சென்னை: சந்தானமும், நானும் இணைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரொம்ப நாளாகவே இருக்கு. ஒரு கதை சிக்கிருக்கு. மீண்டும் இருவரும் இணையும் வாய்ப்புள்ளது என்று நடிகர் ஆர்யா கூறியிருப்பது சந்தானம் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.
பிப்ரவரி 2ஆம் தேதி வெளியாக இருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் இசை வெளியீட்டு நேற்று சென்னையில் நடைபெற்றது. பீப்பிள் மீடியா ஃபேக்டரி, விஸ்வ பிரசாத் தயாரிப்பில் கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்துள்ள திரைப்படம்தான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’.
விழாவில் ஆர்யாவின் பேச்சு ஹைலைட்டாக இருந்தது.. அவர் பேசும்போது,
“’பாஸ் என்கிற பாஸ்கரன்’ படம் நடிக்கும்போது எனக்கும் சந்தானத்திற்கும் ஒரே கேரவன் தான். அப்போது கேரவனுக்குள்ளேயே சந்தானத்தைப் பார்க்க ரசிகர் ஒருவர் வந்துவிட்டார். அந்த அளவுக்கு சந்தானம் மீது ரசிகர்கள் அன்பாக உள்ளனர். நிச்சயம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ ஹிட்டாகும். இயக்குநர் கார்த்திக்கும் அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளார். இந்தப் படத்தைத் தயாரித்துள்ள விஸ்வா தெலுங்கில் நிறைய ஹிட் படங்களைக் கொடுத்துள்ளார். தமிழில் இந்தப் படமும் அவருக்கு ஹிட் கொடுக்கும்.
65 நாட்கள் ஷூட்டிங் என்றதும் ஹெல்த் டிப்ஸ் எல்லாம் கேட்டார். நானும் சொன்னேன். பிறகு கேட்டால் அவர் மேகா ஆகாஷூடன் ஷெட்டில் ஆடிக்கொண்டிருக்கிறேன் என்றார். அந்த அளவுக்கு ஹெல்த் கான்ஷியஸ் அவருக்கு உண்டு. படத்தில் அனைவரும் சிறப்பாக உழைப்பைக் கொடுத்துள்ளனர்.
நானும் சந்தானமும் இணைந்து அட்வென்ச்சர் ஃபேண்டஸி கதையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் சீக்கிரம் நடிக்க இருக்கிறோம். இதுகுறித்து ரொம்ப நாளாகவே பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போதுதான் நல்ல கதை கிடைத்துள்ளது என்றார் ஆர்யா.
ஆர்யாவும், சந்தானமும் இணைந்து நடித்த பாஸ் என்கிற பாஸ்கரன் அல்டிமேட் காமெடி ஹிட்டாகும். அந்தப் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க ஆர்யா தயாராக இருந்தும் கூட சந்தானம் தயங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் புதிய படத்தில் இருவரும் இணையவுள்ளது புதிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிகழ்ச்சியில், நடிகர் சந்தானம் பேசுகையில், “பீப்பிள் மீடியா ஃபேக்டரி தெலுங்கில் நிறைய படங்கள் செய்திருக்கிறார்கள். தமிழிலும் இரண்டு படங்கள் செய்திருக்கிறார்கள். அதில் முதல் படமாக ‘வடக்குப்பட்டி ராமசாமி’ வெளியாகிறது. 65 நாட்களும் இந்தப் படத்தின் படப்பிடிப்பை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் நேர்த்தியாக செய்து கொடுத்தார்கள்.
என்னை நம்பி இவ்வளவு பெரிய படம் எடுத்துள்ள விஸ்வா சாருக்கு நன்றி. ‘கே.ஜி.எஃப்’ எடுக்கும்போது நூறு கோடி ரூபாய் பட்ஜெட்டிற்கு யஷ் பெரிய ஹீரோவா என்றால் அப்போது இல்லை. ஆனால், அந்தக் கதையை நம்பி அந்தப் படம் எடுத்தார்கள். இதேதான், ‘பாகுபலி’ பிரபாஸூக்கும். அதுபோலதான், இந்தக்கதையை தயார் செய்துவிட்டு நாங்கள் தயாரிப்பாளர்களிடம் சென்றபோது, ‘சந்தானத்துக்கு இவ்வளவு பெரிய பட்ஜெட்டா’ எனப் பலரும் தயங்கினார்கள். ஆனால், இந்தக் கதையை மட்டுமே நம்பி பீப்பிள் மீடியா ஃபேக்டரி விஸ்வா சார் வந்தார்.
