சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழா.. 6 நாள் கோலாகலம்!

Jan 07, 2025,10:41 AM IST

- ஸ்வர்ணலட்சுமி


சேலம் : சேலம் செவ்வாய்பேட்டை தேவாங்கபுரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் ஆலயத்தில் வருடாந்திர திருவிழா ஜனவரி 13ம் தேதி துவங்கி,  தொடர்ந்து 6 நாட்கள் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.


தேவாங்கர் சமூகத்தினரின் குல தெய்வமாக போற்றப்படும் ஸ்ரீ செளடேஸ்வரி அம்மனுக்கு சேலம் செவ்வாய்பேட்டையில் ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இங்கு செளடேஸ்வரி அம்மனுக்கு வீரகுமாரர்கள் அலகு சேவையுடன் திருவிழா நடத்தி, ஆண்டுதோறும் வழிபட்டு வருவது செவ்வாய்பேட்டையில் உள்ள தெலுங்கு தேவாங்க குலத்தினரின் வழக்கமாக உள்ளது. அதன் படி இந்த ஆண்டு ஜனவரி 13ம் தேதி துவங்கி ஜனவரி 18 ம் தேதி வரை ஸ்ரீஇராமலிங்க செளடேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தின் வடக்கு வாசல் முன் அமைந்துள்ள அலங்காரப் பந்தலில் திருவிழா நடைபெற உள்ளது. இதன் நிகழ்ச்சி நிரல் இதோ...


திருவிழா நிகழ்ச்சிகள் விபரம் :




ஜனவரி 13 - காலை 10 மணிக்கு விநாயகர் வழிபாட்டுடன் துவங்கும் இவ்விழாவில் 11 மணிக்கு கங்கணம் கட்டும் நிகழ்வு நடைபெறும்.  அதைத் தொடர்ந்து 12 மணிக்கு ஸ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் ஸ்ரீ அன்னபூரணி சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை நடத்தப்படும்.


ஜனவரி 14 - காலை 8 மணிக்கு சக்தி அழைப்பு  நடைபெறும். தேவஸ்தானம் கிழக்கு வாசல் கோவிந்தன் தெருவில் இருந்து மங்கல இசை முழங்க வீரகுமாரர்கள் அலகு சேவையுடன் சக்தி அழைப்பு நடைபெறும். மாலை 6 மணிக்கு ஸ்ரீ லட்சுமி தாயார் சிம்ம வாகனத்தில், ஸ்ரீ செளடேஸ்வரி அம்மன், ஸ்ரீ சரஸ்வதி அம்மன் ஆகிய முப்பெரும் தேவியர் சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடைபெறும்.




ஜனவரி 15 -  காலை 8 மணிக்கு பண்டாரி மெரமனை தேவஸ்தானம் கிழக்கு வாசல் கோவிந்தன் தெருவில் இருந்து வீரகுமாரர்கள் அலகு சேவையுடன் நடைபெறும். மாலை 6 மணிக்கு ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன், ஸ்ரீ கர்ப்பரக்ஷாம்பிகை அம்மன், ஸ்ரீ நீலாயதாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாராதனை நடைபெறும்.


ஜனவரி 16 - காலை 9 மணிக்கு திருமஞ்சனம், பால்குடம் மெரமனை மங்கல இசை முழங்க, வாணவேடிக்கையுடன் திருமஞ்சன ஊர்வலம் நடைபெறும்.  மாலை 6 மணிக்கு ஸ்ரீ காயத்ரி அம்மன், ஸ்ரீ மூகாம்பிகை அம்மன், ஸ்ரீ பாலதிரிபுர சுந்தரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் காட்சி தருவாள். அந்த சமயத்தில் திருவிளக்கு பூஜை நடைபெறும். 




ஜனவரி 17 - காலை 7 மணிக்கு பானக மெரமனை. 07.30 மணிக்கு ஸ்ரீ ராமலிங்க செளடேஸ்வரி அம்மன் தேவஸ்தானத்தில் இருந்து மஹாஜோதிக்கான புனிதப் பொருட்களை மெரமனையுடன் ஜோதி புறப்படும் இடமான ஸ்ரீ நடராஜர் பஜனை மடத்திற்கு கொண்டு செல்லுதல்.


காலை 10.30 மணிக்கு ஸ்ரீதேவல மகரிஷி சிவபெருமான், பார்வதி, மஹாவிஷ்ணு, பிரம்மா ஆகியோருக்கு ஆடை வழங்கி ஆசி பெறுதல் நிகழ்ச்சி நடைபெறும்.


மாலை 6 மணிக்கு மஹாஜோதி ஸ்ரீ நடராஜர் பஜனை மடத்தில் இருந்து புறப்படும். மங்கல வாத்தியங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க மகளிரணியின் கோலாட்டம், வாணவேடிக்கை மற்றும் வீரகுமாரர்கள் அலகு சேவையுடன் மஹாஜோதி புறப்பாடு நடைபெறும். தேவஸ்தான அர்ச்சகர் கங்காள.திரு.எம்.துரைபாபு ஜோதி எடுத்து செல்ல உள்ளார்.


ஜனவரி 18 - காலை 9 மணிக்கு மஞ்சள் நீர் மெரமனையும், இரவு 7 மணிக்கு தங்க ரத தேரில் சத்தாபரணம் மங்கல இசை முழங்க ஸ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா வரும் வைபவம் நடைபெறும்.




சேலம் செவ்வாய்பேட்டை ஸ்ரீ இராமலிங்க செளடேஸ்வரி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு கடந்த ஒரு மாத காலமாக வீரக்குமாரர்களுக்கு தண்டகப் பதிகம், அழகு சேவை ஆகியவற்றிற்கான பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர். ஜனவரி 13ம் தேதி வரை இந்த பயிற்சி வழங்கப்படும். அதே போல் மஹாஜோதி புறப்பாட்டின் போது பங்கேற்கும் மகளிரணியினருக்கான கோலாட்ட பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழ்நாட்டில் மனுநீதி சோழன் ஆட்சி நடைபெறுகிறது.. காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

news

பொய்யைப் படிக்க வேண்டாம் என்பதால் வெளியேறிப் போயிருக்கலாம்.. ஆளுநருக்கு சீமான் ஆதரவு

news

ஈரோடு கிழக்கு தொகுதி.. திமுகவுக்கா அல்லது காங்கிரசுக்கா? .. காத்திருக்கும் வி.சி. சந்திரகுமார்

news

ஆளும் கட்சிக்கு ஒரு நீதி.. எதிர்க்கட்சிக்கு ஒரு நீதியா? .. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி

news

அதிமுகவைப் பார்த்து நூறு சார் போட்டு கேள்விகள் கேட்க என்னால் முடியும்..முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி

news

தண்டனை (சிறுகதை)

news

Gold rate.. கடந்த 3 நாட்களாக அமைதிகாத்த தங்கம் விலை... இன்று திடீர் உயர்வு...!

news

திமுக போராடினால் வழக்கு.. பாமக போராடினால் கைதா? .. ஆஹா.. நல்லா இருக்கே .. டாக்டர் அன்புமணி

news

ISRO.. கன்னியாகுமரியிலிருந்து.. இன்னொரு இஸ்ரோ தலைவர்.. யார் இந்த வி. நாராயணன்?

அதிகம் பார்க்கும் செய்திகள்