சேலம்: சேலத்தில் 35 வயதேயான உடற்பயிற்சிக் கூட பயிற்சியாளர் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். உடற்பயிற்சியை முடித்து விட்டு குளிக்கப் போனவர், குளிக்கும் இடத்திலேயே பிணமாகியுள்ளார்.
இளம் வயது மரணங்கள் பலரையும் அதிர வைத்து வருகிறது. குறிப்பாக உடற்பயிற்சி செய்யும்போது இறப்போர் சமீப காலமாக அதிகரித்து வருகின்றனர். இப்படித்தான் சேலத்தில் நேற்று ஒரு ஜிம் பயிற்சியாளர் மரணத்தை சந்தித்துள்ளார்.
அவரது பெயர் மகாதிர் முகம்மது. குகை பகுதியில் ஜிம் வைத்து நடத்தி வந்தார். ஞாயிற்றுக்கிழமை மாலை அவர் ஜிம்மில் தீவிரமாக உடற்பயிற்சி செய்துள்ளார். அதன் பின்னர் இரவில் குளிக்கப் போயுள்ளார். அப்போது அவர் பாத்ரூமிலேயே சுருண்டு விழுந்து இறந்து விட்டார். இரவு நெடு நேரமாகியும் முகம்மது வீட்டுக்கு வராததால் அவரது குடும்பத்தினர் ஜிம்முக்குப் போயுள்ளனர். அங்கு பாத்ரூமில் முகம்மது இறந்த நிலையில் கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு போனபோது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக செவ்வாய்ப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முகம்மதுவுக்கு ரத்த அழுத்த பிரச்சினை இருந்துள்ளதாக கூறப்படுகிறது. நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்ததால் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இள வயது மரணங்களுக்கு மாரடைப்பு காரணமா???
இப்படி இளம் வயதில் ஏற்படும் மரணங்களுக்கு மாரடைப்புதான் காரணமா என்பது குறித்து சிவகங்கையைச் சேர்ந்த பிரபல மருத்துவர் டாக்டர் ஏ.பி. பரூக் அப்துல்லா ஒரு விளக்கம் அளித்து தனது முகநூலில் பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
முதலில் மாரடைப்பு மற்றும் இதய முடக்கம்/செயலிழப்பு ஆகியவற்றுக்கான வித்தியாசத்தை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
மாரடைப்பு (MYOCARDIAL INFARCTION) என்பது இதயத்தின் தசைகளுக்கு ரத்த ஓட்டத்தை அளிக்கும் தமனிகளில் திடீர் என அடைப்பு ஏற்படுவது. இதய முடக்கம் / செயலிழப்பு என்பது CARDIAC ARREST இதில் ரத்த நாள அடைப்பு மரணத்திற்கு காரணமன்று.
மாறாக இதயத்தின் நார்மலான துடிப்புக்கான இயங்குவியல் மற்றும் அதற்கு சக்தி தரும் மின்சார சர்க்யூட்டில் ஏற்படும் பிரச்சனையில் நிகழ்வதாகும். பொதுவாக மாரடைப்பு / இதய ரத்த நாள அடைப்பு போன்றவை மிக இளம் வயதில் மிக மிக அரிதான ஒன்று.
எனினும் இளம் வயதில் திடீரென இதயச் செயல் முடக்கம்/ செயலிழப்பு ஏற்பட்டு மரணமடையவே வாய்ப்பு அதிகம்.
இதை SUDDEN DEATH IN YOUNG ADULTS என்கிறோம். அதாவது "சிறார் சிறுமியிடத்தில் ஏற்படும் திடீர் மரணம்" என்று பொருள்.
இதற்கு SUDDEN CARDIAC ARREST காரணமாக இருக்கலாம். "திடீர் இதய செயலிழப்பு" என்பது திடீரென்று இதயத்தின் துடிக்கும் விதத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து அதனால் இதயத்தின் செயல்தன்மை பாதிக்கப்படுவது அல்லது நிற்பது என்று கொள்ளலாம்.
மிக இளம் வயதில் திடீர் இதய செயலிழப்பு நிகழ்வதற்கு காரணங்கள் என்ன?
