கொரோனா வைரஸ் தொற்று.. நுரையீரலில் இரண்டு வருடங்கள்.. தங்கியிருக்குமாம்.. புதிய ஆய்வு!

Dec 12, 2023,06:36 PM IST

- மஞ்சுளா தேவி


சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் நுரையீரலில் SARS-CoV-2 வைரஸ் கிட்டத்தட்ட 18 மாதங்கள் வரை நீடித்து இருக்கும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.


உலகையே உலுக்கிய கொரோனா பரவலை யாரும் மறந்திருக்க முடியாது. அலை அலையாக வந்து உலக நாடுகளை புரட்டிப் போட்டு விட்டது கொரோனாவைரஸ். உலககத்தின் இயல்பான வாழ்க்கையில் ஏகப்பட்ட மாறுதல்களை ஏற்படுத்தி விட்டது கொரோனோவைரஸ் பரவல். 


இந்த நிலையில் கொரோனா குறித்த ஆய்வுகள் தொடர்ந்தவண்ணம் உள்ளன. அதில் அவ்வப்போது ஏதாவது புதுத் தகவல் வந்தவண்ணம் உள்ளது. அந்த வகையில் புதிதாக ஒரு தகவல் வந்துள்ளது. அதாவது கொரோனாவைரஸ் பாதிப்புக்குள்ளான ஒருவருக்கு அந்த வைரஸானது, அவரது நுரையீரலில் குறைந்தது 18 மாதங்கள் வரை இருக்கும் என்பதுதான் அந்தப் புதுத் தகவல்.




கோவிட்-19 தொற்றால் சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை எந்த வயதிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக வயதானவர்கள் மற்றும் இதய நோய், நீரிழிவு நோய், சுவாச நோய் , போன்றவர்கள் பாதிக்கப்படும்போது அவர்களுக்கான உடல் நல பாதிப்பு சற்று தீவிரமடைகிறது. தொடர் சிகிச்சையும், தீவிர கவனமும் தேவைப்படுகிறது.


இந்த நிலையில் பாஸ்டியர் இன்ஸ்டியூட், பிரெஞ்சு ஆய்வுக்கழகம், அணுசக்தி  கமிஷன் மற்றும் மாற்று சக்திகளுக்கான கழகம் ஆகியோர்  இணைந்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர். அதில் SARS-CoV-2 கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஒருவருக்கு, அது  18 மாதங்கள் வரை அவரது நுரையீரலில் தங்கியிருக்கும். இவற்றை ஆரம்பத்தில் நாம் கண்டறிந்தாலும்  கூட பின்னர் நமது சோதனைகளிலிருந்து தப்பி விடும். இருப்பினும் உடலை விட்டு நீங்காமல் இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.


சிலருக்கு இது அப்படியே இருந்து மறைந்து விடுகிறது. சிலருக்கு மீண்டும் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், SARS-CoV-2 வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்கில் நீண்ட காலமாக வீக்கம் ஏற்பட்டிருப்பதை நாங்கள் கவனித்தோம். உடலில் வைரஸ் இருப்பதால் இது போன்று வீக்கம் நீடித்து இருக்கலாம் என சந்தேகப்பட்டோம். இதனால் இந்த விலங்குகளின் உயிரியல் மாதிரிகளை ஆய்வு செய்தோம் . அதில்தான் வைரஸ் இருப்பது உறுதியானது.


கிட்டத்தட்ட எச்ஐவி வைரஸ் போலவே இது செயல்படுகிறது. எச்ஐவி வைரஸும் இப்படித்தான். உடலில் தங்கியிருக்கும். எப்போது வேண்டுமானாலும் பாதிப்பை ஏற்படுத்தும்.   SARS-CoV-2 சிலருக்கு ஆறு மாதம் வரையிலும், சிலருக்கு 18 மாதம் வரையிலும் நுரையீரலில் தங்கியிருப்பது ஆய்வில் தெரிய வந்தது. எந்த வகையான சோதனையிலும் இதை கண்டறிய முடியாத அளவுக்கு அது மறைந்து இருக்கிறது.


அதேசமயம், வீரியம் மிகுந்த  SARS-CoV-2 நோய்த் தொற்று ஏற்பட்டிருப்போருக்குத்தான் இது நீண்ட காலம் உடலில் தங்கியிருக்கிறது. இருப்பினும் ஓமைக்ரான் வகை பாதிப்புக்குள்ளானவர்களுக்கு இது குறைவான காலமே உடலில் தங்கியிருக்கும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

news

ஒரே நாடு ஒரே தேர்தல் சாத்தியமற்றது.. கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்கும்.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

news

மகாத்மா காந்தி பிறந்த மாதத்தில்.. புதிய மதுபானக் கொள்கையை அறிமுகப்படுத்தும் ஆந்திர அரசு!

news

ஐபிஎல் 2025 வருது வருது.. நவம்பரில் வீரர்கள் ஏலம்.. துபாயா, தோஹாவா இல்லாட்டி அபுதாபியா?

news

பெண் உதவியாளரை நாசப்படுத்தியதாக.. அரபி குத்து, காவாலா பாடல் புகழ் ஜானி மாஸ்டர் கைது!

news

சபாஷ் பாஸ்கர்.. மாற்றுத் திறனாளி பயணியிடம் காட்டிய கனிவு.. வேற லெவல் மாற்றத்தில் சென்னை எம்டிசி!

news

வங்கதேசத்துடன் கிரிக்கெட் போட்டி கூடாது.. சென்னையில் போராட்டத்தில் குதித்த இந்து மக்கள் கட்சி

news

என்ன தலைவா.. கடைசியில நீயும் அரசியல்வாதி ஆகிட்டியே?.. விஜய் போட்ட டிவீட்.. கதறும் கட்சிகள்!

news

அதீத பணிச்சுமை.. வீடு திரும்பிய இளம் பெண்.. படுக்கையில் சரிந்து பரிதாப மரணம்!

news

நவராத்திரி விற்பனை கண்காட்சி.. சென்னையில்.. செப்டம்பர் 21 முதல் கோலாகல தொடக்கம்!

அதிகம் பார்க்கும் செய்திகள்