கொல்லம்: ஜயப்பன் கோவில் சீசன் தொடங்கியுள்ள நிலையில், கொல்லம் மற்றும் கோட்டயத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
கார்த்திகை மாதம் மாலை அணிந்து நேர்த்தியாகவே விரதம் இருந்து.. வருடா வருடம் கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பன் சீசன் தான் நினைவுக்கு வரும். கார்த்திகை மாதத்தையும் ஐயப்பனையும் பிரிக்க முடியாது. அத்தகைய சீசன் தான் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை கோவில் நடை கடந்த 16ம் தேதியே திறக்கப்பட்டது. முதல் நாளில் இருந்தே ஐயப்பனை காண பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகின்றது. பிற மாநிலங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் கூட்டம் அதிகளவில் வரும் என்பதால் கேரள மாநிலம் கொல்லம் மற்றும் கோட்டயத்துக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே திட்டமிட்டுள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பு:
செகந்திராபாத்தில் இருந்து கொல்லத்துக்கு டிச 8, ஜன 12, 19 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கும், டிச 24, 31 தேதிகளில் மாலை 4.30 மணிக்கும், ஜன 7-ஆம் தேதி மாலை 4.50 மணிக்கும், ஜன 10, 17-ஆம் தேதிகளில் மாலை 4 மணிக்கும், ஜன14-ஆம் தேதி பிற்பகல் 2.40 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக கொல்லத்தில் இருந்து செகந்திராபாத்துக்கு டிச.9, ஜன.13, ஜன.20 தேதிகளில் இரவு 11 மணிக்கும், டிச.26, ஜன.2, 9, 12, 19, 16 தேதிகளில் நள்ளிரவு 2.30 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் இருந்து கோட்டயத்துக்கு டிச.1, 8, 29, ஜன.12, 19 தேதிகளில் இரவு 10.50 மணிக்கும் டிச.15, 22, ஜன.5 தேதிகளில் மாலை 4.25 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக கோட்டயத்தில் இருந்து விஜயவாடாவுக்கு டிச.3, 10, 17, 24, 31,ஜன.7, 14, 21 தேதிகளில் நள்ளிரவு 1 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. மேலும், ஆந்திர மாநிலம் நா்சாபூரில் இருந்து கோட்டயத்துக்கு டிச.10, 17,24, 31 ஜன.7, 14 தேதிகளிலும், மறுமாா்க்கமாக டிச.11, 18, 25, ஜன.8, 15 தேதிகளிலும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
இந்த ரயில்கள் ரேணிகுண்டா, காட்பாடி,ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா், பாலக்காடு, கோவை, திருச்சூா் வழியாக இயக்கப்படும். இதற்கான பயணச்சீட்டுகளை வெள்ளிக்கிழமை (நவ.24) காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Tamil Nadu rains.. இன்னும் 10 நாட்களுக்கு மழைதான்.. தமிழ்நாடு வெதர்மேன் ஹேப்பி நியூஸ்!
நவீன பாம்பன் கடல் பாலம்.. இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி.. பாலம் கடந்து வந்த பாதை!
அதிபர் டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்காவில் வெடித்தது பெரும் போராட்டம்.. வீதிகளில் இறங்கிய மக்கள்!
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
Chennai Super Kings no more a champion team?.. தொடர் சொதப்பல் + தோல்விகளால்.. ரசிகர்கள் அதிர்ச்சி!
மீண்டும் ஒரு மோசமான தோல்வியை சந்தித்த சென்னை சூப்பர் கிங்ஸ்.. ரசிகர்கள் கடும் அதிருப்தி!
தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கைகளை இலங்கை உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் மோடி இலங்கையில் பேச்சு!
நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்
தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!
{{comments.comment}}