சென்னை: பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) புரபேஷனரி ஆபீசர் உள்ளிட்ட பணிகளுக்கான ஆட்கள் எடுப்பதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
2000 காலி பணியிடங்கள் இருப்பதாகவும், இன்று முதல் (செப்டம்பர்7 ) செப்டம்பர் 27, 2023 வரை இதற்கு விண்ணப்பிக்கலாம் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த பணிக்கான தகுதி மற்றும் விண்ணப்பித்தல்:
எஸ்பிஐ துணி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். பட்டப்படிப்பு இறுதி ஆண்டில் பயிலும் மாணவ மாணவிகளும் இந்த பணிக்காக விண்ணப்பிக்கலாம். விண்ணப்பித்த மாணவர்கள் நேர்முகத் தேர்விற்காக அழைத்தால் அவர்கள் டிசம்பர் 31, 2023 அல்லது அதற்கு முன்பு உள்ள செமஸ்டரில் தேர்ச்சி பெற்ற சான்றிதழை தற்காலிகமாக சமர்ப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பு ஏப்ரல் 1, 2023 தேதியின்படி 21 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
துணை மேலாளர் பதவிக்கான தேர்வானது, முதல்நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு ஆகியவை மூலம் மேற்கொள்ளப்படும். முதன்மை தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள தகுதி பெற்றவர்களாக இருப்பார்கள்.
விண்ணப்பதாரர்கள் தகுதி -1 மற்றும் தகுதி-2 இரண்டிலும் தேர்ச்சி பெற வேண்டும். இரு தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்ற மதிப்பெண்கள் இறுதி பட்டியலில் தகுதி- 3 சேர்க்கப்படும். இதன் அடிப்படையில் தேர்வுகள் நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொது, பொருளாதார ரீதியில் பின் தங்கியிருப்போர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு விண்ணப்பதாரர்களுக்கு ரூபாய் 750 விண்ணப்ப கட்டணமாகும். தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. ஒரு தடவை செலுத்திய விண்ணப்ப கட்டணம் எந்த சூழ்நிலையிலும் திரும்பப் பெற இயலாது.
மேலும் விவரங்களுக்கு:
https://sbi.co.in/web/careers/current-openings
{{comments.comment}}