இதயத்தின் துடிக்கும் விதத்தில் பிரச்சனைகள் இருந்தால் இதயத்தால் முழு செயல்திறனுடன் ரத்தத்தை உடல் முழுமைக்கும் உந்தித் தள்ள இயலாது. இதன் விளைவாக இதயத்தின் தசைகள் அதிக வேலைப்பளுவுக்கு உள்ளாகி தடிமனாகும். இதை
HYPERTROPHIC CARDIOMYOPATHY என்கிறோம்.இன்னும் சிலருக்கு இதயத்தின் துடிப்பு தறிகெட்டு இருக்கும். சராசரியாக துடிக்கும் விகிதத்தை விட அதிகமாகத் துடிக்கும். இது அந்த இதயத்தில் உள்ளார்ந்த துடிக்கும் திறனில் ( CARDIAC RHYTHM) பாதிப்பை உண்டாக்கும்.
Congenital Long QT Syndrome பிறவியிலேயே ஏற்படும் இதய துடிப்பில் வரும் பிரச்சனை இது. அல்லது ACQUIRED LONG QT SYNDROME
இது இதயத்தில் ஏற்பட்டுள்ள வேறு பிரச்சனைகளால் அல்லது உட்கொள்ளும் சில மருந்துகளால் ஏற்படலாம். BRUGADA SYNDROME ( ப்ருகடா சிண்ட்ரோம்) WOLFE PARKINSON WHITE SYNDROME (வுல்ஃப் பார்கின்சன் வொய்ட் சிண்ட்ரோம் ) ARVC ( ARRHYTHMOGENIC RIGHT VENTRICULAR CARDIOMYOPATHY) மார்பு பகுதியில் ஏற்படும் பலத்த காயம் ( BLUNT CHEST INJURY) திடீரென விளையாடும் போதோ அல்லது சாலை விபத்திலோ மார்பு பகுதியில் பலத்த காயம் ஏற்படும் போது இதயம் திடீரென செயலிழந்து விடும் இதை COMMOTIO CORDIS (கொமோசியோ கார்டிஸ்) என்கிறோம்.
இவையன்றி இதயத்தின் அறைகளில் ஓட்டைகள் / இதயத்தின் அறைகளில் தேவையற்ற இணைப்புகள் போன்ற பிறவியிலேயே தோன்றும் பிரச்சனைகளாலும் இதய செயலிழப்பு ஏற்படலாம். இதைப்படித்த உடன் மேற்சொன்ன பிரச்சனைகள் நமது பிள்ளைக்கும் இருக்குமோ என்ற அச்சம் தேவையில்லை காரணம் மேற்சொன்ன பிரச்சனைகள் மிக மிக அரிதானவை. ஆயினும் சில இதயம் சார்ந்த அறிகுறிகள் குறித்த நாம் விழிப்புணர்வுடன் இருப்பது இது போன்ற இதயம் சார்ந்த பிரச்சனைகளை கண்டுகொண்டு முறையான சிகிச்சை எடுத்து மரணத்தை தவிர்க்க உதவும்.
விளையாடும் போதோ ஓடும் போதோ உடற்பயிற்சி செய்யும் போதோ தலைசுற்றினால் அல்லது தலை சுற்றி கீழே விழுந்திருந்தால் ( SYNCOPE) அது இதய செயல்திறன் பிரச்சனையாக இருக்கலாம். - மூச்சுத்திணறல்( SHORTNESS OF BREATH), அதிலும் உடற்பயிற்சி செய்யும் போது அதிகமான மூச்சுத் திணறல் ஏற்படுவது. கவனிக்க - உடல் பருமன் இருக்கும் சிறார்கள் / ஆஸ்துமா போன்ற நுரையீரல் சார்ந்த பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு மூச்சுத்திணறல் வரலாம். எனினும் மருத்துவரை சந்திக்கும் போது மெய்யான காரணம் தெரியவரும்.
குடும்பத்தில் ஏற்கனவே இள வயது மரணங்கள் ஏற்பட்டிருக்கிறதா ? அப்படி ஏற்பட்டிருந்தால் இன்னும் அதிக கவனம் தேவை.
