தஞ்சாவூர்: உலக நலன் வேண்டி தஞ்சாவூரில் உள்ள கரந்தை தமிழ்ச் சங்கப் பெருமன்றத்தில் திருமுறைப் பாராயணம் மற்றும் சைவசமய செந்தமிழ் எழுச்சிப் பெருவிழா நடைபெறவுள்ளது.
டிசம்பர் 28 மற்றும் 29 ஆகிய இரு நாட்கள் நடைபெறவுள்ள இந்த விழாவில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
தெய்வத்தமிழிசை அறிஞர் திருமுறைக் கலைக்களஞ்சியம் சைவசமயப் புரட்சியாளர் உள்ளிட்ட சிறப்புப் பட்டங்களைப் பெற்றவரான முனைவர் திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர் தலைமையிலான தஞ்சாவூர் திருநெறிய தமிழ் சைவசமய பாதுகாப்புப் பேரவை இதற்கான ஏற்பாட்டை செய்துள்ளது.
டிசம்பர் 28ம் தேதி சனிக்கிழமை காலை 7.45 மணிக்கு விழாவினை, திருவிளக்கேற்றி வைத்து தமிழ்நாடு பாஜக பொதுச் செயலாளர் கருப்பு எம். முருகானந்தம் தொடங்கி வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியில், கரந்தைத் தமிழ்ச் சங்கத்தின் தாளாளர் இராம.சுந்தரவதனம், தமிழ்நாடு சிவசேனா செயல் தலைவர் பாவை க.சசிகுமார் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சனிக்கிழமை நடைபெறும் நிகழ்வுகள்
காலை 8 மணி - தமிழகத்தின் மூத்த ஓதுவார் கலைமாமணி திருமுறைக் கலாநிதி திருத்தணி N.சுவாமிநாதன் வழங்கும் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி. இதில் பங்கேற்கும் கலைஞர்கள் - வில்லிசை வேந்தர் திருப்பூர் டி.ஆர். வேங்கடரமணி வயலின்., முழவொலி நாதம் அய்யம்பேட்டை மணிகண்டன் மிருதங்கம், சங்கொலி நாதம் தஞ்சாவூர் பாலமுருகன் முகர்சங்கு.
காலை 10 மணி - திருக்கயிலாய பரம்பரை வேளாக்குறிச்சி 18,ஆவது ஆதீனம் குருமகா சந்நிதானம் சீர்வளர்சீர் சத்திய ஞான மகாதேவ தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலை வகித்து ஆசியுரை வழங்குகிறார்.
விழாவின் சிறப்பு விருந்தினர்களுக்கு திருநெறிய தமிழ் சைவசமய பாதுகாப்புப் பேரவை பேரியக்கம் மூலம் அவரவர்கள் பணிசார்ந்த உயரிய விருதுகள் வழங்கப்படும். வேளாக்குறிச்சி ஆதீனம் இதை வழங்குவார்.
விருதினைப் பெறுவோர்கள்
1. கரந்தைத் தமிழ்ச்சங்கத் தாளாளர், நிர்வாகி, இராம.சுந்தரவதனம் அவர்களது சீரிய சமுதாயத் தொண்டினைப் பாராட்டி, "சிறந்த சமூக சேவகர்" என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.
2. கலைமாமணி திருத்தணி N.சுவாமிநாதன் அவர்களுக்கு அவரது திருமுறை இசை அனுபவத்தை பாராட்டி, சிறந்த பண்ணிசை வித்தகர் என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.
3. திருவில்லிபுத்தூர் சிவ.வெ.மோகனசுந்தரம் அவர்களின் சைவத்தமிழ்த் தொண்டினைப் பாராட்டி, சிறந்த செந்தமிழ் அடிகளார் என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.
4. திருப்பூர் டி.ஆர்.வேங்கடரமணி அவர்களின் நீண்டகால வயலின் இசை அனுபவத்தினைப் பாராட்டி, சிறந்த வில்லிசை வேந்தர் என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.
5. சென்னை சைவசித்தாந்தி சிவத்திரு.ர.பிரகாஷ் அவர்களின் மொழி ஆய்வினைப் பாராட்டி, சிறந்த மொழி ஆய்வறிஞர் என்ற உயரிய விருது வழங்கப்படுகிறது.
