மும்பை: நடிகர் சைப் அலிகானை கத்தியால் குத்திய சம்பவத்தில் கிட்டத்தட்ட 70 மணி நேர தேடுதலுக்குப் பின்னர் முகம்மது சரிபுல் இஸ்லாம் செசியாத் என்ற நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். மும்பை அருகே உள்ள தானேவில் வைத்து இந்த நபர் பிடிபட்டார். இவர் வங்கதேசத்து நாட்டுக்காரர் என்று தற்போது தெரிய வந்துள்ளது.
சைப் அலிகான் வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர் அவரை சரமாரியாக குத்திக் காயப்படுத்தி விட்டு தப்பிய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு தனிப்படைகளை அமைத்து மும்பை போலீஸார் தீவிரமாக குற்றவாளியைத் தேடி வந்தனர். முதலில் பந்த்ரா ரயில் நிலையம் அருகே ஒருவர் பிடிபட்டதாக தகவல்கள் வெளியாகின. பின்னர் அவருக்கு இதில் தொடர்பில்லை என்று தெரிய வந்தது. அடுத்து கொல்கத்தா செல்லும் ரயிலில் ஒருவர் சிக்கியதாக தகவல்கள் வெளியாகின. அதுவும் பின்னர் தவறானதாக தெரிய வந்தது.
இந்த நிலையில் தற்போது தானே அருகில் ஒரு நபர் சிக்கியுள்ளார். இவர்தான் குற்றவாளி என்று தற்போது போலீஸார் ஊர்ஜிதப்படுத்தியுள்ளனர். இவரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
- பிடிபட்ட நபரின் பெயர் முகம்மது சரிபுல் இஸ்லாம் செசியாத். வங்கதேசத்திலிருந்து சில மாதங்களுக்கு முன்பு சட்டவிரோதமாக மும்பைக்குள் ஊடுறுவியுள்ளார்.
- முகம்மது சரிபுல் இஸ்லாமிடம் முறையான பாஸ்போர்ட் உள்ளிட்ட எதுவுமே இல்லை. அவர் மீது போலீஸார் பாஸ்போர்ட் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- திருடும் நோக்கத்துடன் சைப் அலிகான் வீட்டுக்குள் இந்த நபர் புகுந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. தனது பெயரை பிஜோய் தாஸ் என்று மாற்றிக் கொண்டு கடந்த நான்கு மாதங்களாக பல்வேறு இடங்களில் தங்கி வந்துள்ளார் இவர். ஒரு ஹவுஸ்கீப்பிங் ஏஜென்சியிலும் சேர்ந்து வேலை பார்த்து வந்துள்ளார். திருடுவது இவரது தொழிலாக இருந்துள்ளது.
- சைப் அலிகான் வீட்டின் தீ விபத்து ஏற்பட்டால் வெளியேறும் அவசரப் பாதை வழியாக புகுந்து வீட்டுக்குள் நுழைந்துள்ளார். வீட்டு வேலைக்காரப் பெண் பார்த்து சத்தம் போட்டதைத் தொடர்ந்து சைப் அலிகான் ஓடி வந்துள்ளார். திருடனை சைப் அலிகான் தடுக்க முயன்றபோது அவர் சைப் அலிகானை 6 முறை கத்தியால் படபடவென குத்தி விட்டுத் தப்பி விட்டார்.
- முதலில் பணம் கேட்டு மிரட்டியுள்ளார் சரிபுல். ஆனால் வேலைக்காரப் பெண் ஜூனுவும், சைப் அலிகானும் மறுத்து அவரைப் பிடிக்க முயன்றபோதுதான், அந்த நபர் சைப் அலிகானைத் தாக்கி விட்டார்.
தொடர்ந்து கைதான நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிவில்தான் முழுவிவரமும் வெளியாகும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நாளை முக்கிய அறிவிப்பொன்று வெளியாகிறது.. வருக.. முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்ட சஸ்பென்ஸ் டிவீட்!
Thaipoosam 2025.. மதுரையிலிருந்து பழனிக்கு 2 நாட்கள் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.. தெற்கு ரயில்வே
கிளாம்பாக்கம் பஸ் நிலையத்துக்கா போறீங்க.. அதுக்குன்னே ஆப் வந்தாச்சு மக்களே.. இனி எல்லாமே ஈஸிதான்!
திமுக அரசு அமல்படுத்தும் திட்டங்களை ..எடப்பாடி பழனிச்சாமியால் தாங்கிக்க முடியலை.. முதல்வர் ஸ்டாலின்
திருவள்ளுவரையும், வள்ளலாரையும் களவாட முயற்சிப்பதே திமுகதான்.. வானதி சீனிவாசன் தாக்கு!
பரந்தூருக்கு பதிலாக திருப்போரூரில் விமான நிலையம் அமைக்கலாமே.. டாக்டர் அன்புமணி யோசனை
செல்வப் பெருந்தகை அவர்களே.. இதுதான் காங்கிரஸின் ராஜ தந்திரமா.. கேள்விகளை அடுக்கிய அண்ணாமலை!
பெரியார் குறித்த பேச்சு.. சீமான் வீட்டை முற்றுகையிடும் போராட்டத்தில் குதித்த பெரியாரிய அமைப்பினர்!
கத்தியால் குத்திய நபரை போராடி பாத்ரூமுக்குள் அடைத்து வைத்த சைப் அலிகான்.. தப்பியது எப்படி?
{{comments.comment}}