமா செய்யும்படி தலைமை நீதிபதி கேட்டுக் கொள்வார்.
ஒரு வேளை சம்பந்தப்பட்ட நீதிபதி பதவி விலக மறுத்தால், அவரை நாடாளுமன்றத்தின் மூலமாக நீக்க நடவடிக்கை எடுக்குமாறு கூறி மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி கடிதம் எழுதுவார். அதைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட நீதிபதியை பதவி நீக்கம் செய்யும் இம்பீச்மென்ட் தீர்மானம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கொண்டு வரப்படும். அங்கு தீர்மானம் நிறைவேறினால், சம்பந்தப்பட்ட நீதிபதியின் பதவியும் பறி போய் விடும்.
வக்பு வாரிய சட்ட மசோதா நாளை தாக்கல்.. எதிர்த்து வாக்களிக்க இந்தியா கூட்டணி எம்.பிக்கள் முடிவு
தமிழ்நாட்டில் வெப்பநிலை படிப்படியாக ..2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்..!
வழக்கத்தைவிட.. ஏப்ரல், ஜூனில் வெப்பம் அதிகரிக்கும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!
Emburan Movie: பெரியாறு அணை குறித்து அவதூறு கருத்துகளை நீக்குக.. பண்ருட்டி வேல்முருகன்..!
Madurai Chithirai Thiruvizha 2025: மீனாட்சி அம்மன் கோவிலில்..ஏப்ரல் 29ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்..
அருவறுப்பான ஆண்களே அழிஞ்சு நாசமா போங்க.. பாடகி சின்மயி ஆவேசம்!
கும்பகோணம் வெற்றிலைக்கும் தோவாளை மாணிக்க மாலைக்கும் புவிசார் குறியீடு!
டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வு.. ஏப்ரல் 30 வரை விண்ணப்பிக்கலாம்.. வெளியானது அரசு உத்தரவு..!
தமிழகத்தில் ஆட்சி அமைப்போம்.. அமித்ஷா கூறியது நகைச்சுவை:விசிக தலைவர் திருமாவளவன்!
{{comments.comment}}