இதயம் சார்ந்த பிரச்சனைகள் முன்னமே கண்டறியப்பட்டால் அதீத உடல் பயிற்சியை தவிர்க்கலாம். இதயத்தின் துடிக்கும் விதத்தை சீராக வைத்திருக்கும் மாத்திரைகள் மருந்துகளை முறையாக உட்கொண்டு வரலாம். இதயத்தின் அறைகளில் ஓட்டை / அறைகளுக்கிடையே ஒழுங்கற்ற இணைப்புகள் இருந்தால் அவற்றை காலத்தே அறுவை சிகிச்சை செய்து சீர் செய்யலாம்.
இதயத்தின் துடிக்கும் விதத்தில் பிரச்சனை இருப்பவர்களுக்கு இதயத்திலேயே பொருத்தப்படும் தானியங்கி இதய துடிப்பு சீராக்கி ( IMPLANTABLE CARDIOVERTER DEFIBRILLATOR) கருவியை பொருத்திக் கொள்ளலாம். ஒருவேளை இதய துடிக்கும் விதத்தில் மாறுபாடு/ ஒழுங்கின்மை தோன்றினால் அதை இந்தக் கருவி தாமாகக் கண்டறிந்து இதயத்துடிப்பை சீர் செய்து விடும்.
ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார் என்று கூற வேண்டுமெனில் இறப்பதற்கு முன்பு அவ்வாறு அடைப்பு ஏற்பட்டதைக் காட்டும் ஈசிஜி மாற்றங்கள், இதயத்தின் தசைகளில் காயம் ஏற்பட்டிருப்பதைக் காட்டும் நொதிகள் ( ட்ரோபோனின்) ஆகியவை அதிகரித்தல் ஆகியவை பார்க்கப்பட்டிருக்க வேண்டும். மேற்கூறியவை பார்க்கப்படாமல் ஒருவர் திடீரென இறந்து விட்டால் அவர் "இதய ரத்த நாள அடைப்பு ஏற்பட்டு தான் இறந்தார்" என்பதை இறந்த பிறகு செய்யும் பிரேதக்கூறாய்வுக்குப் பின்பு மட்டுமே உறுதி செய்ய முடியும்.
பிரேதக்கூறாய்வில் இதயத்தின் தமனிகளில் அடைப்பு ஏற்பட்டதைக் காண முடியும். அதுவரை அவருக்கு ஏற்பட்டது மாரடைப்பு என்பதை உறுதி படக் கூறிவிட இயலாது. காரணம் கண்டறியப்படாத இதய செயல் முடக்கம் (CARDIAC ARREST ) என்றே அதைக் கூற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
Short Film.. கடற்கரை .. வாழ்க்கையின் வலிகளை எளிமையாக சொல்லும் அழகான குறும்படம்!
Lunch box recipe : ரத்த சோகையை ஓட ஓட விரட்டும் சூப்பரான கோங்கூரா தொக்கு
இந்தி மயமான எல்ஐசி இணையதளம்.. முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்
ஜாலி ஓ ஜிம்கானா.. இது சிரிப்பூட்டி மகிழ வைக்கும் கமர்ஷியல் என்டர்டெய்னர்.. மடோனா ஹேப்பி அண்ணாச்சி!
ஜிம்மில் தீவிர உடற்பயிற்சி.. சேலம் டிரெய்னருக்கு நேர்ந்த பரிதாபம்.. இளம் வயது மாரடைப்பு என்ன காரணம்?
More Rains on the way: நவ. 23ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகிறது.. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி!
ஹமாரா எல்ஐசி ஹே.. பூரா இந்தி ஹே.. முற்றிலும் இந்தி பேசும் தளமாக மாறிய எல்ஐசி!
கத்திக்குத்துக்குள்ளாகி குணமடைந்த .. கிண்டி மருத்துவமனை டாக்டர் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்!
நயன்தாராவை விடுங்க பாஸ்.. இட்லி கடை டீமுடன்.. பாங்காக் பறக்கப் போகும் தனுஷ்
{{comments.comment}}