6. தஞ்சாவூர் கரந்தை உமாமகேசுவர மேனிலைப்பள்ளி அ.சதாசிவம் பட்டதாரி கணித ஆசிரியர் அவர்களின் சமூகத் தொண்டினைப் பாராட்டி சிறந்த சமூக ஆர்வலர் என்ற உயரிய விருதினை வழங்கப்படுகிறது.
7. திருமுதுகுன்றம் சிவ.த.கார்த்திகைராஜா அவர்களின் சீரிய சிவத்தொண்டினைப் பாராட்டி, சிறந்த சிவநெறித்தொண்டர்" என்ற உயரிய விருது வழங்கப்படும்.
சிறப்புப் பட்டிமன்றம்
28-12-2024 சனிக்கிழமை முற்பகல் 11.00 மணி அளவில், விழாவின் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறும். ஒரு மனிதனின் இப்பிறவி நிலையினை தீர்மானிப்பது என்பது அவனது விதியே? அல்லது அவனது மதியே? என்ற சீரிய தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறும்.
இச்சிறப்புப் பட்டிமன்றத்தின் நடுவராக முனைவர் திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர் செயல்படுவார். விதியே என்ற தலைப்பின் அணித்தலைவராக, தஞ்சைப் பெருவுடையார்கோயில் ஓதுவார் சிவநேசன் பங்கேற்கிறார். மதியே என்ற தலைப்பின் அணித்தலைவராக காஞ்சிபுரம் திருஞான.கதிர்வேல் சுப்பிரமணியம் ஓதுவார் பங்கேற்கிறார்.
விதியே என்ற அணியின் கீழ் கரந்தை உமாமகேசுவர மேனிலைப்பள்ளியைச் சேர்ந்த கணித ஆசிரியர் அ.சதாசிவம் கணித ஆசிரியர், தமிழ் ஆசிரியை மெ.மலர்விழி, தமிழ் ஆசிரியை ஜெ.சங்கீதா ஆகியோர் பேசுவார்கள்.
மதியே என்ற அணியின் கீழ் தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரியைச் சேர்ந்த தமிழ்த்துறை உதவிப் பேராசிரியைகள் முனைவர் சா.கிருத்திகா, முனைவர் கோ.மாணிக்கவதி, முனைவர் அ.சுகன்யா ஆகியோர் கலந்து கொள்வார்கள்.
28ம் தேதி சனிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு ஐந்தெழுத்திற்கும் (Vs) ஸ்ரீ ருத்ரத்திற்கும் என்ன சம்பந்தம் என்ற சீரிய தலைப்பில் சைவசித்தாந்தி சென்னை ர.பிரகாஷ் அவர்களின் சிறப்புரை ஆற்றுவார். 3.30 மணிக்கு தன்மைப் பிறரால் அறியாத தலைவா என்ற சீரிய தலைப்பில் உலக பரம்பொருள் என்பவர் யார்? என்பதை சுட்டிக்காட்டி, முனைவர் திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர் சைவசமய இடிமுழக்கமாக எழுச்சிப் பேருரையாற்றுகிறார்.
மாலை 4.30 மணி அளவில், திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். இதை வழங்குபவர் முனைவர் திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர். இதில், பக்க இசைக் கலைஞர்களாக சுரலயஞானமணி திருப்பூர் வேங்கடரமணி வயலின், முழவொலி நாதம் அய்யம்பேட்டை மணிகண்டன் மிருதங்கம், சங்கொலி நாதம் தஞ்சாவூர் பாலமுருகன் முகர்சங்கு ஆகியோர் பங்கேற்பர்.
28-12-2024 சனிக்கிழமை மாலை 6.00 மணி அளவில், சிறப்புச் சொற்பொழிவு நடைபெறும். இறைமொழியாம் தமிழ்மொழி என்ற சீரிய தலைப்பில், திருவில்லிப்புத்தூர் சிவ.வெ.மோகனசுந்தரம் செந்தமிழ் அடிகளார் உரையாற்றுகிறார்.
