சென்னை: தமிழ்நாடு தொடர்பான முக்கிய வழக்கில், உச்சநீதிமன்றம் 2வது முறையாக தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. 142வது சட்டப் பிரிவு இந்த சிறப்பு அதிகாரத்தை உச்சநீதிமன்றத்திற்குத் தருகிறது.
உச்சநீதிமன்றம் இன்று, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் பிறப்பித்துள்ள உத்தரவு பல்வேறு வழிகளிலும் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாக மாறி உள்ளது. கடந்த காலத்தில் பேரறிவாளன் வழக்கில் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி அவரை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு அளித்திருந்தது.
அதன் பிறகு தற்போது மீண்டும் அந்த சிறப்பு அதிகாரத்தை சுப்ரீம் கோர்ட் பயன்படுத்தி இருப்பது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த இரண்டு வழக்குகளும் தமிழ்நாடு தொடர்பானவை என்பது கூடுதல் அம்சமாகும்.
தமிழ்நாடு அரசு அனுப்பி வைத்திருந்த 10 சட்ட மசோதாக்களுக்கும் தாங்களே ஒப்புதல் அளிப்பதாகவும் இதைத்தவிர வேறு வழி இல்லை என்றும் சுப்ரீம் கோர்ட் இன்று தெரிவித்துள்ளது.
உச்சநீதிமன்றம் இன்று ஒப்புதல் அளித்த 10 சட்ட மசோதாக்கள் விவரம்:
1. தமிழ்நாடு மீன்வளப் பல்கலை திருத்த சட்ட மசோதா
2. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை திருத்த சட்ட மசோதா (இந்த இரண்டு மசோதாக்களும் கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டவை)
3. தமிழ்நாடு பல்கலைகள் சட்டங்கள் திருத்த சட்ட மசோதா
4. டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலை திருத்த சட்ட மசோதா
5. டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவப் பல்கலை திருத்த சட்ட மசோதா
6. வேளாண் பல்கலை திருத்த சட்ட மசோதா
7. தமிழ்நாடு பல்கலைகள் சட்டங்கள் இரண்டாம் திருத்த சட்ட மசோதா8. தமிழ் பல்கலை இரண்டாம் திருத்த சட்ட மசோதா
9. 2023ம் ஆண்டு மீன்வளப் பல்கலை திருத்த சட்ட மசோதா
10. கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை திருத்த சட்ட மசோதா (கடைசி 8 மசோதாக்களும் திமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டவை)
நாட்டுக்கே வழிகாட்டிய தமிழ்நாடு
உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இன்று பெற்றுள்ள தீர்ப்பானது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் செல்லுபடியாகும் என்பதால் இந்த தீர்ப்பு பல்வேறு மாநில அரசுகளுக்கு, குறிப்பாக பாஜக அல்லாத கட்சிகள் அரசாளும் மாநில அரசுகளுக்கு மிகப் பெரும் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
குறிப்பாக கேரளா, மேற்கு வங்காளம், தெலுங்கானா உள்ளிட்ட பாஜக அல்லாத முக்கிய எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு ஆளுநர்களால் ஏற்படக்கூடிய சிக்கல்களானது கிட்டத்தட்ட நீங்கியுள்ளது என்றே சொல்ல வேண்டும். கேரளாவும், மேற்கு வங்காளமும் தமிழ்நாட்டைப் போலவே ஆளுநர்களுடன் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டிருப்பை. இவற்றுக்கு மிகப் பெரிய விமோச்சனம் தற்போது கிடைத்துள்ளது.
தற்போதைய தீர்ப்பின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுவது ஆளுநர்களுக்கு காலக்கெடு விதித்திருப்பது. இதன் மூலம் அதிகபட்சம் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மேல் எந்த ஒரு சட்ட மசோதாவையும் ஆளுநர் கிடப்பில் வைத்திருக்க முடியாது. இதன் காரணமாக மாநில அரசுகள் கொண்டு வரும் சட்ட மசோதாக்கள் இனி காலவரையின்றி கிடப்பில் போடப்படும் நிலை மாற்றப்பட்டுள்ளது.
அனைத்து வகையிலும் பார்க்கும்போது இந்த தீர்ப்பானது, மிகப்பெரிய ஒரு புரட்சிகரமான தீர்ப்பாகவே கருதப்பட வேண்டி உள்ளது. ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மிகப்பெரிய தீர்ப்பை தமிழ்நாடு அரசு வாங்கி கொடுத்திருப்பதை யாரும் மறுக்க முடியாது. இதன் மூலமாக, தமிழ்நாடு, இந்தியாவுக்கே வழிகாட்டி உள்ளதாகவே கருத வேண்டும். மேலும் இந்த தீர்ப்பின் மூலமாக தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினின் செல்வாக்கு அகில இந்திய அளவில் உயர்ந்துள்ளது என்பதும் முக்கியமானது.
10 வருடங்களுக்கு பிறகு.. ஏப்ரல் மாதத்தில் சென்னையில் பலத்த மழை .. தமிழ்நாடு வெதர்மேன்!
தேசிய ஜனநாயக கூட்டணிக்கு நாம் தமிழர் கட்சியும் வர வேண்டும்: சீமானை அழைத்த நயினார் நகேந்திரன்
அதிமுக -பாஜக கூட்டணி மட்டுமே, கூட்டணி ஆட்சி கிடையாது: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி!
முஸ்லிம்கள், இந்து வாரியங்களில் இடம்பெற முடியுமா? .. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார்.. நீதிபதி பி.ஆர். கவாய்.. மே 14ல் பதவியேற்பு
காலை உணவு திட்டம்... உப்புமாவிற்கு பதில் பொங்கலும் சாம்பாரும்... அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு!
யாரு இவங்களா.. அச்சச்சோ பயங்கரமான ஆளாச்சே.. ரகசியம் காப்பதில் கில்லாடிகள் இந்த 5 ராசிக்காரர்கள்!
வருமான வரித்துறை + ராணுவம் + தொல்லியல் துறை + உள்ளூர் மக்கள்... 5 மாதம் நீடித்த புதையல் வேட்டை!
இனி தமிழில் மட்டுமே அரசாணை வெளியீடு.. தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவு..!
{{comments.comment}}