சங்கடஹர சதுர்த்தி.. விநாயகரை வழிபட்டால்.. கஷ்டங்கள் நீங்கி.. குடும்பத்தில் சுபிட்சம் பெருகும்!

Mar 17, 2025,01:35 PM IST

விநாயகனே வெவ்வினையைவேரறுக்க வல்லான்

விநாயகனே வேட்கை தணிவிப்பான்

விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாம்

தன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து.


மார்ச் மாதம் 17ஆம் தேதி திங்கட்கிழமை பங்குனி மூன்றாம் நாள் வரும் தேய்பிறை சதுர்த்தி திதி சங்கடஹர சதுர்த்தி ஆகும். ஒவ்வொரு மாதம் பௌர்ணமிக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சதுர்த்தி திதி. இன்று வரும் சதுர்த்தி திதியில் நம் சங்கடங்களை தீர்க்கும் முழுமுதற் கடவுள் ஆன விநாயகரை வழிபாடு செய்து வந்தால் நம் கஷ்டங்கள் நீங்கி, குடும்பத்தில் சுபிட்சம் பெருகும் .சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.




விநாயகர் பெருமானே இன்று மாலை அருகில் உள்ள கோவிலுக்கு சென்று தரிசனம் செய்து வழிபட, வாழ்வில் உயர்வை தந்தருள்வார்.  அனைத்து தடைகளும் நீங்கி வெற்றிகள் கிடைக்கும். அருகிலுள்ள சிவாலயங்கள் ,அம்மன் ஆலயங்களில் உள்ள விநாயகர் சன்னதிகளுக்கு சென்று வழிபட நினைத்தது நிறைவேற்றி தருவார் விநாயகர் பெருமான். கோவிலுக்கு செல்பவர்கள் அபிஷேகப் பொருட்கள் வாங்கிச் செல்லலாம் .பால் ,நெய், மலர்கள் ,அருகம்புல் மாலை  சார்த்துவதும், வெள்ளெருக்கு மாலை  சார்த்துவது விசேஷம்.


வீட்டில் பூஜை அறையில் விளக்கேற்றி விநாயகருக்கு மலர்களால் அலங்கரித்து சர்க்கரை பொங்கல் ,பால் பாயாசம், கேசரி ,கொழுக்கட்டை, சுண்டல் இவற்றில் ஏதேனும் அவரவர்க்கு உகந்தவாறு நெய்வேத்தியமாக வைத்து வழிபடுவது மகத்துவம். அருகம்புல் மாலை சாற்றி விநாயகனே வழிப்பட பிறவிப் பிணி நீங்கி இன்பம் பெருகும். அவ்வையார் அருளிய விநாயகர் அகவல் படிக்கலாம். கணேச காயத்ரி படிக்கலாம். இவை மனதையும் ,புத்தியையும் தெளிவாக வைக்கும். படிக்கும் குழந்தைகள், பொது தேர்வு எழுதும் குழந்தைகளுக்கு விநாயகர் அருள் கிட்டும். அந்த குழந்தைகளின் வீட்டில் உள்ள பெரியவர்கள் விரதமிருந்து வழிபட அவர்களுக்கு வெற்றி நிச்சயம்.


'சங்கட 'என்பது துன்பம், 'ஹர 'என்பது நீங்குதல், சங்கடஹர என்பது சங்கடங்களில் அதாவது துன்பங்களில் இருந்து விடுபடுதல் என்று பொருள். இவ்வாறு சங்கடஹர சதுர்த்தி அன்று வழிபாடு செய்தால் சகல சங்கடங்களையும் தீர்த்து வைப்பார் விநாயகர் பெருமான்.


மேலும் ஆன்மீக தகவலுக்கு இணைந்திருங்கள் தென் தமிழுடன். உங்கள்  ஸ்வர்ணலட்சுமி.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கச்சத்தீவை மீட்க வேண்டும்.. முதல்வர். மு.க.ஸ்டாலின் தனி தீர்மானம்.. ஒரு மனதாக நிறைவேற்றம்!

news

அடுத்தடுத்த என்கவுண்டர்.. அதிரடி காட்டும் தமிழ்நாடு போலீஸ்.. பதற்றத்தில் கிரிமினல்கள்!

news

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி உடல் நலம் பாதிப்பு.. கராச்சி மருத்துவமனையில் அனுமதி

news

கோடை காலத்தை முன்னிட்டு.. சென்னையிலிருந்து.. 206 சிறப்பு விமானங்கள் இயக்கம்..!

news

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி..ஏற்காடு பகுதிகளில் கேம்ப் ஃபயருக்கு தடை..!

news

மகனுங்களா.. இப்படியே வம்பு பண்ணிட்டிருந்தீங்கன்னா.. வச்சார் பாருங்க நித்தியானந்தா ஆப்பு!

news

தமிழ்நாடு பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர வேண்டும்.. கருத்துக் கணிப்பில் பலரும் ஆதரவு!

news

எச்சரிக்கும் கண் மருத்துவர்கள்.. மெட்ராஸ் ஐ பாதிப்பு.. வழக்கத்தை விட 20 சதவீதம் அதிகரிப்பு..!

news

அதிர்ச்சி ரிப்போர்ட்.. பெங்களூரில்.. ஐஸ்கிரீம், குளிர்பானத்தில் கலப்படம் செய்யப்படுவதாக புகார்..!

அதிகம் பார்க்கும் செய்திகள்