28-12-2024 சனிக்கிழமை இரவு 7.00 மணி அளவில், செந்தமிழும் பரம்பொருளும் என்ற சீரிய தலைப்பில் சென்னை, குன்றத்தூர் தமிழ் வேள்விச்சதுரர் சிவத்திரு இரா.கா.நடராசன் உரையாற்றுகிறார். இரவு 7.45 மணி அளவில் இரவு சிற்றுண்டியுடன், முதல்நாள் விழா இனிதே நிறைவுபெறும்.
டிசம்பர் 29ம் தேதி 2ம் நாள் விழா
29-12-2024 ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் நாள் காலை முதல் துவக்க நிகழ்வாக 8.00 மணி அளவில் திருமுறை இசைக்கலாநிதி காஞ்சிபுரம் திருஞான. கதிர்வேல் சுப்பிரமணியம் ஓதுவார் அவர்களின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சி நடைபெறும். இதில், பக்க இசைக் கலைஞர்களாக சுரலயஞானமணி திருப்பூர் வேங்கடரமணி வயலின், முழவொலி நாதம் அய்யம்பேட்டை மணிகண்டன் மிருதங்கம், சங்கொலி நாதம் தஞ்சாவூர் பாலமுருகன் முகர்சங்கு ஆகியோர் பங்கேற்பர்.
காலை மணி 9.30 அளவில், சைவத் திருநெறியும் செந்தழல் மேனியனும் என்ற சீரிய தலைப்பில் சிவத்திரு கோவி. தமிழ்ச்செல்வன் உரையாற்றுகிறார்.
காலை 10.30 மணி அளவில் திருமுறைத் தெளிவே சைவசித்தாந்தம் என்ற சீரிய தலைப்பில் சிவநெறிச் செம்மல் குடந்தை இறைநெறி இமயவன் சிறப்புச் சொற்பொழிவு ஆற்றுகிறார்.
காலை 11.30 மணி அளவில் உலக பரம்பொருள் சிவ அறநெறியைத் தழுவியவர்கள் தமிழர்களே! அல்லது இந்துக்களே! என்ற சீரிய தலைப்பில் சிறப்புப் பட்டிமன்றம் நடைபெறும். இப்பட்டி மன்றத்தின் நடுவராக முனைவர் திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர் அவர்கள் பங்கேற்கிறார்.
இப்பட்டி மன்றத்தில், இந்துக்களே! என்ற அணித்தலைவராக, திருஞான.கதிர்வேல் சுப்பிரமணியம் ஓதுவார் பங்கேற்கிறார். தமிழர்களே என்ற அணித்தலைவராக, தஞ்சைப் பெருவுடையார் கோயில் சிவநேசன் ஓதுவார் பங்கேற்கிறார்.
தமிழர்களே என்ற அணியின் உறுப்பினர்களாக, கோயம்புத்தூர் பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை இணைப் பேராசிரியர் முனைவர் நீ.பகவதியம்மாள், தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியைகள் முனைவர் சி.மகேஸ்வரி, முனைவர் இரா.கோடீஸ்வரி பங்கேற்பார்கள்.
இந்துக்களே என்ற அணியின் உறுப்பினர்களாக தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியைகள் முனைவர் த.கண்ணகி, முனைவர் சு.சொர்ணரேகா மற்றும் பெரம்பலூர் விவேகானந்தர் பவுண்டேசன் அமைப்பைச் சேர்ந்த செ. செல்வபாரதம் கலந்து கொள்வார்கள்.
மதியம் 1,00 மணி அளவில் உணவு இடைவேளை. ஞாயிறு பிற்பகல் 2.30 மணி அளவில், பரிகாரம் என்பது ஒரு பம்மாத்து மாயை என்ற சீரிய தலைப்பில் முனைவர் திருவிடைமருதூர் சிவ.ச.நடராஜதேசிகர் விழா சிறப்புரையாற்றுகிறார்.
பிற்பகல் மணி 3.30 மணி முதல் 4.00 மணி வரை வரலாற்றில் திருஞானசம்பந்தர் என்ற சீரிய தலைப்பில் சேலம் மாவட்டம் ஆத்தூரைச் சேர்ந்த தமிழ்க்கொண்டல் க.பாண்டியன் சொற்பொழிவு வழங்குவார்.
