சபரிமலை மாசி மாத பூஜைக்காக பிப்., 13ம் தேதி நடை திறப்பு

Feb 10, 2024,12:32 PM IST

சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாசி மாத பூஜைக்காக வருகின்ற பிப்., 13 தேதி நடை திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் ஏராளமானோர் வருவர். குறிப்பாக, தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து அதிகமானவர்கள் வருவது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வந்தனர். கடந்த மாதம் நடைபெற்ற மண்டல மகர விளக்கு பூஜை முடிந்து கடந்த மாதம் 21ஆம் தேதியுடன் நடை சாத்தப்பட்டது. இதில் சுமார் 52 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இந்த நிலையில் மாசி மாத பூஜைக்காக  ஐயப்பன் கோவில் நடை வருகின்ற 13-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.




மாசி மாத பூஜைக்காக திறக்கப்படும் நடை 14ஆம் தேதி காலை முதல் 18ம் தேதி வரை 5 நாட்கள் திறந்திருக்கும். அந்த நேரத்தில், சிறப்பு பூஜைகள் வழிபாடுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.வழக்கமான பூஜைகளுக்கு பிறகு வரும் 18ம் தேதி இரவு ஹரிவராசனம் பாடல்  ிைசக்கப்பட்டு கோயில் நடை சாத்தப்படவுள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்திலும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். அதன்படி மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 12-ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. 


மாசி மாத பூஜையை முன்னிட்டு ஐயப்பன் பக்தர்கள் வசதிக்காக கேரள அரசு சார்பில், பத்தனம்திட்டா, கோட்டயம், செங்கன்னூர், திருவனந்தபுரம், கொட்டாரக்கரை, எர்ணாகுளம், பாலக்காடு உட்பட முக்கிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இருந்த கூட்டத்தை போல் இல்லாமல் சற்று குறைவான கூட்டம் வரும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

இறுதி கட்டத்தில் பாஜக, அதிமுக பேச்சுவார்த்தை.. ஏப்., 6ல் பிரதமரை சந்திக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி

news

கார்ல் மார்க்ஸ் திருவுருவச் சிலை அமைக்கும் அரசின் முடிவு வரவேற்கத்தக்கது: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

news

சென்னை மெட்ரோ பணிகளை.. டில்லி மெட்ரோ நிறுவனத்திடம் ஒப்படைப்பது சமூக அநீதி: டாக்டர். ராமதாஸ்!

news

தமிழ்நாட்டில்..17 மாவட்டங்களில்.. இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு..!

news

அண்ணன் ராம்குமாருக்கு உதவ முடியாது .. கைவிரித்த நடிகர் பிரபு!

news

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நாளை தமிழகம் முழுவதும் தவெக போராட்டம்!

news

ரூ.10 கோடி மதிப்பீட்டில்.. 500 புதிய ஆவின் பாலகங்கள் தொடங்கப்படும்‌. சட்டசபையில் அறிவிப்பு!

news

வக்பு சட்ட மசோதா - இஸ்லாமியர்கள் மீதான பாசிச தாக்குதல் : விசிக தலைவர் திருமாவளவன்

news

வளர்பிறை சஷ்டி விரதம்... வியாழக்கிழமை வந்திருப்பது மிக மிக விசேஷமானது!

அதிகம் பார்க்கும் செய்திகள்