டெல்லி: ஆப்பிள் ஐபோனுக்கு இணையான தொழில் நுட்பத்தில் சாம்சங் கேலக்ஸி எஸ் 24 சீரிஸ் போன்களை அறிமுகம் செய்துள்ளது சாம்சங் நிறுவனம்.
அதுவும் ஏ1 தொழில் நுட்பத்தில் பல புதுமையான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ப்ரீமியம் ஸ்மார்ட் போன் ஆக சாம்சங் கேலக்ஸி எஸ் 24 உள்ளது.
ஆப்பிள் ஐபோன் ஆதிக்கத்திற்கு இணையாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் இந்த போனில் தொலைபேசி அழைப்புகளின் போது 13 மொழிகளில் இரு வழி குரல் மொழிபெயர்ப்பு உட்பட பல்வேறு அம்சங்கள் மேம்பட்ட ஏஐ அம்சங்களை கொண்டுள்ளது.
2023ல் ஆப்பிள் சாம்சங் ஸ்மார்ட் ஃபோன்களின் மாடல்களை மிஞ்சும் வகையில் சாம்சங் கேலக்ஸி எஸ்24 மாடல் சாதனத்தில் ஏஐ செயல்பாடுகளை கொண்டுள்ளன. தனிப்பட்ட தகவல்களை கையாளுவதற்கு மிகவும் பாதுகாப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த ஏ சீரிஸ் போன். 2024 ஆம் ஆண்டில் 5 சதவீத ஸ்மார்ட் போன்கள் மட்டுமே ஏஐ செயல் திறன் கொண்டதாக இருக்கும் என்று கூறப்பட்டிருக்கும் நிலையில், வரும் 2027 ஆம் ஆண்டில் இதன் எண்ணிக்கை 45 சதவீதமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த போன் ஜனவரி 31ஆம் தேதி விற்பனைக்கு வர உள்ளது.
சாம்சங் நிறுவனம் தனது புதிய ஃப்ளாக ஷிப் ப்ரிமியம் ஸ்மார்ட்போன் எஸ் 24 சீரிஸ் மொபைல்களுக்கு ஏழு ஆண்டு செக்யூரிட்டி அப்டேட்டுகளும், ஏழு ஆண்டு ஓ எஸ் அப்டேட்டுகளும் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. தொழில்நுட்ப அம்சங்களை அறிமுகம் செய்யும் சாம்சங், கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இதன் ஜெர்மனி ஜெனரேட்டிவ் ஏஐ மூலம் நிறைய அசத்தலான சிறப்பு அம்சங்களை உருவாக்கியுள்ளது.
இதன் மூலம் நீங்கள் போன் காலில் பேசும் போது வேறு மொழியில் பேசும் நபருடன் எளிதில் உரையாடும் படியாக அவர் மொழியை தேர்வு செய்தால் போதும் நீங்கள் அவருடன் உரையாடலாம். மேலும், நேரடியாக ஒரு நபருடன் பேசும் போதும் உங்களுக்கு தேவையான மொழியை தேர்வு செய்து கலந்துரையாடவும் செய்ய முடியும். இது மட்டும் இன்றி நீங்கள் சேட் செய்யும்போது சாம்சங் கீபோர்டு மூலம் உங்களுக்கு தேவையான மொழியையும் தேர்வு செய்து சேட்டிங்கில் லைவ் ட்ரான்ஸ்லேட் செய்து எளிதாக கலந்துரையாட முடியும்.
மேலும் வீடியோ, புகைப்படம் எடுக்கும் போது சூம் செய்து எடுத்தாலும் தெளிவான பிச்சர் கிளாரிட்டியுடனும் இருக்குமாம். சூப்பர்ல.. இப்ப புரியுதா .. இந்த ஏஐ வருங்காலத்தில் என்னெல்லாம் மாஜிக் பண்ணப் போகுதுன்னு.
Kooran movie.. நாம எத்தனை வழக்கு போடறோம்.. ஒரு நாய் நம்ம மேல கேஸ் போட்டா எப்படி இருக்கும்!
வங்கக் கடல் காற்று சுழற்சி.. தமிழ்நாடு, இலங்கையை நோக்கி நகரக் கூடும்.. வானிலை மையம்
ஏக்கம் (ஒரு பக்க சிறுகதை)
நிக்கோபார் தீவு அருகே.. காற்றழுத்தத் தாழ்வு உருவாக ஆரம்பித்து விட்டது.. தமிழ்நாடு வெதர்மேன்
நவம்பர் 22 - இன்றைய நல்ல நேரம், செய்ய வேண்டிய வழிபாடு
மங்களகரமான வெள்ளிக்கிழமையில் பண மழையில் நனையப் போகும் 2 ராசிக்காரர்கள்
Orange alert: தமிழ்நாட்டில் ஒரிரு இடங்களில் 26 மற்றும் 27 தேதிகளில் மிக கன மழை எச்சரிக்கை!
ஜாமின் கிடைத்ததைத் தொடர்ந்து.. புழல் சிறையிலிருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி
அமெரிக்கா கோர்ட் பிடிவாரண்ட்.. அதானியை உடனடியாக கைது செய்ய வேண்டும்.. ராகுல்காந்தி ஆவேசம்
{{comments.comment}}