மதுரை வட்டார வழக்கில்.. நறுக்கான வசனங்களுடன்.. சமுத்திரக்கனி ஹீரோவாகும்.. புதிய படம்!

Aug 15, 2024,02:22 PM IST

சென்னை: இயக்குநரும், நடிகருமான சமுத்திர கனி மீண்டும் கதை நாயகனாக அவதாரம் எடுக்கிறார். இன்னும் பெயரிடப்படாத அந்தப் படத்தை ராம்குமார் சுப்பாராமன் இயக்குகிறார். இப்படம் மதுரை பின்புலத்தைக் கொண்ட கதையாகுமாம்.


உதவி இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் இயக்குநராகி, அதன் பின்னர் நடிகராகி அசத்திக் கொண்டிருப்பவர் சமுத்திரக்கனி. வில்லனாகவும், குணச்சித்திர வேடத்திலும் தமிழ், தெலுங்கு என் அதகளம் செய்து கொண்டிருக்கிறார் சமுத்திரக்கனி. வித்தியாசமான வேடமா, கூப்பிடு சமுத்திரக்கனியை என்று சொல்லும் அளவுக்கு விதம் விதமான பாத்திரங்களில் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.




இந்த நிலையில் வித்தியாசமான கதைக்களத்தில் நாயகனாக அவர் மீண்டும் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். முதல் கனவே, அதே நேரம் அதே இடம்,  ஆட்டி" படங்களை தயாரித்தும்  பகிரி, பெட்டி கடை , தமிழ் குடிமகன் ஆகிய மூன்று படங்களை தயாரித்து டைரக்ட் செய்தும் வெளியிட்டவர் இசக்கி கார்வண்ணன். அடுத்து தமது லட்சுமி கிரியேஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் இசக்கி கார்வண்ணன் 7வது படைப்பாக சமுத்திரகனி நடிக்கும் படத்தை தயாரித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படம் தேனி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் உள்ள அழகிய இடங்களில் வளர உள்ளது.


பிரபல முன்னணி கதாநாயகி சமுத்திரகனியின் ஜோடியாக நடிக்கிறார். அவரது பெயரை அறிவிக்காமல் ரகசியமாக வைத்துள்ளனர் படக்குழுவினர். ராம்பிரபு தயாரிப்பு நிர்வாகத்தில் முன்னனி தொழில் நுட்ப கலைஞர்கள் பங்கு பெறும் இதில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்களின் பெயர்களை விரைவில் அறிவிக்க உள்ளார்கள்.




கண்டுபிடி கண்டுபிடி, ஐ.பி.சி. 376 ஆகிய படங்களை இயக்கிய ராம்குமார் சுப்பாராமன் தமது மூன்றாவது படைப்பாக இதை டைரக்ட் செய்து வருகிறார். இந்தப் படம் குறித்து ராம்குமார் கூறுகையில், அநியாயங்கள் எங்கெல்லாம் நடக்கிறதோ அங்கெல்லாம் கதாநாயகன் தீயவர்களை தட்டி கேட்கும் கதைகள் ஆயிரம் வந்துள்ளது. ஆனால் இந்த கதை முற்றிலும் மாறுபட்டது. முழுவதும் வேறுபட்டது.  அநியாயத்தை இவன் எதிர் கொள்வதே சிறப்பாக மட்டுமல்ல மக்களின் கைதட்டலோடு காட்சிகள் நகரும் .


திரில்லும், திகிலும் மட்டுமல்ல மிரட்டலும் சேர்ந்த விறுவிறுப்பான திரைக்கதை அமைத்துள்ளேன். மதுரை வட்டார வழக்கில் "நறுக்"கான வசனம் எழுதி இருக்கிறேன்.  சமுத்திரகனி சார் கதையை நான்கு மணி நேரத்தில் படித்து விட்டு  பாராட்டினார். அதுவே எனக்கு மிகப்பெரிய விருதாக நினைக்கிறேன். தயாரிப்பாளர் இசக்கி கார்வண்ணன் இப்படத்தை டிசம்பருக்குள் ரிலீஸ் செய்யலாம் என்று கூறி இருக்கிறார். படத்தின் டைட்டிலை பிரபல கதாநாயகன் அறிமுகப்படுத்த இருக்கிறார்  என்றார்.

சமீபத்திய செய்திகள்

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

news

நாளும் நல்லதுசெய்யும் முதலமைச்சர் இந்த இரண்டு செயல்களாலும் இன்னும் இன்னும் உயர்கிறார்: வைரமுத்து

news

வந்தோம் போனோம் என்று இருக்க மாட்டோம்.. இஸ்லாமியர்களுக்கு உறுதுணையாக இருப்போம் - தவெக

news

எஸ்ஐ பணியில் சேர ஆசையா?.. தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட சூப்பர் அப்டேட்!

news

சமயபுரம் மாரியம்மன் பச்சை பட்டினி விரதம்.. அம்மனே பக்தர்களுக்காக விரதம் இருக்கும் அதிசயம்!

news

தங்கம் விலை நேற்று புதிய உச்சம்...இன்று சவரனுக்கு ரூ.1,280 குறைவு... அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

தமிழ்நாட்டில் இன்றும் .. 17 மாவட்டங்களில்‌.. கன மழைக்கு வாய்ப்பு.. சென்னை வானிலை ஆய்வு மையம்!

news

உங்கள் வாழ்வில் இருந்து ஒருவரை நீக்கும்போது.. அதன் மதிப்பை உடனடியாக அறிய மாட்டீர்கள்.. செல்வராகவன்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 04, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

அதிகம் பார்க்கும் செய்திகள்