எனக்கு இதுதான் பெரிய முதல் பட்ஜெட் படம். கதையை நம்பிய தயாரிப்பாளர்கள் எப்போதுமே தோற்றதில்லை. இந்தப் படம் தயாரிப்பாளருக்கு நிச்சயம் வெற்றிக் கொடுக்கும். கார்த்திக் இந்தக் கதையை நேர்த்தியாக செய்திருக்கிறார். தியேட்டரில் பார்க்கும் போது நிச்சயம் மகிழ்வீர்கள். படம் நீங்கள் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார் சந்தானம்.
நடிகை மேகா ஆகாஷ் பேசுகையில், “எனக்கு இந்த வாய்ப்புக் கொடுத்த பீப்பிள் மீடியா ஃபேக்டரி விஸ்வா சாருக்கும் கிரியேட்டிவ் புரொடியூசர் நட்டி சாருக்கும் நன்றி. படப்பிடிப்பின்போது என் பாட்டி இறந்ததால் எனக்கு அப்போது சிரமமாக இருந்தது. அதை எல்லாம் புரிந்து கொண்டு எனக்கு ஆதரவு கொடுத்தார்கள். நிறைய நடிகர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்தது. இயக்குநர் கார்த்திக் எனக்கு ‘கயல்’ என்ற வலுவான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். நன்றி. சந்தானம் சாருடைய நடிப்புக் குறித்து நான் தனியாக சொல்லத் தேவையில்லை. சிறந்த நடிகர் அவர். பிப்ரவரி 2 அன்று படம் திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தைப் பார்த்துவிட்டு ஆதரவு கொடுங்கள்”.
நடிகர் கூல் சுரேஷ் பேசுகையில் “’வடக்குப்பட்டி ராமசாமி’ எனக்கு குலசாமி. சந்தானம் மூலம்தான் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. இந்தப் படத்திற்குப் பிறகு நடிகராக எனக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும் என இயக்குநர் கார்த்திக் சொன்னார். அந்த அளவுக்கு நல்ல கதாபாத்திரம் கொடுத்த அவருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி” என்று கூறியுள்ளார்.
மக்களே எச்சரிக்கையாக இருங்க.. தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்குமாம்..!
பாஜக கூட்டணியால்.. அதிமுகவிலிருந்து விலகிட்டாரா.. டி. ஜெயக்குமார் தரப்பு சொல்லும் விளக்கம் இதுதான்!
ரஜினிகாந்த் வழிக்கு மாறிய அண்ணாமலை.. பாபா முத்திரையுடன் போஸ்.. ஆன்மீக பயணம்!
மீன் பிடி தடைக் காலம்.. ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை அறிவிப்பு..இன்று நள்ளிரவு முதல் அமல்!
இந்திய சட்ட மேதை அண்ணல் அம்பேத்கரின் 135 வது பிறந்த நாளுக்கு.. கட்சித் தலைவர்கள் வாழ்த்து!
Vallarasu.. வல்லரசு வெளியாகி 25 வருடமாச்சு.. விஜயகாந்தின் அதிரடி ஆட்சி!
பெல்ஜியத்தில் வைத்து சிக்கினார் மெஹுல் சோக்சி.. ரூ. 14,000 கோடி மோசடி செய்த வைர வியாபாரி!
பீம் ஜோதியை ஏன் தடுக்கிறீர்கள்? .. நீங்கள் அம்பேத்கருக்கு எதிரானவரா.. டாக்டர் தமிழிசை கேள்வி!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 14, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
{{comments.comment}}