சல்மான் கானுக்கு கொலை மிரட்டல்.. டான் லாரன்ஸ் மீது போலீஸில் புகார்

Mar 20, 2023,11:24 AM IST

மும்பை:  நடிகர் சல்மான் கானுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது. இதையடுத்து சல்மான் கான் சார்பில் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அன்டர்வேர்ல்ட் டான் லாரன்ஸ் பிஷ்னாய் என்பவரது குரூப் மீது போலீஸில் புகார் தரப்பட்டுள்ளது.


பந்திரா காவல் நிலையத்தில் சல்மான் கான் சார்பில் அவரது வழக்கறிஞர் குழு புகாரைக் கொடுத்துள்ளது. இதுகுறித்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 


குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள லாரன்ஸ் தற்போது டெல்லி திஹார்  சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் அவரது குழுவினர் மும்பையில் ஆக்டிவாக உள்ளதாக சொல்லப்படுகிறது. சிறைக்குள் இருந்தபடி தனது கும்பலை லாரன்ஸ் செயல்படுத்தி வருவதாகவும் சொல்கிறார்கள். இந்த லாரன்ஸ்தான், பிரபல பஞ்சாபி மொழிப் பாடகர் சித்து மூஸே வாலாவின் படுகொலையை தனது கும்பல் மூலம் செய்தார் என்பது நினைவிருக்கலாம்.



சனிக்கிழமை பிற்பகலில் சல்மான் கானுக்கு ஒரு இமெயில் வந்துள்ளது. அதில், கனடாவைச் சேர்ந்த கேங்ஸ்டரும், லாரன்ஸின் நெருங்கிய கூட்டாளியுமான  கோல்டி பிரார், சல்மான்கானை சந்திக்க விரும்புவதாக கூறப்பட்டிருந்தது. மேலும் சல்மான் கானுக்கு அதில் மிரட்டலும் விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து பந்த்ரா காவல்நிலையத்தில் சல்மான் கான் குழுவினர் புகார் கொடுத்தனர்.


லாரன்ஸ், சல்மான் கானுக்கு மிரட்டல் விடுப்பது இது புதிதல்ல. ஏற்கனவே 2018ம் ஆண்டும் இதேபோல மிரட்டல் விடுத்துள்ளார். தொடர்ந்து லாரன்ஸ் கும்பல் மிரட்டல் விடுத்து வந்ததால்,  சல்மான் கானுக்கான பாதுகாப்பை மகாராஷ்டிர காவல் துறை ஒய்பிளஸ் ஆக அதிகரித்தது. சல்மான் கான் பல ஆண்டுகளாகவே தனது பாதுகாப்புக்காக தனிக் குழுவை நியமித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது பாடிகார்டாக குர்மீத் சிங் எனப்படும் ஷெரா நிழ���் போல சல்மானை தொடர்ந்து வருகிறார் என்பதும் நினைவிருக்கலாம்.


சமீபத்திய செய்திகள்

news

பாம்பன் பாலத்தை திறந்து வைக்க நாளை வருகிறார்.. பிரதமர் மோடி..பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

news

தர்பூசணி விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்!

news

இலங்கையில் பிரதமர் மோடி.. ஜனாதிபதி மாளிகையில் அணி வகுப்பு மரியாதையுடன் வரவேற்பு..!

news

நீட் தேர்வு.. மாணவ மாணவியரின் தற்கொலைகளுக்கு.. தமிழக அரசு என்ன செய்யப் போகிறது: டாக்டர் ராமதாஸ்

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஏப்ரல் 05, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?

news

தொடர் குறைவில் தங்கம் விலை... மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

news

அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டார்.. சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சதீஷ்குமார்!

news

தமிழ்நாட்டில்.. நேற்று போலவே இன்றும் மழை தொடரும்.. வெதர்மேன் தகவல்!

news

நீட் விவகாரத்தில் ஏப்ரல் 9ல்.. சட்டமன்ற அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம்.. முதல்வர் மு.க ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்