சந்தானத்தின் அடுத்த அதிரடி.. இந்த முறை  சூப்பர் கமர்ஷியல் பார்முலா!

Oct 15, 2023,10:11 AM IST

- சங்கமித்திரை


சென்னை: சூப்பர் கமர்ஷியல் பார்முலா படம் ஒன்றில் நடிகர் சந்தானம் அடுத்து அசத்தியுள்ளார்.


காமெடியனாக வலம் வந்து ஒரு கலக்கு கலக்கிய சந்தானம் தற்போது ஹீரோவாக மாறி அவ்வப்போது ஏதாவது அதிரடியாக அசத்திக் கொண்டிருக்கிறார். புதிதாக அவர் ஒரு சூப்பர் கமர்ஷியல் படத்தில் நடித்து முடித்துள்ளார் சந்தானம்.




கோபுரம் பிலிம்ஸ் ஜி.என்.அன்புசெழியன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள புதிய படத்தில் சந்தானம் கலக்கியிருக்கிறார். வெள்ளைக்கார துரை, தங்கமகன், மருது, ஆண்டவன் கட்டளை உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து சந்தானம் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் ஒன்றை பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறது கோபுரம் பிலிம்ஸ். 


அனைத்து இளைஞர்களும் ரசித்து கொண்டாடும் விதமாக சந்தானத்தின் கதாபாத்திரம் உருவாகியுள்ளது. மேலும், சந்தானத்தின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் படம் மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. 




சந்தானத்தின் ஜோடியாக பிரியாலயா கதாநாயகியாக நடிக்கிறார். இது அவரது முதல் படமாகும். முக்கிய வேடத்தில் தம்பி ராமையாவும், சுவாரஸ்யமான வேடத்தில்  மறைந்த மனோபாலாவும் நடித்துள்ளனர். இவர்களுடன், முனீஷ்காந்த், விவேக் பிரசன்னா, பால சரவணன், மாறன், கூல் சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.


பல வெற்றி படங்களுக்கு கதை, வசனம் எழுதிய எழிச்சூர் அரவிந்தன் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். டி. இமானின் இசையில் மூன்று பாடல்கள் மிக சிறப்பாக வந்துள்ளன. பாடல் வரிகளை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் முத்தமிழ் எழுதியுள்ளனர். 




பிரமாண்டமான பாடல் காட்சிகளுக்கு நடனம் அமைத்து இயக்கியுள்ளனர் பிருந்தா மற்றும் பாபா பாஸ்கர்.  


சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. முழுவீச்சில் இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டைட்டில், ஃபர்ஸ்ட் லுக் மற்றும் வெளியிடும் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளன.


இது சந்தானம் பாணி நகைச்சுவை மற்றும் கமர்ஷியல் கலந்த சூப்பர் கதையுடன் கூடிய படம் என்று இயக்குநர் நம்பிக்கையோடு சொல்கிறார்


சமீபத்திய செய்திகள்

news

CSK vs KKR.. பர்ஸ்ட் பேட்டிங் மாமே.. கேப்டன் தோனி மாஜிக்குக்காக ரசிகர்கள் வெயிட்டிங்!

news

எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் 2026 தேர்தலில் கூட்டாட்சி அமைப்போம்.. கூட்டணியை அறிவித்தார் அமித்ஷா

news

14க்கு 14 அடி செல்லில்.. அடைத்து வைக்கப்பட்டிருக்கும் தஹவூர் ராணா.. பலத்த பாதுகாப்பு!

news

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம்: ஏப்., 15ம் தேதி முதல் ஜூன் 14ம் தேதி வரை

news

தமிழ்நாடு பாஜக தலைவராகிறார் நயினார் நாகேந்திரன்.. போட்டியின்றி தேர்வாகிறார்!

news

400 ஏக்கர் வனப்பகுதியை அழிக்கும் முடிவை தெலுங்கானா மாநில அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!

news

தமிழகத்தில்‌.. இன்று முதல் 17ஆம் தேதி வரை.. ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருக்கு!

news

விக்கிரவாண்டியை தொடர்ந்து கோவை.. த.வெ.க பூத் ஏஜென்ட் மாநாடு நடத்த முடிவு!

news

குமரி அனந்தன் மறைவு.. தமிழிசைக்கு நேரில் சென்று ஆறுதல் கூறிய மத்திய அமைச்சர் அமித்ஷா!

அதிகம் பார்க்கும் செய்திகள்