மாலை 4.00 மணி அளவில், திருமுறை இளவல்கள் கோவை. சிவ.தண்டபாணி ஓதுவாரும், தஞ்சாவூர் சிவ.தீபக்ராஜா ஓதுவாரும், சேர்ந்திசையாக திருமுறை இன்னிசையை வழங்குகிறார்கள். இதில், பக்க இசைக் கலைஞர்களாக சுரலயஞானமணி திருப்பூர் வேங்கடரமணி வயலின், முழவொலி நாதம் அய்யம்பேட்டை மணிகண்டன் மிருதங்கம், சங்கொலி நாதம் தஞ்சாவூர் பாலமுருகன் முகர்சங்கு ஆகியோர் பங்கேற்பர்.
மாலை 5.30 மணி அளவில், தஞ்சைப் பெருவுடையார் திருக்கோயில் ஓதுவார் சிவநேசன் அவர்களின் தலைமையில், கரந்தைத் தமிழ்ச்சங்க பள்ளி மாணவ மாணவிகள், மற்றும் கல்லூரி மாணவ மாணவிகள், பங்குபெறும் திருமுறை நிகழ்ச்சி நடைபெறும்.
ஞாயிறு மாலை மணி 6.30 மணி அளவில், விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் அனைத்து அடியார் பெருமக்களோடும் அன்பர்களோடும், கலந்துரையாடல் கருத்துக்கேட்பு நிகழ்வு நடைபெறும்.
29-12-2024 ஞாயிற்றுக்கிழமை இரவு 7.30 மணி அளவில், சிற்றுண்டியுடன், இவ்வாண்டு சைவப்பெருவிழா நிகழ்வு இனிதே நிறைவுபெறும். விழா நிறைவில் நன்றியுரையை பேரியக்கத்தின் செயலாளர் செந்தமிழ் திருமுறைக் காவலர் பாவை.க.சசிகுமார் வழங்குவார்.
விழாவில் கலந்து கொள்ளும் அடியார் பெருமக்கள், மற்றும் அன்பர்களுக்கு, தங்குமிடம், உணவு, அனைத்தும் முறையாகவும், அறுசுவையாகவும், அனைவருக்கும் அகமகிழ்ச்சியோடு இலவசமாக வழங்கப்படும். விழாவில் கலந்துகொண்டு சிறப்பிக்கும் அனைவருக்கும் திருமுறை நூல் இலவசமாக வழங்கப்படும்.
விழா தொடர்பான தொடர்புக்கு:
அயல்நாட்டினர் வாட்ஸ்அப் கால் தொடர்புக்கு: +91 9788065610, +91 9488055610.
உள்நாட்டினர் தொடர்புக்கு: 9788065610, 9488055610.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அச்சச்சோ.. சீனாவிலிருந்து வந்துருச்சு.. இந்தியாவின் முதல் HMPV வைரஸ்.. பெங்களூருவில் கண்டுபிடிப்பு
தமிழ்நாடு முழுவதும்.. திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு.. கலெக்டர்கள் வெளியிட்டனர்
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் - ஜனவரி 06, 2025...யாருக்கு என்ன பலன் காத்திருக்கு?
ஆளுநர் உரைக்கு முன்பு தேசிய கீதம் பாடப்படவில்லை.. வெளிநடப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்
3வது ஆண்டாக சர்ச்சை.. தமிழ்த் தாய் வாழ்த்தால் தொடரும் சலசலப்பு.. வெளிநடப்பு செய்த ஆளுநர்!
சட்டசபைக் கூட்டம்.. தொடங்கிய சிறிது நேரத்திலேயே வெளியேறினார்.. ஆளுநர் ரவி.. அதிமுக அமளி!
CPI (M).. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய மாநிலச் செயலாளராக பெ. சண்முகம் தேர்வு
சிந்து வெளிப் புதிர்.. விடை கண்டுபிடிப்போருக்கு.. 1 மில்லியன் டாலர் பரிசு.. முதல்வர் மு.க.ஸ்டாலின்!
அமெரிக்காவில் வேகமாக பரவும் இன்ஃபுளுயன்சா வைரஸ்.. வழக்கமாக குளிர் காலத்தில் பரவுவதுதானாம்!
Super 👍 Sarvam Siva Shakthi mayam ulagai aalum Ammaiappan thiruvadi saranam
தமிழன் என்று சொல்லடா, தலை நிமிந்து செல்லடா