சென்னை: நடிகை சனம் ஷெட்டியைத் தெரியாதவர்கள் இருக்க முடியாது. இப்போது அவருக்கு ஒரு குழப்பம் ஏற்பட்டுள்ளதாம்.. உதவுங்கள் ரசிகர்களே என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.
பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர் சனம் ஷெட்டி. தற்போது சென்னையில் வசிக்கிறார். தமிழ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்துள்ளார். 4வது சீசன் பிக் பாஸ் தமிழ் ஷோவில் கலந்து கொண்டு அதன் மூலம் மேலும் பிரபலமானவர். சாப்ட்வேர் என்ஜீனியராக இருந்து நடிகையாக மாறியவர் சனம் ஷெட்டி. 2016ம் ஆண்டு மிஸ் தென்னிந்தியா அழகிப் பட்டத்தையும் வென்றவர். தற்போது பெரிய அளவில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிறார் சனம் ஷெட்டி,. பிக் பாஸ் சமயத்தில் அது தொடர்பான கருத்துக்களை வைப்பார். மற்ற நேரங்களில் சமூகப் பிரச்சினைகள் குறித்தும் கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது திடீரென ஒரு டிவீட் போட்டுள்ளார் சனம் ஷெட்டி. இதற்கு ரசிகர்களிடையே கலவையான கருத்துக்கள் எழுந்துள்ளன. சனம் ஷெட்டி போட்டுள்ள டிவீட் இதுதான்:
அரசியல் கட்சியில் சேர வருமாறு கூறி நிறைய அழைப்புகள் வருகின்றன. நமக்கு செட் ஆகுமான்னு தெரியலையே.. மக்களே நான் சேரலாமா வேண்டாமா.. சொல்லுங்களேன்.. அப்படி சேர்ந்தால், எந்தக் கட்சி எனக்கு செட் ஆகும்னும் சொல்லுங்க என்று கேட்டுள்ளார் சனம் ஷெட்டி. இதையடுத்து கருத்துக்களும், யோசனைகளும் பதில்களும் குவிய ஆரம்பித்து விட்டன.
ஆபர் தருவது எந்தக் கட்சி என்று ஒரு ரசிகர் கேட்டுள்ளார். அதற்குப் பெயரைச் சொல்ல முடியாது என்று பதிலளித்துள்ளார் சனம் ஷெட்டி. நீங்க சேரப் போகும் கட்சிக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று ஒருவர் கலாய்த்துள்ளார்.. அதற்கு சனம் ஷெட்டி, என்னப்பா இப்படிச் சொல்றீங்க என்று நொந்து போய் பதில் போட்டுள்ளார்.
உங்களுக்கு செட் ஆகுமான்னு உங்களுக்கே தெரியாதபோது எங்களுக்கு எப்படித் தெரியும். இந்த அடிப்படை யோசனையே இல்லாததுனால செட் ஆகாது என்று ஒருவர் பிராக்டிகலாக தெரிவித்துள்ளார். உங்களுக்கு தவெகதான் செட் ஆகும் என்று ஒரு விஜய் ரசிகர் வந்து கருத்து தெரிவித்துள்ளார்.
இன்னொருவரோ பிக் பாஸ் அய்யா கட்சி என்று கமல் ஹாசன் கட்சியில் சேர ஐடியா கொடுத்துள்ளார். இப்படி ஆளாளுக்கு ஒரு ஐடியாவைக் கொடுத்துக் கொண்டுள்ளனர். சரி, சனம் ஷெட்டியை இப்படி வேண்டி விரும்பி வாங்கம்மா வாங்க என்று அழைப்பது எந்தக் கட்சின்னு தெரியலையே!
காற்று சுழற்சி காரணமாக.. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் ஏப்ரல் 28 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு..!
போப் ஆண்டவர் பிரான்சிஸ் மறைவையொட்டி.. மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பு.. மத்திய அரசு!
பாரதிதாசன் பிறந்த நாள்... ஒரு வாரத்திற்கு தமிழ் வார விழா கொண்டாட்டம்... முதல்வர் மு.க.ஸ்டாலின்!
சனம் ஷெட்டிக்கு ஒரு குழப்பம்.. நிறைய ஆபர் வருதாம்.. நீங்க ஆலோசனை சொல்லுங்களேன்!
எடப்பாடி பழனிச்சாமி, நயினார் நாகேந்திரன் திடீர் ஆலோசனைக் கூட்டம்.. என்னவாக இருக்கும்..?
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்படும்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்பாடு செய்துள்ள துணைவேந்தர்கள் மாநாடு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
நகையைப் போட்டா.. பதிலுக்கு பணம் வரும்.. சீனாவில் அறிமுகமான கோல்ட் ஏடிஎம்.. சூப்பர்ல!
Today gold price: இதுக்கு ஒரு என்டு கார்டே இல்லையா... 1 கிராம் ரூ.10,000த்தை நெருங்கும் தங்கம் விலை!
{{comments.comment}}